Home /News /trend /

இதில் எத்தனை வார்த்தைகள் மறைந்திருக்கிறது ? கண்டுப்பிடிச்சிட்டா புத்திசாலி தான்..

இதில் எத்தனை வார்த்தைகள் மறைந்திருக்கிறது ? கண்டுப்பிடிச்சிட்டா புத்திசாலி தான்..

Optical Illusion : ஆப்டிக்கல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் வார்த்தைகளை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா ?

Optical Illusion : ஆப்டிக்கல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் வார்த்தைகளை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா ?

Optical Illusion : ஆப்டிக்கல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் வார்த்தைகளை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா ?

கண்களையும், மூளையையும் குழப்பும் பல ஆப்டிகல் இல்யூஷன்கள் சமீப காலமாக சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றன. அப்படியொரு ஆப்டிக்கல் இல்யூஷன் ஒன்றை தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷனில் ஸ்டீகனோகிராபி எனப்படும் டெக்னிக் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

ஸ்டீகனோகிராபி என்றால் ஒரு செய்தியை மற்றொரு ஊடகத்திற்குள் மறைக்கும் செயல்முறையைக் குறிக்கிறது. ஆனால் இங்கே செய்தி இல்லை, பல வார்த்தைகள் இந்த ஆப்டிகல் இல்யூஷனில் மறைக்கப்பட்டிருக்கின்றன. ஆம், நீங்கள் கீழ்காணும் ஆப்டிகல் இல்யூஷனில் எளிதில் கண்டறிய முடியாத சில வார்த்தைகள் மறைக்கப்பட்டுள்ளன.

மேலே உள்ள இந்த ஆப்டிகல் இல்யூஷனின் சீரற்ற தோற்றத்தை பார்க்கும் பலரும் மேலே உள்ள நிறைய சிவப்பு கோடுகளை முதலில் பார்ப்பார்கள். ஆனால் மிக கவனமாக பார்த்தால் MORE என்ற வார்த்தை அதில் மறைந்திருப்பது தெரியவரும். இதற்கு அடுத்து காணப்படும் மஞ்சள் பின்னணியில் நிறைய டாட்ஸ்கள் இருப்பதை காண முடிகிறதல்லவா.? ஆனால் இதையும் மிக மிக உன்னிப்பாகக் கவனித்தால் MILE என்ற வார்த்தை மறைந்திருப்பதை இங்கே காணலாம். ஆனால் ஸ்ட்ரைப்ஸ், டாட்ஸ், ஜீப்ரா பிரிண்ட்ஸ்களுக்கு மத்தியில் இந்த ஆப்டிகல் இல்யூஷனை நீங்கள் கவனமாகப் பார்க்க முயற்சிக்கும் போது, ​​அனைத்து டாட்ஸ்களும் மிதப்பது போல் தோன்றும். இந்த சவாலுக்கு மத்தியில் நீங்கள் MILE என்ற வார்த்தையை இங்கு கண்டுபிடிப்பது மிகவும் கடினமான ஒரு விஷயமாக இருக்கும்.

also read : நீங்கள் முதலில் பார்க்கும் விலங்கு எது? உங்கள் பர்சனாலிட்டியை சொல்லும் புகைப்படம்..



இதற்கு அடுத்து முந்தையதை போலவே நிறைய நீல கலர் டாட்ஸ்களை இருப்பதை காண முடிகிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷனுக்கான பதிலை கண்டுபிடிக்க மிகவும் கவனமாக அதை உற்று பாருங்கள். கண்டுபிடிக்க முடிகிறதா.? இன்னும் கவனமாக பாருங்கள். தெரியவில்லை என்றால் உங்களுக்காக பதில் இங்கே கொடுக்கிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் NEAR என்ற வார்த்தையை வெளிப்படுத்தும். அதே போல முந்தைய சிக்கலான ஆப்டிகல் இல்யூஷன்களுடன் ஒப்பிடுகையில், இது மிகவும் எளிமையானது. இந்த ஆப்டிகல் இல்யூஷனின் நடுவே கவனமாக பாருங்கள்.

ஏதாவது வார்த்தை தெரிகிறதா என்று.. உற்று பார்த்தால் DOG என்ற வார்த்தை நடுவில் மறைந்திருப்பது வெளிப்படுத்தப்படும். அதே போல இந்த ஆப்டிகல் இல்யூஷன்களில் கடினமானது மிகவும் கவனமாகத் தேடிய பிறகு, நடுவில் கிடைக்கும் WALK என்ற வார்த்தையை கண்டுபிடிப்பது தான். இந்த ஆப்டிகல் இல்யூஷன்களில் பல சிக்கலான நிலைகள் இருப்பதால் இதை பார்க்கும் 99% பேர் இந்த ஆப்டிகல் இல்யூஷனை புரிந்து கொள்ள தவறுகிறார்கள். இதில் மறைந்திருக்கும் வார்த்தைகளை கஷ்டப்பட்டு கண்டறிந்த சிலர் தங்கள் மகிழ்ச்சியை சோஷியல் மீடியாக்களில் வெளிப்படுத்தி உள்ளார்கள்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Optical Illusion, Trending

அடுத்த செய்தி