முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / இந்த படத்தில் மறைந்திருக்கும் எருமையை உங்களால் 9 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

இந்த படத்தில் மறைந்திருக்கும் எருமையை உங்களால் 9 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion : பச்சை பசேல் என்று இருக்கும் புல்வெளி மற்றும் ஆங்காங்கே இருக்கும் மரங்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் எருமை மாட்டை உங்களால் கண்டுப்பிடிக்க முடியுமா?

Optical illusion : பச்சை பசேல் என்று இருக்கும் புல்வெளி மற்றும் ஆங்காங்கே இருக்கும் மரங்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் எருமை மாட்டை உங்களால் கண்டுப்பிடிக்க முடியுமா?

Optical illusion : பச்சை பசேல் என்று இருக்கும் புல்வெளி மற்றும் ஆங்காங்கே இருக்கும் மரங்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் எருமை மாட்டை உங்களால் கண்டுப்பிடிக்க முடியுமா?

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆப்டிகல் இல்யூஷன்கள் என்பவை நம் கண்கள் மற்றும் மூளையை ஏமாற்ற கூடியவை. மேலும் இவை உங்களுடைய திறன்களை சோதிக்கக்கூடியவை. ஆப்டிகல் இல்யூஷன்கள் நம் அறிவாற்றல் மற்றும் கவனிக்கும் திறன்களை மேம்படுத்தவும் உதவுகின்றன.

கண்களை ஏமாற்றி மூளையை குழப்பும் என்றாலும் நெட்டிசன்களிடையே ஆப்டிகல் இல்யூஷன்கள் அதிக வரவேற்பை பெற காரணம். அவை நம்மை சுறுசுறுப்பாக மற்றும் உற்சாகமாக வைக்கின்றன. பொதுவாக சில ஆப்டிகல் இல்யூஷன்கள் எப்பொழுதும் அப்படியே தோன்றுவதை காட்டாது. ஆப்டிகல் இல்யூஷன் இமேஜ்களில் பல ரகசியங்கள் மற்றும் புதிர்கள் மறைந்திருக்கும். இது விஷுவல் இல்யூஷன் என்றும் குறிப்பிடப்படுகிறது.

நம் நேரத்தை சுவாரசியமாக செலவிட உதவும் ஆப்டிகல் இல்யூஷன்கள் மூளையின் செயல்திறனை மேம்படுத்த உதவுவதோடு கண் பார்வை திறனை பரிசோதிக்க மற்றும் மேம்படுத்தி கொள்ள உதவுபவையாக இருக்கின்றன. ஆப்டிகல் இல்யூஷன்களில் மறைந்திருக்கும் புதிர்களுக்கான பதில் கண்டறிவது பெரும்பாலான நேரங்களில் அவ்வளவு எளிதானது அல்ல. எனினும் அவை தரும் சுவாரசியம் காரணமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல தரப்பினரையும் கவர்ந்துள்ளது.

உங்களின் கண்காணிப்பு திறனை சோதனைக்கு உட்படுத்தும் ஒரு ஆப்டிகல் இல்யூஷன் இமேஜை இப்போது பார்க்கலாம். கீழே நீங்கள் பார்க்க போகும் புல்வெளி நிறைந்த ஆப்டிகல் இல்யூஷன் இமேஜில் ஒரு எருமை மாடு இருக்கிறது. ஆனால் பார்த்தவுடன் அந்த மாடு கண்களுக்கு தெரியாது. மறைந்திருக்கும் 1 எருமை மாட்டை 9 வினாடிகளுக்குள் கண்டறிய வேண்டும் என்பதே உங்களுக்கு விடுக்கப்படும் சவால். கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் இமேஜை பார்த்து மறைந்திருக்கும் எருமையை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்.

பச்சை பசேல் என்று இருக்கும் புல்வெளி மற்றும் ஆங்காங்கே இருக்கும் மரங்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் எருமை மாட்டை கண்டறிவது சற்று கடினமாக தான் இருக்கும். அதுவும் 9 வினாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பது உண்மையில் சவாலான விஷயம் தான். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை முடிக்க நீங்கள் சிறந்த கண்காணிப்பு திறன் பெற்றவராக இருக்க வேண்டும். மேலே உள்ள இமேஜை பல வினாடிகள் உற்று பார்த்தும் உங்களால் எருமை மாட்டை கண்டுபிடிக்க முடியாவிட்டால் சிறிய க்ளூ இங்கே தருகிறோம்.

Also Read : கல்யாணத்துக்கு லேட்டாச்சு வழிவிடுங்க... மெட்ரோவில் பயணித்த மணப்பெண் - வைரல் வீடியோ

ஆப்டிகல் இல்யூஷன் இமேஜின் பரந்து விரிந்த பரப்பில் எங்கு கவனம் செலுத்துவது என்று நீங்கள் குழம்பி இருந்தால், வலது பக்கம் மட்டும் கவனம் செலுத்துங்கள். சற்று சுலபமாக அந்த எருமையை கண்டிபிடித்து விடலாம்.

இப்போதும் உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் இந்த புகைப்படத்தில் விடை வட்டமிடப்பட்டுள்ளதைப் பார்த்து பதிலை தெரிந்து கொள்ளுங்கள்.

First published:

Tags: Game, Optical Illusion, Quiz