ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

பாண்டாக்களுக்கிடையே மறைந்திருக்கும் கால்பந்தை 15 வினாடிக்குள் கண்டுபிடித்தால் நீங்கள் அதிபுத்திசாலி தான்… ட்ரை பண்ணிப்பாருங்க..!

பாண்டாக்களுக்கிடையே மறைந்திருக்கும் கால்பந்தை 15 வினாடிக்குள் கண்டுபிடித்தால் நீங்கள் அதிபுத்திசாலி தான்… ட்ரை பண்ணிப்பாருங்க..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

பெரும்பாலான ஒளியியல் மாயைப் புகைப்படங்கள் நமது மூளையை கசக்கிப் பிழிந்துவிடும் அளவிற்கு அமையும். இதுப்போன்ற புகைப்படங்கள் ஒன்று தான் தற்போது இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களிடம் வைரலாகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆப்டிகல் இல்யூசன் எனப்படும் ஒளியியல் மாயைப் புகைப்படங்கள் தான் இன்றைக்கு பெரும்பாலான இணையவாசிகளின் பொழுதுப் போக்கு அம்சங்களில் ஒன்றாகிவிட்டது. தேவையில்லாமல் நேரத்தைச் செலவு செய்வதை விட புத்திசாலித்தமாக செலவு செய்ய வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் ஒளியியல் மாயைப் புகைப்படங்களில் உங்கள் நேரத்தைச் செலவிடலாம். ஆம் உங்களது கண்களுக்கும், மூளைக்கும் சவால் விடும் வகையிலான இந்த புகைப்படங்களில் மறைந்திருக்கும் விஷயங்களைக் குறிப்பிட்ட வினாடிகளுக்குள் கண்டுபிடித்துவிடும் போது உங்களின் செயல்திறன் எந்தளவிற்கு உள்ளது என்பதை நீங்களே தெரிந்துக் கொள்ளலாம்.

இதோடு சில ஒளியியல் மாயைப் புகைப்படங்கள் உங்களின் குணாதிசயங்களை வெளிப்படுத்தும் வகையிலும் அமைய பெற்றிருக்கும். சில புகைப்படங்களை நாம் பார்த்தவுடனே எளிதில் கண்டுபிடித்து விடும் வகையில் அமைந்திருக்கும். ஆனால் பெரும்பாலான ஒளியியல் மாயைப் புகைப்படங்கள் நமது மூளையை கசக்கிப் பிழிந்துவிடும் அளவிற்கு அமையும். இதுப்போன்ற புகைப்படங்கள் ஒன்று தான் தற்போது இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களிடம் வைரலாகிறது.

இணையத்தில் வைரலாகும் ஆப்டிகல் இல்யூசன்:

தற்போது இணையத்தில் வைரலாகும் புகைப்படங்களில் குட்டி குட்டி கரடிப்பொம்மைகளின் முகங்கள் இருப்பது போன்று நமக்கு முதலில் தெரியவரும். இதற்கிடையில் தான் பந்து ஒன்று மறைந்திருக்கிறது. இதைத் தான் நீங்கள் 15 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்று சவால் விடுத்துள்ளது. பான்டாக்களுக்கிடையே மறைந்திருக்கும் பந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறக்கிவிட்டீர்களா?

முதலில் பார்க்கும் போது உங்களது கண்களுக்கு கரடிப்பொம்மைகள் மட்டும் தான் தெரியவரும். இதனால் கண்டுபிடிப்பது என்பது மிகவும் சவாலான விஷயம். எனவே உங்களது கால்பந்தைக் கண்டறிவதற்கு நீங்கள் பந்துடன் நெருங்கிய ஒன்றைத் தேடுங்கள். இப்போது கண்டுபிடித்து விட்டீர்களா? இல்லையென்றால் இதோ உங்களுக்கான மற்றொரு டிப்ஸ்.

டிப்ஸ்.. நீங்கள் தேடும் பந்து இந்த புகைப்படத்தின் இடது பக்கத்தில் இல்லை. எனவே வலது பக்கத்தில் நீங்கள் பந்து எங்கு உள்ளது? என தேட ஆரம்பிக்கலாம். இன்னமும் இல்லையென்றால் நிச்சயம் உங்களது கண்டறியும் திறன் மிகவும் மோசமாக உள்ளது என்று தான் அர்த்தம்.

இதோ இந்த தேடலுக்கான பதிலை இங்கே அறிந்துக் கொள்ளுங்கள். பான்டாக்களுக்கிடையே தேடும் பந்து ஒன்று வலது புறத்தில் உள்ளது. கீழ் வரிசையின் 3 வரிசையில் பார்க்கவும். இப்போது இரண்டு பாண்டாக்களுக்கு இடையே பந்து ஒளிந்திருக்கிறது. இதை நீங்கள் குறிப்பிட்ட 15 வினாடிகளுக்குள் கண்டுபிடித்திருந்தால் நிச்சயம் நீங்கள் அதிபுத்திசாலி லிஸ்டில் இடம் பிடிப்பதோ.. உங்களின் செயல்திறன் மற்றும் கண்காணிப்புத்திறன் நல்ல செயல்பாட்டில் உள்ளது என அர்த்தம்.

எனவே இதுப்போன்ற ஆப்டிகல் மாயை சோதனையை நீங்கள் தனியாக இருக்கும் போது விளையாடலாம் அல்லது குழுவில் உள்ள நண்பர்களுக்கு அனுப்பி வைத்து, யார் சிறந்த கண்காணிப்பு திறன் கொண்டவர்கள் என்பதைத் தெரிந்துக்கொள்வோம். இதோடு உங்களது குடும்பத்தினருக்கும் அனுப்பி வைத்து பயனுள்ளதாக இணையத்தில் நேரத்தைச் செலவிட தொடங்குங்கள்.

First published:

Tags: Optical Illusion, Trending, Viral