Home /News /trend /

உங்கள் கண்களுக்கு சவால்... இந்த கூட்டத்தில் பைலட் எங்கே என்பதை சரியாக கண்டுபிடியுங்க பார்க்கலாம்.! 

உங்கள் கண்களுக்கு சவால்... இந்த கூட்டத்தில் பைலட் எங்கே என்பதை சரியாக கண்டுபிடியுங்க பார்க்கலாம்.! 

Trending

Trending

Optical illusion | தற்போது PlayOJO நிறுவனம் வெளியிட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷனில் பரபரப்பான, மக்கள் கூட்டம் நிறைந்த விமான நிலையம் இடம் பெற்றுள்ளது. இந்த கூட்ட நெரிசலில் இருந்து பார்வையாளர்கள் சரியாக பைலட்டை கண்டுபிடிக்க வேண்டும் என சவால் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
சோசியல் மீடியாவில் கண்ணை கவரும், மூளையை சிந்திக்க தூண்டும் ஆப்டிகல் இல்யூஷன்கள் நாளுக்கு நாள் அதிகமாக வெளியாகி வருகின்றன. அதில் குறிப்பாக ‘இருக்கு ஆனா இல்ல’... ‘இருக்கா இல்லையா’ என மூளையை குழப்பக் கூடிய ஆப்டிகல் இல்யூஷன்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். ஆப்டிகல் இல்யூஷன்களில் மறைந்திருக்கும் விஷயத்தை சரியாக கண்டுபிடிப்பது என்பது, நீங்கள் அந்த போட்டோவை எப்படி பார்க்கிறீர்கள், உணருகிறீர்கள், எவ்வாறு கணிக்கிறீர்கள் என்ற பல வகையான விஷயங்களை அடிப்படையாக கொண்டது. இது நபருக்கு நபர் மாறுபடும், இந்த அவதானிப்பு திறன்கள் நமக்கு சின்ன சின்ன வேலைகளில் கூட, சிறப்பான முடிவுகளை எடுக்க உதவுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஏராளமான ஆப்டிக்கல் இல்யூஷன் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தாலும், தினமும் புதிது புதிதாக ஒன்று வெளியாகி கொண்டிருக்கிறது. இன்று PlayOJO என்ற பிங்கோ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த குழப்பமான ஆப்டிகல் இல்யூஷன் இமேஜை வெளியிட்டுள்ளது. இது ஏற்கனவே நாம் பார்த்துள்ள ‘கண்டுபிடி, கண்டுபிடி’ வகையை சேர்ந்தது. அதாவது ஏராளமான விஷயங்கள் இருக்கும் புகைப்படம் ஒன்றிலிருந்து, குறிப்பிட்ட ஒரு உருவம், நபர் அல்லது விலங்கை கண்டுபிடிக்க வேண்டும் என பார்வையாளர்களுக்கு சவால்விடுக்கப்படும்.

தற்போது PlayOJO நிறுவனம் வெளியிட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷனில் பரபரப்பான, மக்கள் கூட்டம் நிறைந்த விமான நிலையம் இடம் பெற்றுள்ளது. இந்த கூட்ட நெரிசலில் இருந்து பார்வையாளர்கள் சரியாக பைலட்டை கண்டுபிடிக்க வேண்டும் என சவால் விடுக்கப்பட்டுள்ளது. விமான நிலையம் என்பது நாள்தோறும் பல லட்சக்கணக்கான நபர்கள் வந்து செல்லும் இடம், இமிக்ரேஷன், பாஸ்போர்ட் சோதனை, பொருட்களை எடுத்துச் செல்வது, பயண டிக்கெட் வாங்குவது என ஏகப்பட்ட பரபரப்பான வேலைகள் நடக்கும். அப்படிப்பட்ட இடத்தில் மறைந்து இருக்கும் ஒரு குறிப்பிட்ட நபரை கண்டுபிடிப்பது என்பது சாத்தியமில்லாதது.

Also Read : 99 சதவீதம் பேர் தோல்வி... ஒரே ஒரு தீக்குச்சியை நகர்த்தி இந்த கணக்கை சமன் செய்ய முடியுமா.?

இருப்பினும் நீங்கள் இந்த சவாலை ஏற்க தயார் என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தை நன்றாக உற்றுப்பாருங்கள். அதில் விமான நிலைய கட்டிடம் மற்றும் விமான பயணிகள் என்ன செய்கிறார்கள் என்பது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பெரும் கூட்டத்திற்குள் இருக்கும் விமான பைலட்டை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.பிரபல இணையதளத்தின் கணிப்பு படி, பிசியான ஏர்போர்ட்டை பிரதிபலிக்கும் இந்த ஆப்டிகல் இல்யூஷனில் வெறும் 24 சதவீதம் பேர் மட்டுமே பைலைட்டை சரியாக கண்டுபிடித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. என்ன நீங்கள் பைலட்டை கண்டுபிடித்து வெற்றி பெறுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளதா.? அப்படியானால் நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்யலாம். போட்டோவை பார்த்தாலே தலை சுற்றுகிறது என தெறித்து ஓட நினைப்பவர்களுக்கு, விடை இதோ... நெரிசலான இந்த படத்தின் கீழ் இடது மூலையில் உற்று நோக்கினால் உங்களால் பைலட்டை காண முடியும்.

Also Read : உலகின் கடைசி செல்ஃபி எப்படி இருக்கும்.? வெளியான அதிர்ச்சி புகைப்படங்கள்

இறுதி வரை கண்டறிய முடியாதவர்கள் விடையை காண கீழே படத்தில் வட்டமிட்டுள்ள இடத்தை பாருங்கள்.கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு விமான நிலையங்கள் பிசியாக மாறிவிட்டதை காட்டுவதற்காக PlayOJO இந்த படத்தை வடிவமைத்துள்ளது. இதே போன்ற ஒரு படத்தை பிரித்தானியாவை தளமாகக் கொண்ட போர்ட்மெய்ரியன் என்ற மட்பாண்ட நிறுவனம் உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Selvi M
First published:

Tags: Optical Illusion, Trending

அடுத்த செய்தி