ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

உங்கள் கண்களே உங்களை ஏமாற்றும்.. மறைந்திருக்கும் நம்பர்களை சரியாக சொல்ல முடியுமா.?

உங்கள் கண்களே உங்களை ஏமாற்றும்.. மறைந்திருக்கும் நம்பர்களை சரியாக சொல்ல முடியுமா.?

ஆப்டிகல் இல்யூஷன்

ஆப்டிகல் இல்யூஷன்

ஆப்டிகல் இல்யூஷன் எப்போதுமே நெட்டிசன்களின் ஃபேவரைட்டாக இருக்கின்றன.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சோஷியல் மீடியாக்களில் வைரலாகும் பல சுவாரசிய விஷயங்கள் பெரும்பாலான நெட்டிசன்களை கவருகின்றன. அந்த வகையில் ஆப்டிகல் இல்யூஷன் எப்போதுமே நெட்டிசன்களின் ஃபேவரைட்டாக இருக்கின்றன.

  சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என வயது வித்தியாசமின்றி அனைவரையும் ஈர்க்கும் புதிர் விளையாட்டுகளாக இருந்து வருகின்றன ஆப்டிகல் இல்யூஷன்கள். கண்களின் பாரவைத்திறன் மற்றும் மூளை திறனுக்கு சவால் விடுக்க கூடிய வகையிலான ஆப்டிகல் இல்யூஷன்கள் சமயத்தில் நெட்டிசன்களை குழப்பத்தில் ஆழ்த்திவிடுகின்றன.

  ஆன்லைன் யூஸர்கள் மத்தியில் விரைவாக வைரலாகிவிடுவதால் புதிது புதிதாக ஆப்டிகல் இல்யூஷன்கள் உருவாக்கப்படுகின்றன அல்லது பழைய ஆப்டிகல் இல்யூஷன்கள் பல நாட்களுக்கு பிறகு மீண்டும் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகின்றன. சமீபத்தில் ஆன்லைனில் வைரலாகி வரும் ஒரு ஆப்டிகல் இல்யூஷன் நெட்டிசன்களை மிகவும் குழப்பி வருகிறது.

  Read More : ஹெல்மெட் சரியில்ல... போலீஸ்க்கு அபராதம் போட்ட போலீஸ் - போக்குவரத்து காவலருக்குக் குவியும் பாராட்டு.

  Benonwine என்ற ட்விட்டர் யூஸர் சமீபத்தில் ஷேர் செய்துள்ள ஆப்டிகல் இல்யூஷன் இமேஜ் ஒன்று ஒரு சில நம்பர்களை கொண்ட பிளாக் & ஒயிட் சர்க்கிளின் இல்யூஷனை காட்டுகிறது. இந்த இல்யூஷனில் காணப்படும் ஜிக்ஜாக் பேட்டர்ன் உள்ளே உள்ள வட்டங்கள் நகர்வதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி அதில் அடங்கி இருக்கும் நம்பர்களை அடையாளம் காண விடாமல் கண்களை ஏமாற்றுகின்றன. இந்த சிக்கலை தாண்டி இந்த இல்யூஷன் இமேஜில் மொத்தம் எத்தனை நம்பர்கள் உள்ளன, அவை என்னென்ன என்பதை நீங்கள் கண்டறிய வேண்டும்.

  மறைக்கப்பட்ட எண்களைக் காட்டும் இந்த பிளாக் & ஒயிட் வட்டத்தின் ஆப்டிகல் இல்யூஷன் இமேஜ் கீழே...

  என்ன மேலே உள்ள இமேஜை பார்த்து விட்டீர்களா.? சில வினாடிகள் உற்று பார்த்தால் தலையை சுற்ற செய்யும் இந்த ஆப்டிகல் இல்யூஷனில் முதலில் மொத்தம் எத்தனை நம்பர்கள் உள்ளன என்று கண்டுபிடித்து விட்டீர்களா.? பெரும்பாலானோரின் விடை 2 அல்லது 3-ஆக இருக்கிறது. இரண்டு அல்லது மூன்று எண்களை மட்டுமே உங்களால் கண்டுபிடிக்க முடிந்தால் மீண்டும் அதே இமேஜை உற்று பாருங்கள். இப்போதும் கண்டுபிடிக்க முடியவில்லையா.!

  சரி, நாங்களே விடையை சொல்கிறோம். உண்மையில் மொத்தம் இந்த இல்யூஷனில் 5 நம்பர்கள் இருக்கின்றன. நடுவில் ஒரு நம்பரும் வலது மற்றும் இடது பக்கத்தில் இரண்டிரண்டு நம்பர்களும் இருக்கின்றன. இப்போது தான் உங்களுக்கு முக்கிய டாஸ்க் இருக்கிறது. மாய்ந்திருப்பது 5 நம்பர்கள் என்று நாங்கள் உங்களுக்கு சொல்லி விட்டோம். அது என்னென்ன நம்பர்கள் என்று நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.. கண்டுபிடித்து விட்டீர்களா.? நீண்ட நேரம் பார்த்து பார்த்து உங்களுக்கு தலையும், கண்களும் சுற்றியிருக்குமே...

  Read More : இந்த படத்தில் இருக்கும் பறவையை ஜீனியஸ் ஒருவரால் தான் கண்டுபிடிக்க முடியும்! உங்களால் முடியுமா?

  இதனை பார்த்த பல நெட்டிசன்கள் 528 ஆகிய 3 நம்பர்கள் தான் தங்கள் கண்களுக்கு புலப்படுவதாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். ஆனால் இதில் மொத்தம் இருப்பது 5 நம்பர்கள் என்பதால் மீதமுள்ள நம்பர்களை நீங்கள் கண்டுபிடித்தாக வேண்டும். உற்று உற்று பார்த்தும் உங்களுக்கு குழப்பம் நீடித்தால் இதோ உங்களுக்கான விடை:

  இந்த ஆப்டிகல் இல்யூஷனில் மறைத்திருக்கும் அந்த நம்பர்கள்: 3452839

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Optical Illusion, Trending, Viral