முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / இருக்கு... ஆனா இல்ல! 30 நொடிகளில் மறைந்து போகும் நாணயம்..

இருக்கு... ஆனா இல்ல! 30 நொடிகளில் மறைந்து போகும் நாணயம்..

காட்சி படம்

காட்சி படம்

Optical Illusion : படத்தில் உள்ள நாணயத்தை தொடர்ந்து உற்றுநோக்கினால் 30 நொடிகளில் உங்கள் பார்வையிலிருந்து மறையும் அதிசயத்தை உணர்வீர்கள்.

  • Last Updated :

மாயாஜால வித்தைகளில் உங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போகலாம். ஆனால், ஆப்டிக்கல் இல்யூஷன் என்னும் மாயத் தோற்றத்தின் அடிப்படையில் அமைந்த இந்தப் படத்தைப் பார்த்த பிறகு, உங்களால் உங்கள் கண்களையே நம்ப முடியாது.

தொடர்ந்து உற்று நோக்கில், நம் கண் பார்வையில் இருந்து இந்த நாணயம் மறைந்து போவதை நாம் உணர முடியும். குறிப்பாக, இந்த நாணயத்தின் மையத்தில் உள்ள பெருக்கல் குறியீட்டை தொடர்ந்து 30 நொடிகளுக்கு உற்று நோக்கிப் பாருங்கள். நிச்சயமாக அது நம் பார்வைத் திறனில் இருந்து மறைந்து விடும்.

எப்படி மறைந்தது நாணயம்?

உங்கள் பார்வையில் இருந்து நாணயம் மறைந்து விட்டதா? உண்மையில் அந்த நாணயம் அதே இடத்தில் தான் இருக்கிறது. ஆனால், இது எப்படிச் சாத்தியமானது. இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் டிசைனுக்குப் பெயர் டிராக்ஸ்லர் ஃபேடிங் என்பதாகும்.

கடந்த 1804ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த மருத்துவர் பௌல் டிராக்ஸ்லர் முதல் முறையாக இந்த வித்தையை கண்டுபிடித்தார். மாற்றம் அடையாமல் ஒரே நிலையில் இருக்கும் காட்சி ஒன்றின் மீது நம் மூளை தொடர்ந்து கவனம் செலுத்தும் போது, நம் கவனத்தில் இருந்து அது மறைந்து விடுகிறது என்பதை அவர் கண்டறிந்தார்.

நாணயத்தின் பெருக்கல் குறியீட்டை உற்று நோக்கும் போது, நாணயத்தின் கலர்கள் நம் பார்வைக்கு மங்கலாக மறையத் தொடங்குகின்றன. இதன் விளைவாக 30 நொடிகளில், அந்த நாணயம் முற்றிலுமாக நம் பார்வையில் இருந்து மறைந்து விடுகிறது.

also read : இந்த ஓவியத்தில் ஒளிந்திருக்கும் 13 முகங்களை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்..

ஏன் மறைந்து போகிறது?

நாம் ஒரு படத்தை உற்று நோக்கும் போது, அந்தப் படத்தை நம் கண்கள் மூளைக்கு மீண்டும், மீண்டும் அனுப்பி வைக்கிறது. அப்படி ஒரே படம் எண்ணற்ற முறை மூளையின் கவனத்திற்கு செல்லும் போது, முக்கியமானவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு, தேவையில்லாதவற்றை மூளை புறம்தள்ளி விடுகிறது. அதாவது, ஒவ்வொரு முறையும் உங்கள் கண்கள் இதை படம்பிடித்து மூளைக்கு அனுப்பும்போது, மையப் புள்ளியைத் தவிர்த்து எஞ்சியுள்ளவற்றை நம் மூளை புறக்கணிக்கத் தொடங்குகிறது. இதன் விளைவாக மையப் புள்ளி தவிர்த்து ஒட்டுமொத்த நாணயமும் கண் பார்வையில் இருந்து மறைந்து விடுகிறது.

ஆப்டிக்கல் இல்யூஷன் படம்: 

நமது சிந்தனைத் திறனுக்கு சவால் அளிக்கும் வகையிலும், கண் பார்வைத் திறனை சோதிக்கும் வகையிலும் அமைவது தான் ஆப்டிக்கல் இல்யூஷன் என்னும் மாயத்தோற்ற படங்கள். இவை கம்ப்யூட்டரில் டிசைன் செய்யப்பட்டதாக இருக்கலாம் அல்லது கைகளால் வண்ணம் தீட்டப்பட்டதாக இருக்கலாம்.

top videos

    எப்படி இருந்தாலும், ஆப்டிக்கல் இல்யூஷன் படங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட உருவங்கள் மறைந்திருக்கும். பார்த்தவுடன் எளிமையாக கண்டுபிடித்துவிட முடியாதபடிக்கு அந்த படங்கள் நேர்த்தியாக வடிவமைப்பு செய்யப்படுகின்றன. படத்தில் உள்ள உருவங்களை நாம் எப்படி அடையாளம் காணுகிறோம் என்பதைப் பொறுத்து நமது திறன் மதிப்பீடு செய்யப்படுகிறது.

    First published:

    Tags: Optical Illusion