Home /News /trend /

இந்த படத்தில் B என்ற எழுத்து எத்தனை முறை உள்ளது என கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.?

இந்த படத்தில் B என்ற எழுத்து எத்தனை முறை உள்ளது என கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.?

Trending

Trending

Optical illusion | மூளையை குழம்ப வைத்து, கண்களை கலங்க வைக்கும் அளவுக்கு அதிக வேலை கொடுக்கக்கூடிய ஆப்டிகல் இல்யூஷன்கள் பல உள்ளன. தற்போது மனித மூளைக்கு அதிக வேலை கொடுக்கக்கூடிய சவாலான ஆப்டிகல் இல்யூஷனைக் கொண்டு வந்துள்ளோம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
சோசியல் மீடியாவில் கண்ணை கவரும், மூளையை சிந்திக்க தூண்டும் ஆப்டிக்கல் இல்யூஷன்கள் நாளுக்கு நாள் அதிகமாக வெளியாகி வருகின்றன. ஆப்டிகல் இல்யூஷன்களில் மறைந்திருக்கும் விஷயத்தை சரியாக கண்டுபிடிப்பது என்பது, நீங்கள் அந்த போட்டோவை எப்படி பார்க்கிறீர்கள், உணருகிறீர்கள், எவ்வாறு கணிக்கிறீர்கள் என்ற பல வகையான விஷயங்களை அடிப்படையாக கொண்டது. இது நபருக்கு நபர் மாறுபடும், இந்த அவதானிப்பு திறன்கள் நமக்கு சின்ன சின்ன வேலைகளில் கூட, சிறப்பான முடிவுகளை எடுக்க உதவுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

மூளையை குழம்ப வைத்து, கண்களை கலங்க வைக்கும் அளவுக்கு அதிக வேலை கொடுக்கக்கூடிய ஆப்டிகல் இல்யூஷன்கள் பல உள்ளன. தற்போது மனித மூளைக்கு அதிக வேலை கொடுக்கக்கூடிய சவாலான ஆப்டிகல் இல்யூஷனைக் கொண்டு வந்துள்ளோம். 13 வரிசைகளில் அச்சிடப்பட்டுள்ள ஆங்கில எழுத்தனா R -யைக் கொண்டுள்ள இந்த படத்தில் B எழுத்துக்கள் மறைந்துள்ளன. அதனை 12 விநாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும்.

பார்க்க எளிதாக தெரிந்தாலும், பிற ஆப்டிக்கல் இல்யூஷன்களை விடவும் இது சற்றே கடினமானது. ஏனெனின் ஆங்கில கேப்பிட்டல் எழுத்துக்களில் R மற்றும் B வடிவத்திற்கு இடையில் பெரிய வித்தியாசம் கிடையாது. அதுவும் ஒரு படம் முழுவதும் நிறைய R என்ற எழுத்துக்களுக்கு மத்தியில் B-யை மட்டும் கண்டுபிடிப்பது உங்கள் கண்பார்வை திறனுக்கும் மிகப்பெரிய வேலையாகவே இருக்கும்.



இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படத்தை நன்றாக உற்றுப்பார்த்தால், முதல் வரிசையில் மேல் வலது புறத்தில் இருந்து B என்ற எழுத்து இருப்பதைக் காணலாம். இன்னும் தெளிவாக கூற வேண்டும் என்றால் முதல் வரிசையில் 10வது எழுத்தாக B உள்ளதைக் காணலாம். இத்தோடு ஆச்சர்யம் முடிந்துவிடவில்லை, மற்றொரு முறை பார்த்தால் மேல் வலதுபுறத்தில் இருந்து ஐந்தாவது வரியில் B எழுத்து தெரிவதைப் பார்க்கலாம்.

Also Read : பாண்டா கரடிகளுக்கு நடுவே மறைந்திருக்கும் நாய்க்குட்டியை 25 விநாடிகளுக்குள் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.! 

 

இதற்கு முன்னதாக டபிள்யூ வார்த்தைகள் நிறைந்த ஆப்டிகல் இல்யூஷனில் இருந்து M என்ற எழுத்தைக் கண்டுபிடிக்க சவால் விடுக்கப்பட்டது. 20க்கும் மேற்பட்ட வரிகளில் W நிரம்பியிருந்த ஆப்டிக்கல் இல்யூஷனில் இருந்து M என்ற வார்த்தை வெறும் ஒரு சதவீதத்தினர் மட்டுமே கண்டுபிடித்தனர். டிக் டாக் பிரபலமான ஹெக்டிக் நிக் என்பவர் பகிர்ந்த இந்த ஆப்டிகல் இல்யூஷன் சோசியல் மீடியாவில் செம்ம வைரலானது. மேலும் அதில் மொத்தம் நான்கு M என்ற எழுத்து இடம் பெற்றிருந்தது.



இந்த வகையான ஆப்டிக்கல் இல்யூஷன்கள், உங்கள் கண்காணிப்பு திறன் மற்றும் பார்வையை சோதிக்க உதவுகிறது. அற்புதமான உள்ளுணர்வும், படைப்பாற்றலும் கொண்டவர்களால் மட்டுமே இந்த மாதிரியான ஆப்டிக்கல் இல்யூஷன்களை உடனடியாக கண்டுபிடிக்க முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தான் இதுபோன்ற கண்கட்டி வித்தை காட்டும் ஆப்டிகல் இல்யூஷன்கள் பலரையும் திணறடிப்பதோடு, சிலரால் மட்டுமே கண்டுபிடிக்க கூடிய வகையில் உள்ளன.
Published by:Selvi M
First published:

Tags: Optical Illusion, Trending

அடுத்த செய்தி