முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / நத்தைகளுக்கு மத்தியில் மறைந்திருக்கும் ரோஜாவை உங்களால் 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா!

நத்தைகளுக்கு மத்தியில் மறைந்திருக்கும் ரோஜாவை உங்களால் 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா!

ஆப்டிகல் இல்யூஷன்

ஆப்டிகல் இல்யூஷன்

Optical Illusion : இமேஜில் நத்தைகள் மத்தியில் இருக்கும் ரோஜா பூவை உங்களால் எளிமையாக கண்டுப்பிடிக்க முடியுமா?

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மூளைக்கும், கண்களுக்கும் தீவிர வேலை கொடுக்க கூடிய வகையில் இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன்கள் எப்போதுமே சோஷியல் மீடியாவில் அதிக வரவேற்பை பெறுகின்றன. ஆப்டிகல் இல்யூஷன்கள் எப்போதும் தோன்றுவதை அப்படியே காட்டாது. அவை இமேஜ்களில் மறைந்திருக்கும் ரகசியங்கள் மற்றும் புதிர்கள் கண்டறிய சுவாரசியமானவை.

கண்களை மற்றும் மூளையை ஏமாற்றும் ஆப்டிகல் இல்யூஷன்கள் நெட்டிசன்களை குழப்பத்தில் ஆழ்த்தினாலும் அவை தரும் சுவாரசியம் நம்மை விடை கண்டறிய ஊக்கப்படுத்துகின்றன. இமேஜ்களில் மறைந்திருக்கும் விஷயத்தை சரியாக கண்டுபிடிப்பது அல்லது விடுக்கப்பட்டிருக்கும் சவாலுக்கான விடையை கண்டறிவது என்பது, நீங்கள் அந்த இல்யூஷன் இமேஜை எப்படி பார்க்கிறீர்கள், உணர்கிறீர்கள் எவ்வாறு கணிக்கிறீர்கள் என்ற பல விஷயங்களை அடிப்படையாக கொண்டது.

இப்போது நாம் பார்க்க போகும் ஆப்டிகல் இல்யூஷன் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் இது பலரை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. பல நத்தைகள் இருக்கும் இமேஜில் நத்தைகளுக்கு மத்தியில் மறைந்திருக்கும் ரோஜாவை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே இந்த வைரல் இமேஜ் நமக்கு விடுக்கும் சவால். நத்தைகளுக்கு மத்தியில் மறைந்திருக்கும் ரோஜாவை கண்டுபிடிக்க உங்களுக்கு வெறும் 10 வினாடிகள் மட்டுமே நேரம். இப்போது கீழே இந்த சவால் அடங்கிய ஆப்டிகல் இல்யூஷன் இமேஜை பாருங்கள்.

இமேஜில் இருக்கும் சில நத்தைகளின் மேல் இருக்கும் சுருள் பகுதி ரோஜாவை போல சிவப்பட்டு நிறத்தில் இருப்பதால் முதல் பார்வையிலேயே மறைந்திருக்கும் ரோஜாவை அடையாளம் காண்பது கடினம். மறுபுறம் கூர்மையான பார்வை திறன் கொண்ட நபர்கள் மட்டுமே ரோஜாவை குறிப்பிட்ட 10 வினாடிகளுக்குள் அடையாளம் காண முடியும். ஒப்பீட்டளவில் எளிதானது என்றாலும் இந்த குறிப்பிட்ட ஆப்டிகல் இல்யூஷன் மிகவும் சவாலானது என்று பலர் சோஷியல் மீடியாவில் கூறி இருக்கிறார்கள். மேலும் பலர் இதில் மறைந்திருக்கும் ரோஜாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறி உள்ளனர். சரி, நீங்கள் இந்த இல்யூஷன் இமேஜை பார்த்து ரோஜாவை கண்டறிந்து விட்டீர்களா?

Also Read : 64 செல்போன்களில் போக்கிமான் கோ கேம் விளையாடும் 74 வயது முதியவர் - குவியும் பாராட்டுகள்

நீங்கள் இன்னும் மறைந்திருக்கும் ரோஜாவை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் நாங்கள் இங்கே உங்களுக்கு உதவுகிறோம்.  பெரும்பாலானோரால் இந்த இல்யூஷன் இமேஜில் மறைந்திருக்கும் ரோஜாவை கண்டறிய முடியவில்லை. சரி இப்போது விடை எங்கே இருக்கிறது என்பதற்கான க்ளூவை பார்க்கலாம்.

மேலே உள்ள இமேஜின் இடது பக்கத்தில் மட்டும் பார்வையை கூர்மையாக செலுத்துங்கள். உங்களால் இந்த க்ளூ-விற்கு பிறகும் மறைந்திருக்கும் நத்தையை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கீழே பதில் வட்டமிடப்பட்டுள்ள இமேஜை பார்த்து ரோஜா எங்கே இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

First published:

Tags: Game, Optical Illusion, Quiz