ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

படத்திற்குள் மறைந்திருக்கும் பாம்பை 30 வினாடிகளுக்குள் கண்டுபிடித்தால் நீங்கள் தான் ஜீனியஸ் - வைரலாகும் ஆப்டிகல் இல்யூசன் ?

படத்திற்குள் மறைந்திருக்கும் பாம்பை 30 வினாடிகளுக்குள் கண்டுபிடித்தால் நீங்கள் தான் ஜீனியஸ் - வைரலாகும் ஆப்டிகல் இல்யூசன் ?

முடிந்தால் கண்டுபுடிங்க..

முடிந்தால் கண்டுபுடிங்க..

Optical Illusion | புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள், நிச்சயம் இது மிகவும் சவாலான விஷயம் தான் என்று கூறியுள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சோசியல் மீடியாக்கள் மக்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றனர் என்று தான் கூற வேண்டும். பொழுதுபோக்கு அம்சங்கள் தொடங்கி இணையத்தில் செய்தி வாசிப்பது, திறமைகளை வெளிக்கொணர்வது என பல விஷயங்களுக்கு மக்கள் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். அதிலும் குறிப்பாக சில மாதங்களாக இணையத்தை ஆப்டிகல் இல்யூசன் புகைப்படங்கள் அனைத்தும் மூளைக்கும், கண்களுக்கும் சவால்விடும் வகையில் அமைந்து வருகிறது.

  ஒரு படத்தில் மறைந்திருக்கும் விலங்குகள் அல்லது இடத்தை எத்தனை வினாடிகளுக்குள் நீங்கள் கண்டுபிடிக்கீறிர்கள்? இந்த புகைப்படத்தில் ஒளிந்திருக்கும் விஷயங்கள் என்னென்ன? என்பதையெல்லாம் 5, 10, வினாடிகள் அல்லது 1நிமிடத்திற்குள் கண்டுபிடித்து விடுங்கள் என்றெல்லாம் நமது மூளைக்கும் கண்களுக்கும் சவால் விடும் புகைப்படங்களை நாம் இணையத்தில் பார்த்திருப்போம்.

  சில நேரங்களில் நாம் எளிதாக நாம் கண்டுபிடித்துவிடுவோம். ஆனால் ஒரு சிலரால் விரைவில் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு கேள்விகள் அமைந்திருக்கும். இதுப்போன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையிலான புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகிறது.

  Read More :13-ம் நம்பர் என்றாலே பயமா? எண் 13ல் மறைந்திருக்கும் ரகசியம் மற்றும் உண்மைகள்!

  படத்திற்குள் மறைந்திருக்கும் பாம்பை 30 வினாடிகளுக்குள் கண்டுபிடியுங்கள்...

  ஒரு பெரிய மரத்தின் கிளையில் இளஞ்சிவப்பு மற்றும் ஊதா நிற கிளிகள் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தில் ஒரு பாம்பு மறைந்திருக்கிறது என்றும் எங்கே உள்ளது? என்பதை நீங்கள் விரைவாக கண்டுபிடித்துவிட்டால் நிச்சயம் நீங்கள் தான் அதிபுத்திசாலி என்று சொல்லக்கூடிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிறது. ஆனால் இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் ஒரு சதவீத மக்களால் மட்டுமே பாம்பை கண்டுப்பிடிக்க முடியும் என்ற அளவில் இந்த புகைப்படம் அமைந்துள்ளது. அந்த புத்திசாலிகளில் நீங்களும் ஒருவராகி விட்டீர்களா? கண்டுபிடித்து விட்டீர்களா? இல்லையென்றால் இதோ உங்களுக்கான டிப்ஸ்…

  டிப்ஸ் 1:

  இணையத்தில் வைரலாகும் புகைப்படத்தை சற்று உற்று நோக்குங்கள். உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லையா? புகைப்படத்தில் இடது புறத்தில் சற்று உன்னிப்பாக கவனியுங்கள். இப்ப கண்டுபிடிச்சுவிட்டாச்சா?நிச்சயம் அனைவரால் எளிதில் கண்டுபிடிக்காத சூழல் தான் அதிகளவில் எழுந்துள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கண்டுபிடிப்பது மிகவும் சவாலான விஷயம்.

  படத்தின் நடுவே இடதுபுறத்தில் சற்று உற்றுப் பாருங்கள், மரத்தின் இலைகளுக்கு இடையில் பச்சை நிற பாம்பு மறைந்துக்கொண்டிருக்கிறது. ஆனால் பார்ப்பதற்கு ஒரு கிளைப் போன்று தான் நமக்கு தெரியவரும்.

  இந்த புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள், நிச்சயம் இது மிகவும் சவாலான விஷயம் தான் என்றும், இதுபோன்ற ஒளியியல் மாயைப் புகைப்படங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் அறிவுத்திறனை சோதிக்கும் வகையில் அமைகிறது என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Optical Illusion, Trending, Viral