Home /News /trend /

இந்த படத்தில் மறைந்திருக்கும் புலி... கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடி தான்!

இந்த படத்தில் மறைந்திருக்கும் புலி... கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடி தான்!

ஆப்டிகல் புகைப்படம்

ஆப்டிகல் புகைப்படம்

Optical Illusion | இந்த ஒளியியல் மாயை படத்தில் மறைந்திருக்கும் புலியை ஒரு சதவீதம் பேர் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

    இன்று இணையத்தில் வைரலாக இருக்க கூடிய விஷயங்களில் ஒன்று ஆப்டிகல் இலுஷன் என்கிற ஒளியியல் மாயை சார்ந்த படங்களும், வீடியோக்களும் மிகவும் பிரலமானவை. ஆம், நாம் பார்க்க கூடிய விஷயங்கள், பல நேரங்களில் வேறு சிலவற்றை போன்ற தோற்றத்தை நமக்கு உண்டாக்க கூடும். இந்த உணர்வை தான் ஆப்டிகல் இலுஷன் என்று கூறுவார்கள். அதாவது ஒரு நேரத்தில் பார்க்கும் போது அது வேறு ஒன்று போல தோன்றும். அதையே இன்னொரு முறை பார்த்தால் வித்தியசாமாக இருக்கும். குறிப்பாக தூரத்தில் இருந்து பார்க்கும் போது நமது மூளைக்கு தெரிந்த அந்த உருவம், அருகில் இருக்கும் போது வேறொரு உருவத்தை காட்ட கூடும்.

    இப்படி நமக்கு தோன்றுவதற்கு சில காரணிகள் இருக்கலாம். நமது மூளையானது ஒரே நேரத்தில் பல விஷயங்களை நினைத்து கொண்டே இருப்பதால், முன் எப்போதோ பார்த்த ஒன்று நமது ஆழ் மனதில் ஓரமாக இருக்க கூடும். எனவே அந்த விஷயம் நிகழ் காலத்தில் நமது நினைவிற்கு வர கூடும். அதே போன்று பல ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மற்றும் வீடியோக்கள் அதில் உள்ளே ஒளிந்துள்ள உருவத்தை நாம் கண்டுபிடிக்க கூடிய வகையில் இருக்கும்.

    இப்படியொரு விஷயத்தை தான், நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம். அந்த வகையில், இந்த பதிவில் காட்டப்படும் படத்திலும் ஆப்டிகல் இல்யூஷன் மறைந்துள்ளது. உங்களுக்கு இதில் மறைந்துள்ள புலியின் படம் தெரிகிறதா என்பதை நன்றாக பார்த்து விட்டு சொல்லுங்கள். மறைந்துள்ள புலி தான் உங்களுக்கான ஆப்டிகல் மாயை புதிர். அதாவது இந்த புதிரில் மறைந்திருக்கும் இரண்டாவது புலியைக் கண்டுபிடிக்க வேண்டியது தான் இதில் உள்ள சிரமமே.

    Also Read : இரவில் இரண்டு பெரிய மலை பாம்புகளுடன் தினமும் உறங்கும் வினோத மனிதர்!

    இதை கண்டுபிடிக்க முடியாமல் நெட்டிசன்கள் பலர் தலையை சொறிந்து உள்ளனர். எனவே, கீழே உள்ள ஆப்டிகல் மாயை படத்தை பார்த்து, அதில் ஒளிந்துள்ள புலி எங்குள்ளது என்று கண்டுபிடியுங்கள்.இந்த படத்தில் மறைந்திருக்கும் புலியை உங்களால் பார்க்க முடிந்தால், நீங்கள் பெரும்பாலானவர்களை விட புத்திசாலி என்று அர்த்தம். இந்த ஒளியியல் மாயை படத்தில் மறைந்திருக்கும் புலியை ஒரு சதவீதம் பேர் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.



    ஆம், இது உண்மைதான். நீங்கள் நினைப்பதை விட இது கடினமானது. இந்த படத்தை நன்றாக உற்று பாருங்கள்.  'மறைந்துள்ள புலி' என்பது எங்குள்ளது என்று தேடுங்கள். சரி, இன்னும் நீங்கள் மறைந்திருக்கும் புலியை தேடுகிறீர்களா? இரண்டாவது புலி இயற்கைக் காட்சியில் மறைந்திருப்பதாக நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறாக நினைக்கிறீர்கள் என்று அர்த்தம்.



    எனவே இதை கண்டுபிடிக்க சுற்றியுள்ளவற்றில் தேடாமல், நீங்கள் புலியின் மீது அதிக கவனம் செலுத்துங்கள். மறைக்கப்பட்ட இரண்டாவது புலியை கண்டுபிடிப்பது எளிதில் சாத்தியமாகும். ஆம், மறைந்துள்ள புலி என்கிற வார்த்தையை தான் நீங்கள் கண்டுபிடிக்க முடியுமே தவிர உண்மையில் புலியை கண்டுபிடிக்க இயலாது. ' THE HIDDEN TIGER' என்கிற வார்த்தையானது புலியின் மேலுள்ள வரிகளில் உங்களால் கண்டுபிடிக்க முடியும்.

    அதாவது, புலியின் வயிற்றின் குறுக்கே நீண்டு, அதன் பின் கால்களில் வரை இந்த வார்த்தை உள்ளதை நீங்கள் காணலாம். இதை விலங்குகளின் மேலுள்ள கருப்பு கோடுகள் போல் மாறுவேடமிட்டு இருப்பதை உங்களால் பார்க்க முடியும்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Optical Illusion

    அடுத்த செய்தி