Home /News /trend /

இந்த பார்ட்டியில் இருக்கும் திருடனை 10 வினாடிகளில் கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடிதான்.!

இந்த பார்ட்டியில் இருக்கும் திருடனை 10 வினாடிகளில் கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடிதான்.!

ஆப்டிகல் இல்யூஷன்

ஆப்டிகல் இல்யூஷன்

Optical illusion | சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் ஈர்க்கும் புதிர் விளையாட்டுகளாக இருந்து வருகின்றன ஆப்டிகல் இல்யூஷன்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
சோஷியல் மீடியாக்களில் மிகவும் வைரலாகி வருவதால் புதிது புதிதாக ஆப்டிகல் இல்யூஷன்கள் உருவாக்கப்படுகின்றன அல்லது பழைய ஆப்டிகல் இல்யூஷன்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று நாம் பார்க்க போகும் ஆப்டிகல் இல்யூஷன் ஒரு பார்ட்டி காட்சியை கொண்டது. பார்ட்டிகள் என்பவை மக்கள் மகிழ்ச்சியாக ஒன்று கூடும் இடம். ஆனால் அந்த இடத்தில் திருடன் புகுந்தால்.!!

பார்ட்டி செய்பவர்களின் உடமைகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் போகுமல்லவா, இதை கான்செப்ட்டாக வைத்து தான் சமீபத்தில் ஒரு ஆப்டிகல் இல்யூஷன் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. கீழே நீங்கள் காண போகும் ஆப்டிகல் இல்யூஷன் இமேஜில் ஒரு ஹாலோவீன் பார்ட்டி நடக்கிறது. இதில் பல அழகான கார்ட்டூன் கேரக்டர்கள் வித்தியாசமான ஆடைகளில் கலந்து கொண்டிருக்கும் காட்சி இருக்கிறது. ஆனால் இவர்களுக்கிடையே ஒரு திருடனும் இருக்கிறான். அவனை வெறும் 10 வினாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே சவால். கீழே நீங்கள் பார்க்க போகும் ஹாலோவீன் பார்ட்டியில் பேய்கள், சூப்பர் ஹீரோக்கள் மற்றும் நிஞ்ஜாக்கள் கலந்து கொண்டுள்ளனர். இவர்களை மீது உங்கள் கவனத்தை சிதற விடாதீர்கள், ஏனென்றால் சட்டென்று 10 வினாடிகளில் நீங்கள் திருடனை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே டாஸ்க்.



நிச்சயமாக பலரால் திருடனை கண்டுபிடித்திருக்க முடிந்திருக்காது, ஏனென்றால் 10 வினாடிகள் என்பது அதிக கவனமிக்கவர்களுக்கு மட்டுமே சரியாக இருக்கும். உங்களால் பார்ட்டியில் இருக்கும் திருடனை கண்டுபிடிக்க முடியவில்லை எனில், ஒரு சிறிய க்ளூ தருகிறோம். இந்த பார்ட்டியில் இருக்கும் திருடனை உடையை வைத்து கண்டுபிடிக்க முடியாது. இதை ஏன் சொல்கிறோம் என்றால் ஹாலோவீன் பார்ட்டி என்றதும் திருடன் போன்று உடையணிந்து இருப்பவராக இருக்கலாம் என்று பலரும் தேடுவார்கள்.

Also Read : இந்த தக்காளி கூட்டத்திற்குள் மறைந்திருக்கும் 3 ஆப்பிள்களை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.!

ஆனால் உண்மையில் இந்த ஆப்டிகல் இல்யூஷன் இமேஜில் இருக்கும் திருடன், பார்ட்டியில் இருக்கும் ஒருவரிடமிருந்து திருட முயற்சிக்கும் காட்சி உள்ளது. எனவே மீண்டும் சவால் இமேஜை நன்றாக உற்று பாருங்கள்.

Also Read : இந்த படத்திற்குள் மறைந்திருக்கும் நாயின் ஓனரை 15 விநாடிகளில் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.!

அப்படியும் உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், இதோ மற்றொரு பெரிய க்ளூ கொடுக்கிறோம். பூனை-காது தலைக்கவசத்துடன் நீல நிற உடையில் இருப்பவர் மீது கவனம் செலுத்துங்கள்.இதுவும் வேலைக்கு ஆகவில்லை எனில் இப்போது விடையை சொல்கிறோம். உங்களில் திருடனை கண்டுபிடிக்க முடியாதவர்கள், நிஞ்ஜா உடையணிந்த நபரை கவனமாகப் பாருங்கள். நிஞ்ஜாவிடம் இருந்து விலகி பின்னால் நிற்கும் பெண் நிஞ்ஜாவின் பேன்ட் பாக்கெட்டில் இருந்து எதையோ திருட முயல்வதை நீங்கள் பார்ப்பீர்கள். கீழே அது வட்டம் போட்டு காட்டப்பட்டுள்ளது பாருங்கள்...



இது போன்ற ஆப்டிகல் இல்யூஷன்கள் வேடிக்கையானவையாக இருக்கின்றன. ஏனெனில் இவை நம் மனதை ஒருமுகப்படுத்துவதோடு, சவாலில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வத்தையும் ஏற்படுத்தி கவனிக்கும் திறனை மேம்படுத்துகிறது.
Published by:Selvi M
First published:

Tags: Optical Illusion, Trending

அடுத்த செய்தி