Home /News /trend /

இந்த படத்தில் மறைந்துள்ள பனி கரடியை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?

இந்த படத்தில் மறைந்துள்ள பனி கரடியை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?

Optical illusion | நமது மூளையானது ஒரே நேரத்தில் பல விஷயங்களை நினைத்து கொண்டே இருப்பதால், முன் எப்போதோ பார்த்த ஒன்று நமது ஆழ் மனதில் ஓரமாக இருக்க கூடும்.

Optical illusion | நமது மூளையானது ஒரே நேரத்தில் பல விஷயங்களை நினைத்து கொண்டே இருப்பதால், முன் எப்போதோ பார்த்த ஒன்று நமது ஆழ் மனதில் ஓரமாக இருக்க கூடும்.

Optical illusion | நமது மூளையானது ஒரே நேரத்தில் பல விஷயங்களை நினைத்து கொண்டே இருப்பதால், முன் எப்போதோ பார்த்த ஒன்று நமது ஆழ் மனதில் ஓரமாக இருக்க கூடும்.

நாம் பார்க்க கூடிய விஷயங்கள், பல நேரங்களில் வேறு சிலவற்றை நமக்கு உணர்த்தும். ஒரு நேரத்தில் பார்க்கும் போது அது வேறு ஒன்று போல தோன்றும். அதுவே இன்னொரு முறை பார்க்கும் போது வித்தியசாமாக இருக்கும். இது மனிதர்கள், பொருட்கள், சந்திக்க கூடிய பிரச்சனைகள்... என பல விஷயங்களுக்கும் பொருந்தும்.

இதை தான் ஆப்டிகல் இலுஷன் என்று சொல்வார்கள். தூரத்தில் இருந்து பார்க்கும் போது நமது மூளைக்கு தெரிந்த அந்த உருவம், அருகில் இருக்கும் போது வேறொரு உருவத்தை காட்ட கூடும்.

இது போல நமக்கு தோன்றுவதற்கு சில காரணிகள் உண்டு. நமது மூளையானது ஒரே நேரத்தில் பல விஷயங்களை நினைத்து கொண்டே இருப்பதால், முன் எப்போதோ பார்த்த ஒன்று நமது ஆழ் மனதில் ஓரமாக இருக்க கூடும். எனவே இறந்த காலத்தையும், நிகழ் காலத்தையும் கொண்டு புதிய ஒரு முடிவுக்கு நமது மூளை செயல்படுகிறது. அந்த வகையில், இந்த பதிவில் காட்டப்படும் படத்திலும் ஆப்டிகல் இலுஷன் மறைந்துள்ளது. உங்களுக்கு இதில் பனி கரடியின் படம் தெரிகிறதா என்பதை நன்றாக பார்த்து விட்டு சொல்லுங்கள். இதை வைத்து உங்களை பற்றிய சில விஷயங்களையும் நாம் விரிவாக தெரிந்து கொள்வோம்.



ஆப்டிகல் இலுஷன்

ஆப்டிகல் இலுஷன் என்பதை ஒளியியல் மாயை என்று சொல்வார்கள். இணையத்தில் இது போன்ற ஏராளமான தந்திரமான ஒளியியல் மாயைகள் ஒளிந்திருக்கும். மேலும் நெட்டிசன்கள் இது போன்ற புதிர்களை தீர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். எனவே தான் இந்த வகையான ஆப்டிகல் இலுஷன் படங்கள் மிகவும் வைரலாகி விடுகிறது.

இந்த படத்தில் நிறைய பனிமனிதர்கள் உருவங்கள் காட்டப்படுகின்றன. இன்றைய ஆப்டிகல் இலுஷன் புதிரில், இந்த படத்தில் மறைந்திருக்கும் பனி கரடியை (பாண்டா) கண்டுபிடிக்க வேண்டும். இந்த புகழ்பெற்ற ஒளியியல் மாயை படத்தை, ஹங்கேரிய கலைஞரான கெர்கெலி டுடாஸ் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இப்போது இந்த படத்தை பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.

Read More : பிறரை நீங்கள் நம்புவீர்களா என்பதை வெளிப்படுத்தும் புகைப்படம்.. முதலில் என்ன பார்த்தீர்கள்?


20 நொடிகள்

இந்த படத்தை இணையத்தில் பதிவிட்ட போது பலரும் பலவிதமாக கமெண்ட் செய்தனர். இந்த பனி கரடியின் உருவத்தை அதில் கண்டுபிடிக்க முடியவில்லை என ஏராளமானோர் கருத்து தெரிவித்தனர். அதில் ஒருவர் "நான் ஒரு டிராகன், 2 ஸ்லிப்பர்கள், ஒரு கேன் பாப் ஆகியவற்றை கண்டுபிடித்தேன். ஆனால், பனி கரடி உருவத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. நல்ல முயற்சி தான்" என்று கமெண்ட் செய்துள்ளார். இன்னொருவர் " நான் 15 நிமிடங்கள் தேடியும் எனக்கு இன்னும் அது கிடைக்கவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

இது போன்று பலரும் அந்த பனி கரடி உருவத்தை இந்த படத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை என்றே கூறி இருந்தனர். இவர்களுக்கு மத்தியில் ஒரு சிலர் அதன் உருவத்தை கண்டுபிடித்து காட்டி இருந்தனர். பனி கரடியின் உருவமானது இந்த படத்தில் தான் ஒளிந்துள்ளது.

அதை பார்க்க இந்த படத்தில் வலப்புறம் தேடவும். மேலும் எளிதாக கண்டுபிடிக்க, பச்சை மற்றும் வெள்ளை செக்கர்ஸ் ஸ்கார்ஃப் அணிந்திருக்கும் பனிமனிதனுக்கு அருகில் தேடுங்கள். இல்லையென்றால், எந்த பனி மனிதனுக்கு மூக்கில் கேரட் இல்லை என்று பாருங்கள். இவற்றின் உதவியுடன் எளிதில் அறிந்து கொள்ளலாம். இந்த புதிரை கண்டுபிடித்தவர்களின் மூளை சிறப்பாக வேலை செய்கிறது என்று அர்த்தம்.
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Optical Illusion, Trending, Viral

அடுத்த செய்தி