ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

முடிந்தால் கண்டுப்பிடிங்க! இந்த யானைக்கு பின்னால் மறைந்திருக்கும் 2வது விலங்கு எது தெரியுமா? 

முடிந்தால் கண்டுப்பிடிங்க! இந்த யானைக்கு பின்னால் மறைந்திருக்கும் 2வது விலங்கு எது தெரியுமா? 

ஆப்டிகல் இல்யூஷன்..மூளைக்கு வேலை

ஆப்டிகல் இல்யூஷன்..மூளைக்கு வேலை

Optical Illusion | ஆப்டிகல் இல்யூஷன்களில் மறைந்திருக்கும் விஷயத்தை சரியாக கண்டுபிடிப்பது என்பது, நீங்கள் அந்த போட்டோவை எப்படி பார்க்கிறீர்கள், உணருகிறீர்கள், எவ்வாறு கணிக்கிறீர்கள் என்ற பல வகையான விஷயங்களை அடிப்படையாக கொண்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆப்டிகல் இல்யூஷன்கள் என்ற ஒளியியல் மாயையானது ஒரு பொருள் அல்லது விஷயத்தை நமது மூளை எவ்வாறு உணருகிறது என்பதை அறிய உதவுகிறது. உடல், உடலியல் மற்றும் அறிவாற்றல் மாயைகள் போன்ற பல வகையான ஆப்டிகல் இல்யூஷன்கள் உள்ளன. ஒரு சாதாரண மனிதனின் மூளையால் ஒரு உருவத்தை ஒவ்வொரு கோணத்திலிருந்தும் வித்தியாசமாக உணந்து கொள்ளவோ அல்லது பார்க்கவோ முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல் ஒருவரது சிந்தனை, ஆளுமை குணங்கள் போன்றவற்றை பகுப்பாய்வு செய்யவும் ஆப்டிகல் இல்யூஷன்கள் பயனுள்ளவை என மனோதத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆப்டிகல் இல்யூஷன்களில் மறைந்திருக்கும் விஷயத்தை சரியாக கண்டுபிடிப்பது என்பது, நீங்கள் அந்த போட்டோவை எப்படி பார்க்கிறீர்கள், உணருகிறீர்கள், எவ்வாறு கணிக்கிறீர்கள் என்ற பல வகையான விஷயங்களை அடிப்படையாக கொண்டது. இது நபருக்கு நபர் மாறுபடும், இந்த அவதானிப்பு திறன்கள் நமக்கு சின்ன சின்ன வேலைகளில் கூட, சிறப்பான முடிவுகளை எடுக்க உதவுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் மூளையின் செயல்பாடுகளைப் பற்றி கண்டறியவும் ஆப்டிகல் இல்யூஷன்கள் உதவுவதாக கூறப்படுகிறது. எனவே இன்று நாம் கண்ணுக்கும், மூளைக்கும் வேலை கொடுக்கக்கூடிய ஆப்டிகல் இல்யூஷனைப் பற்றித் தான் பார்க்கப்போகிறோம்.கீழே கொடுக்கப்பட்டுள்ள யானை உருவத்திற்கு பின்புறத்தில் மற்றொரு விலங்கு உள்ளதை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே இன்றைக்கான சவாலாகும். ஆனால் யானை இருக்கும் பண்ணையில் மறைந்திருக்கும் மற்றொரு விலங்குகளை இதுவரை 1% பேர் மட்டுமே கண்டுபிடித்துள்ளனர்.

Read More : கணவனுக்காக சவப்பெட்டி வாங்கி வைத்திருந்த பெண் - இறுதியில் அவர் செய்த ஆச்சரிய செயல்

பிரைட் சைட் தளம் உருவாக்கி, சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ள ஓவியத்தில் யானை ஒன்று மரக்கட்டையை தூக்கிக்கொண்டு செல்வதையும், அதன் பின்னணியில் உள்ள பண்ணையில் சில மரங்களும், வீடு இருப்பதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் இரண்டாவதாக மறைந்திருக்கும் விலங்கை கண்டறிய வேண்டும் என சவால் விடப்பட்டுள்ளது. சுமார் ஒரு சதவீதம் பேர் மட்டுமே கண்டறிந்துள்ள இந்த ஆப்டிகல் இல்யூஷனை தீர்ப்பதன் மூலமாக உங்கள் மூளையின் செயல்திறனை அளவிட முடியும்.

பண்ணையில் யானை மட்டும் தானே தெரிகிறது... வேறு எந்த உயிரினமும் இல்லையே என நீங்கள் நினைக்கலாம். கண்ணையும், மூளையும் நன்றாக தயார்ப்படுத்திக் கொண்டு உற்றுநோக்கினால் இரண்டாவது விலங்கை கண்டுபிடிக்க முடியும். படத்தின் இடது பக்கத்தில் யானையின் வால் இருக்கும் பகுதியைச் சுற்றி நோட்டமிட்டு பாருங்கள்... உங்கள் கண்ணுக்கு ஏதாவது விலங்கு தென்பட வாய்ப்புள்ளது.

மூளைக்கு எந்த அளவுக்கு கஷ்டமான விஷயங்களைக் கொடுத்து யோசிக்க வைக்கிறீர்களோ, அந்த அளவிற்கு புத்தி கூர்மை அதிகரிக்கும் என ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. யானையின் பின்புறம் உள்ள பகுதியில் மறைந்திருக்கும் இரண்டாவது விலங்கின் முகம் குதிரை அல்லது ஒட்டகச்சிவிங்கி போன்றது, ஆனால். சிலருக்கு அது டைனோசரின் முகம் போல் இருப்பதாகவும் கூறுகின்றனர். இப்போது மீண்டும் ஒருமுறை யானையின் பின்புறம் இருக்கும் உருவத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். விடையை கண்டுபிடித்தவர்கள் கமெண்டில் தெரிவியுங்கள்.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Optical Illusion, Trending, Viral