Home /News /trend /

இந்த பாண்டா கரடிகளுக்கு நடுவே மறைந்திருக்கும் நாய்க்குட்டியை 25 விநாடிகளுக்குள் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.! 

இந்த பாண்டா கரடிகளுக்கு நடுவே மறைந்திருக்கும் நாய்க்குட்டியை 25 விநாடிகளுக்குள் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.! 

Trending

Trending

Optical illusion | இந்த ஆப்டிகல் இல்யூஷனில் பாண்டாக்களைப் போலவே உள்ள நாய்க்குட்டியை 25 விநாடிகளுக்குள் கண்டுபிடிக்க வேண்டும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
சோசியல் மீடியாவில் தினந்தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள், மீம்ஸ்கள், போட்டோக்கள் வெளியாகி வைரலானாலும் சிந்தனையையும், ஆர்வத்தையும் தூண்டும் ஆப்டிக்கல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயைகள் மீதான மக்களின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது ஆளுமை திறன், உருவங்களை கண்டுபிடிப்பது அல்லது எண்ணிக்கையை சொல்வது போன்ற ஆப்டிக்கல் இல்யூஷன்களை விட கண்ணையும், மூளையையும் குழம்ப வைக்க கூடிய அளவிற்கு மிகவும் சிக்கலான ஆப்டிகல் இல்யூஷன்களுக்கு மதிப்பு அதிகரித்து வருகிறது.

அதுவும் ஒரே மாதிரியான உருவம் கொண்ட கும்பலில் இருந்து ஒரே ஒரு மாற்று உருவத்தை கண்டறியும் ஆப்டிக்கல் இல்யூஷன்கள் மிகவும் சுவாரஸ்யமானவை. தற்போது அப்படிப்பட்ட கடினமான ஆப்டிக்கல் இல்யூஷன்களை தான் உங்களுக்காக கொண்டு வந்துள்ளோம். பாண்டாக்களைப் போலவே உள்ள நாய்க்குட்டியை 25 விநாடிகளுக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்ற சவால் சோசியல் மீடியாவில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் பாண்டா கரடிக்களின் கூட்டம் உள்ளது, அதை போலவே நிறம், தோற்றம் கொண்ட நாய்க்குட்டி ஒன்றும் பாண்டாக்களின் கூட்டத்தில் மறைந்துள்ளது. அதனை வெறும் 25 விநாடிகளுக்குள் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் நீங்கள் தான் வெற்றியாளர்.



இந்த மாயையை சற்று கடினமாக்கும் மற்றொரு தடையாக நாய்க்குட்டியின் தோல் நிறம் பாண்டாக்களைப் போன்றது. நிறத்தில் உள்ள இந்த ஒற்றுமை, நாய்க்குட்டியை பாண்டாக்கள் மத்தியில் திறமையாக மறைத்தது. இருப்பினும், நீங்கள் கூர்ந்து கவனித்தால்,  நாய்க்குட்டியைக் கண்டுபிடிக்க முடியும். பாண்டாக்கள் கூட்டத்தில் நாய்க்குட்டியை எளிதாக கண்டுபிடித்துவிடலாம் என நீங்கள் நினைக்கலாம், ஆனால் யாருமே எளிதாக யூகிக்க முடியாத இடத்தில் தான் நாய்க்குட்டி மறைந்துள்ளது. உங்களுக்கான நேரம் ஆரம்பமாகிவிட்டது... 25 விநாடிகளுக்குள் நாய்க்குட்டியை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

Also Read : 99 சதவீதம் பேர் தோல்வி... ஒரே ஒரு தீக்குச்சியை நகர்த்தி இந்த கணக்கை சமன் செய்ய முடியுமா.?

பாண்டா கரடிகளின் கூட்டத்திற்குள் மறைந்திருக்கும் நாய்க்குட்டியை  கண்டுபிடித்தவர்களுக்கு வாழ்த்துக்கள். மற்றவர்களுக்கு, கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் கண்டுபிடிக்க முடியவில்லையா?. தோல்வியை ஒப்புக்கொண்ட உங்களுக்காக ஒரு அசத்தலான குறிப்பு தருகிறோம். அதன் முகம் பாண்டாக்களை விட சற்றே வித்தியாசமாக தெரியும். இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லையா? கவலைப்பட வேண்டாம், இதோ உங்களுக்காக மற்றொரு குறிப்பு. பாண்டாக்களின் காதுகள் மேல்நோக்கி வளைந்திருக்கும், நாய்க்குட்டியின் காதுகள் கீழ் நோக்கி இருக்கும். புகைப்படத்தில் இருக்கும் அனைத்து விலங்குகளின் காதுகளையும் வரிசையாக உற்றுப் பார்த்துக் கொண்டே வாருங்கள்.

Also Read : பாகுபலி ராஜமாதா போல் தனது குழந்தையை மக்களுக்கு காட்டிய கொரில்லா - வைரல் வீடியோ

இப்போது படத்தின் வலது பக்கத்தை நன்றாக உற்றுப்பாருங்கள். இப்போது பாண்டா கரடியைப் போலவே கறுப்பு, வெள்ளை தோற்றம் கொண்ட க்யூட்டான நாய்க்குட்டி ஒன்று எட்டிப்பார்ப்பதை நீங்கள் காணலாம்.

இறுதி வரை கண்டறிய முடியாதவர்கள் விடையை காண கீழே படத்தில் வட்டமிட்டுள்ள இடத்தை பாருங்கள்.



இதற்கு முன்னதாக பனி மனிதர்கள் இடையே மறைந்திருக்கும் பாண்டா கரடியை கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆப்டிக்கல் இல்யூஷன் வைரலானது. ஹங்கேரிய கலைஞரான ஜெர்கெலி டுடாஸ் என்பவரால் வடிவமைக்கப்பட்ட அந்த ஆப்டிக்கல் இல்யூஷனை 30 விநாடிகளுக்குள் வெறும் ஒரு சதவீதம் பேரால் மட்டுமே கண்டுபிடிக்க முடிந்தது குறிப்பிடத்தக்கது.
Published by:Selvi M
First published:

Tags: Optical Illusion, Trending

அடுத்த செய்தி