இன்றைக்கு இணையத்தில் ஆப்டிகல் இல்யூசன் புகைப்படங்களுக்குப் பஞ்சமே இல்லாத அளவிற்குசோசியல் மீடியா முழுவதும் நெட்டிசன்களுக்கு சவால் விடுகிறது பல்வேறு புகைப்படங்கள். அதிலும் இணையத்தைப் பயனுள்ளதாக உபயோகிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த ஒளியியல் மாயைப் புகைப்படங்கள் மிகவும் உபயோகமாக உள்ளது. குறிப்பிட்ட வினாடிகளுக்குள் நீங்கள் ஒரு புகைப்படத்தில் மறைந்திருக்கும் விஷயங்களைக் கண்டுபிடிக்கிறீர்களோ? அதை வைத்து உங்களின் IQ மற்றும் ஆளுமைத் திறனையும் கண்டறிந்துவிடலாம்.
இதுப்போன்று நெட்டிசன்களுக்கு சவால்விடும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிறது. அப்படி என்ன தான்? இந்த புகைப்படத்தில் உள்ளது என நாமும் இங்கே தெரிந்துக் கொள்வோம். கோடிட்ட சுழலில் பல எண்களைக் காட்டும் ஒளியியல் மாயையில் நீங்கள் எத்தனை எண்களைக் கண்டுபிடிக்கிறீர்களோ? அதை வைத்துத் தான் உங்களின் ஆளுமைத் திறன் மற்றும் ஐக்யூ திறனை நீங்கள் கண்டறிய முடியும். இந்த புகைப்படத்தில் மையமாகப் பார்த்தால், வெள்ளைக்கோடுகள் தொடர்ந்து நகர்வது போல் காட்சியளிக்கிறது. இதனுள் தான் பல எண்கள் ஒளிந்திருக்கிறது. உங்களின் கண்காணிப்புத் திறனை வைத்து இதில் எத்தனை எண்கள் ஒளிந்திருக்கிறது? என நாம் கண்டறிய வேண்டும்
நீங்களும் இந்த சவாலை ஏற்றுக்கொண்டு உங்களின் கண்காணிப்புத்திறனை சோதிக்க தயாராகிவிட்டீர்களா? அப்படினா? கண்டுப்பிடிக்கத் தொடங்குங்கள்.
Test your observation skills:
How many numbers can you see? pic.twitter.com/uXktK0hEmv
— Steve Burns (@SJosephBurns) January 17, 2023
ஆரம்பத்தில் நிச்சயம் அனைவருக்கும் சவாலாகத் தான் இருக்கும். இப்படி தான் இணையத்தில் நிறைய யூசர்கள் மூன்று எண்கள் இருப்பதாகக் கூறினார்கள். அதாவது பார்த்தவுடன் கண்களுக்குத் தெரியும் 5, 2 மற்றும் 8 என்றும் 4,5,2,8 மற்றும் 3 என்று நெட்டிசன்கள் பலர் தெரிவிக்கின்றனர். ஆனால் இது தவறான பதில் ஆகும். பார்த்தவுடன் தெரியும் எண்களை மட்டும் தெரிவிக்கும் நாம், வட்டத்திற்குள் இருக்கும் 3 மற்றும் 9 என்ற எண்ணங்களைப் பார்க்க மறந்துவிடுகிறோம். இதில் எண்களின் சரியான வரிசை என்னவென்றால் 3, 4, 5, 2, 8, 3 மற்றும் 9 ஆகும்.
இதுப்போன்றுஎத்தனை எண்களை நீங்கள் பார்க்க முடியும்?" என்ற தலைப்பில், வெளியான இந்த புகைப்படம் அதிக கவனத்தை ஈர்த்தது மற்றும் மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் 3.7 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஒளியியல் மாயைப் புகைப்படம் தான் இணையத்தை தற்போது ஆக்கிரமித்துள்ளது. இனி மேல் நீங்கள் இணையத்தில் ஒளியியல் மாயைப் புகைப்படங்களைப் பார்த்தீர்கள் என்றால் கண்டுபிடிக்க முயலுங்கள். இதோடு மட்டுமில்லாமல் உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி வைத்து சவால் விடுங்கள். நிச்சயம் இணையத்தைத் தேவையில்லாமல் செலவிடும் நேரம் குறையும் என்பது தான் நிதர்சன உண்மை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.