ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

பூனை படியில் ஏறுகிறதா.? இறங்குகிறதா.? பல ஆண்டுகளாக மூளைக்கு சவால் விடும் வைரல் புகைப்படம்.!

பூனை படியில் ஏறுகிறதா.? இறங்குகிறதா.? பல ஆண்டுகளாக மூளைக்கு சவால் விடும் வைரல் புகைப்படம்.!

ஆப்டிகல் இல்யூசன்

ஆப்டிகல் இல்யூசன்

Optical Illusion | தற்போது நாம் பார்க்கப்போகும் ஆப்டிகல் இல்யூசன் புகைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் வைரலாகி நெட்டிசன்களின் மூளைக்கு சவால் விட்டு வருகிறது. அப்படி என்ன? என்பது குறித்து இங்கே நாமும் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்..

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆப்டிகல் இல்யூசன் புகைப்படங்கள் தான் தற்போது இணையவாசிகளிடம் பொழுதுபோக்கு அம்சமாக மாறியுள்ளது. இந்த புகைப்படங்களைப் பார்ப்பவர்களின் கண்களைக் குழப்புவதோடு அவர்களின் மூளைக்கும் மற்றும் அறிவுத்திறனுக்கும் கொடுக்கும் வேலையாகவே அமைகிறது. அதுவும் அலுவலக நேரத்தில் அல்லது வீட்டில் ப்ரீ டைம் கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது அறிவுப்பூர்வமாக இணையத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் பலரின் தேடல்கள் இது தான். ஒரு சிலர் வைரலாகும் ஒளியியல் மாயைப் புகைப்படங்களை எளிதில் கண்டுபிடித்துவிடுவார்கள்.

ஆனால் சிலரோ பல போராட்டங்களுக்குப்பிறகு சில டிப்ஸ்களைப் பயன்படுத்திக் கண்டுபிடித்து மகிழ்வார்கள். இதோடு நிறுத்திவிடமால் ஒரு சிலர் தன்னுடைய நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு கண்டுபிடிக்குமாறு சவால் விடுவார்கள். அதுவும் குறிப்பிட்ட நேரத்திற்குள் கண்டுபிடித்து விட்டால் நீங்கள் தான் ஜீனியஸ் என்றும் நீங்கள் என்ன மாதிரியான பண்புகளைக் கொண்டிருப்பார்கள்? என்று தெரிந்து கொள்ளலாம்.

இதுபோன்ற ஒரு ஆப்டிகல் இல்யூசன் புகைப்படம் தான் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் வைரலாகி நெட்டிசன்களின் மூளைக்கு சவால் விடுகிறது. அப்படி என்ன? என்பது குறித்து இங்கே நாமும் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்..

தற்போது இணையத்தில் ஒரு படிக்கட்டில் பூனை நிற்கிறது. இதில் இந்த பூனை ஏறுகிறதா? அல்லது இறங்குகிறதா? என்பது தான் இன்றைய கேள்வி. நாம் பார்த்தவுடன் பலருக்கு இந்த பூனை மேலே ஏறி வருவது போன்று தான் நமக்கு தெரியவரும். ஆனால் உண்மையில் இது சரிதானா? என்ற கேள்வி அனைவருக்கும் எழக்கூடும். இதே மாதரியான குழப்பம் தான் நெட்டிசன்களிடம் ஏற்பட்டுள்ளது. டிவிட்டரில் இந்த பதிவைப்பார்த்த இணையவாசிகள், இந்த பூனை இருபுறம் நடந்து செல்கிறது என்றும், மேலே நோக்கி தான் செல்கிறது என்கின்றனர் சிலர். மற்றொரு டிவிட்டர் யூசர் ஒருவர் கொஞ்சம் குழப்பமாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதுபோன்ற பல குழப்பமானக் கேள்விகளையும் நெட்டிசன்கள் முன் வைத்துள்ளனர்.

நிச்சயம் நம்மில் பலர், இதற்கான விடைத் தேடுவதற்கு முன்னதாக டிவிட்டரில் என்ன தான் சொல்லியிருக்கிறார்கள் என்று தேடியிருப்போம். ஆனாலும் கண்டுபிடிப்பதில் தற்போதும் குழப்பம் நீடிக்கும். இதோ உங்களுக்கான சில டிப்ஸ் தருகிறோம். இப்போது மீண்டும் உங்களது முயற்சியைத் தொடங்குங்கள்.

Also Read : Math Riddles | மூளைக்கு சவால்.. காலியாக உள்ள கட்டத்திற்கான சரியான எண்ணை கணடுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ்

டிப்ஸ் 1: முதலில் படிக்கட்டை நன்றாக உற்று நோக்குங்கள். படிக்கட்டின் வடிவமைப்பு மேலிருந்து கீழ் நோக்கி இருப்பது போன்று நமக்குத் தெரியவரும். இப்பொழுதாவது கண்டுபிடித்துவிட்டீர்களா? இல்லையென்றால் இதே அடுத்த டிப்ஸ்.

டிப்ஸ் 2: நீங்கள் பூனையின் கால்கள், நிழல் மற்றும் படிக்கட்டுகளை நன்றாக உற்றுப்பாருங்கள். நாம் கீழே இறங்கிவரும் போது பொதுவாக நம்முடைய நிழல் நமக்கு முன்னதாக தெரியும். இதே போல் இந்த புகைப்படத்திலும் தெரிகிறது. இதோடு படிக்கட்டின் வடிவமைப்பை நன்றாக உற்றுப்பாருங்கள். இப்போது நீங்கள் கண்டுபிடிக்கலாம்..

Also Read : இந்த படத்தில் ஒளிந்துள்ள புலிகளை 11 வினாடிகளில் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.!

தற்போது வைரலாகும் இந்த ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படங்கள் நிச்சயம் கண்களுக்கும் மூளைக்கும் சவால் விடும் வகையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை உங்களது கண்களுக்கு என்ன மாதிரி தெரிகிறது? எப்படி என்பது குறித்து நீங்கள் இணையத்தில் பதிவிடலாம்.

Published by:Selvi M
First published:

Tags: Optical Illusion, Tamil News, Trending