Home /News /trend /

இந்த படத்திற்குள் மறைந்திருக்கும் நாயின் ஓனரை 15 விநாடிகளில் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.!

இந்த படத்திற்குள் மறைந்திருக்கும் நாயின் ஓனரை 15 விநாடிகளில் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.!

ட்ரெண்டிங்

ட்ரெண்டிங்

Optical illusion | இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படத்தில் உள்ள நாயின் முகத்தில் அதன் உரிமையாளரின் முகமும் மறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் வெறும் 15 விநாடிகளுக்குள் நாயின் முகத்தில் மறைந்துள்ள அதன் உரிமையாளரை நீங்கள் அடையாளம் காண வேண்டும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
மனதை கவர்ந்திழுக்க கூடிய, மூளைக்கு தீவிரமாக வேலை கொடுக்ககூடிய ஆப்டிகல் இல்யூஷன்கள் எப்போதுமே சோசியல் மீடியாவில் அதிக கவனம் பெறுகின்றன. உடல், உடலியல் மற்றும் அறிவாற்றல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட பல வகையான ஆப்டிக்கல் இல்யூஷன்கள் உள்ளன. இவை மனிதர்களின் குண நலன்கள், பண்புகள் ஆகியவற்றைக் கண்டறிய மனோ பகுப்பாய்வுத் துறையிலும் பயன்படுத்தப்படுகின்றன.

ஏனெனில் அவை நீங்கள் விஷயங்களை எப்படி உணருகிறீர்கள் என்பதை கணிக்க உதவுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு சாதாரண மனிதனின் மூளை ஒவ்வொரு கோணத்திலிருந்தும் விஷயங்களை அல்லது படங்களைப் பார்ப்பதை வைத்து வித்தியாசமான உணர்வை உருவாக்கும் அத்தகைய ஒரு புத்திசாலித்தனமான விளக்கப்படத்தை 1880 களில் ஒரு நாயின் ஓவியத்தில் ஒரு மனிதனின் முகத்தை கண்டுபிடிக்கக்கூடிய தந்திரங்களுடன் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படத்தில் உள்ள நாயின் முகத்தில் அதன் உரிமையாளரின் முகமும் மறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் வெறும் 15 விநாடிகளுக்குள் நாயின் முகத்தில் மறைந்துள்ள அதன் உரிமையாளரை நீங்கள் அடையாளம் காண வேண்டும். நாயின் ரோமத்திற்குள் மறைந்து கிடக்கும் உரிமையாளரை கண்டுபிடிக்க முயன்ற ஆயிரக்கணக்கான நபர்கள் தங்களது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளனர்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிக்கல் இல்யூஷன் புதிர் குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டது. நாயின் உரிமையாளரின் முகத்தை 15 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?..



இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படத்தை நன்றாக உற்றுப்பாருங்கள். ஒரு நாயின் ஓவியத்தில் மறைந்திருக்கும் மனிதனின் முகத்தைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். நாயின் முகத்தையே உற்றுப்பார்த்து தேடினால் மனிதனின் முகத்தை பார்ப்பது மிகவும் சவாலானதாக தான் இருக்கும். அதுவே கொஞ்சம் மாத்தி யோசித்து பாருங்கள்... நாயின் படத்தை கொஞ்சம் வலது பக்கமாக சாய்த்து, உற்று பாருங்கள். இந்த முறையில் பார்க்கும் போது நாய் உருவத்துக்குள் மறைந்திருக்கும் உரிமையாளர் உங்கள் கண்களில் பட வாய்ப்புள்ளது.

Also Read : படத்தில் மறைந்திருப்பது என்ன பறவை என கண்டுபிடியுங்கள்.? மூளைக்கு சவால் விடும் புகைப்படம் இணையத்தில் வைரல்.!

அவ்வளவு தான் ஈசியான வழியையும் கொடுத்துவிட்டோம், இப்போது உங்களுக்கான 15 விநாடிகள் ஆரம்பமாகிறது. கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் நீங்கள் நாயின் தலைக்குள் ஒளிந்திருக்கும் உரிமையாளரைக் கண்டுபிடித்துவிட்டால், நீங்கள் மிகவும் புத்தசாலித்தனமான நபர் என்று அர்த்தம் என நிபுணர்கள் கூறுகின்றனர். கடினமான புதிர்களைக் கொண்டு உங்கள் மூளைக்கு எவ்வளவு பயிற்சி கொடுக்கிறீர்களோ, அவ்வளவு புத்திசாலித்தனமாக நீங்கள் இருக்கிறீர்கள் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

Also Read : இந்த படத்தில் பாம்பு தெரிகிறதா? 7 விநாடிகளுக்குள் கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடிதான்.!

ஆப்டிக்கல் இல்யூஷன்கள் எப்பொழுதும் நமது மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றிய அறிவியல் பூர்வமான உண்மைகளை அறிய உதவுகின்றன. நிறம், ஒளி மற்றும் வடிவங்களின் குறிப்பிட்ட சேர்க்கைகள் நம் மூளையில் இல்லாத ஒன்றை பார்வைக்கு உணர வைக்கிறது. இப்போது இந்த ஆப்டிக்கல் இல்யூஷனில் மறைந்துள்ள மனிதனின் முகத்தை கண்டுபிடித்துவிட்டீர்களா?... இல்லை என்றால் விடையை நாங்களே சொல்கிறோம்.

வலது பக்கமாக சாய்க்கப்பட்ட நாயின் புகைப்படத்தை நன்றாக உற்றுப்பார்த்தால் அதன் காது பகுதியில் உரிமையாளரின் முகம் மறைந்திருப்பதை நீங்கள் காணலாம்...



பார்க்க சற்றே வயதானவர் போன்ற தொப்பி அணிந்த நபரின் உருவம் உங்கள் கண்களுக்கு தெரிகிறதா? என்பதை கமெண்ட்டில் தெரியப்படுத்துங்கள். இறுதி வரை கண்டறிய முடியாதவர்கள் விடையை காண மேலே படத்தில் வட்டமிட்டுள்ள இடத்தை பாருங்கள்.
Published by:Selvi M
First published:

Tags: Optical Illusion, Trending

அடுத்த செய்தி