Home /News /trend /

படத்தில் மறைந்திருப்பது என்ன பறவை என கண்டுபிடியுங்கள்.? மூளைக்கு சவால் விடும் புகைப்படம் இணையத்தில் வைரல்.!

படத்தில் மறைந்திருப்பது என்ன பறவை என கண்டுபிடியுங்கள்.? மூளைக்கு சவால் விடும் புகைப்படம் இணையத்தில் வைரல்.!

Trending

Trending

Optical illusion | பார்ப்பதற்கு யானைப் போன்று தோற்றமளிக்கும் புகைப்படத்தில் அன்னப்பறவை மறைந்துள்ளது என்றும் இதனை 10 வினாடிகளுக்குள் கண்டறிந்து விடுங்கள் என இணையவாசிகளுக்கு சவால் விடுத்துள்ளது ஆப்டிக்கல் இல்யூசன் புகைப்படம் ஒன்று.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
இன்றைக்கு சோசியல் மீடியாக்களில் டிரெண்டிங்காக இருக்கும் சில விஷயங்களில் ஆப்டிக்கல் இல்யூசன் புகைப்படங்களும் ஒன்று. நமது கண்கள் மற்றும் மூளைக்கு சவால் விடும் வகையில்  அமைந்துள்ள புகைப்படங்களை நாம் எத்தனை வினாடிகளுக்குள் கண்டுபிடிக்கிறோம் என்பது தான் இதன் கேள்வியாக அமைந்திருக்கும். அப்படியொரு புகைப்படம் ஒன்று தான் தற்போது சோசியல் மீடியாவில் டிரெண்டாகியுள்ளது.

அந்த புகைப்படத்தினுள் மறைந்துள்ளது ஒரு விலங்கு இல்லை என இரண்டு விலங்குகள் உள்ளது என்று நமக்கு புதிர் போடுகிறது. நாம் முதலில் பார்க்கும் போது யானை முகம் போன்று தான் நமக்குத் தெரிகிறது. ஆனால் யானைக்குள் அன்னப்பறவை ஒன்று மறைந்திருக்கிறது என்றும் இதனை நீங்கள் 10 வினாடிகளுக்குள் கண்டுபிடியுங்கள் என்றும் இணையவாசிகளுக்கு சவால் விடுத்துள்ளது.

நீங்கள் யானைக்குள் ஒளிந்திருக்கும் அன்னப்பறவையைக் கண்டுபிடித்துவிட்டீர்களா.? இல்லையென்றால் கீழ்வரும் டிப்ஸ்கள் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.



டிப்ஸ் 1 : முதலில் யானையில் தும்பிக்கையின் கீழ் பகுதியை நன்றாக உற்றுப்பாருங்கள். வித்தியாசமாக உருவம் தெரிகிறதா.?

இதனை பயன்படுத்தி நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றால் இதோ உங்களுக்கான இரண்டாது டிப்ஸ்..

டிப்ஸ் 2: யானைக்குள் மறைந்திருக்கும் அன்னப்பறவையை கண்டுபிடிக்க வேண்டும் என்றால் உங்களது மொபைலை தலைகீழாக வைத்துப்பாருங்கள்.

Also Read : இந்த படத்தில் மரம் மறைந்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடியுமா? வைரலாகும் 3டி இல்யூசன்

இப்போது யானை அன்னப்பறவையாக மாறியது தெரிந்துவிடும். இறக்கைகளை பாதி விரித்து அமர்ந்திருக்கும் அழகிய அன்னப்பறவை பார்த்தலே நம் கண்களுக்கு ஆச்சரியமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

Also Read : தன்னை தானே கண்ணாடியில் பார்த்து அதிர்ந்த கரடி செய்த செயல்... வைரல் வீடியோ

 

இந்த அன்னப்பறவையை மேற்கண்ட டிப்ஸ் எதுவும் இல்லாமல் நீங்கள் கண்டுபிடித்துவிட்டால் உங்களது மூளை மற்றும் கண்பார்வை தான் உலகில் உள்ள மற்றவர்களை விட 99 சதவீதம் சிறப்பாக இருக்கும் என்று அர்த்தம். ஆனால் 10 சதவிகித மக்களால் தான் இதை கண்டுபிடிக்க முடிகிறது.



இப்படி ஆச்சரியமளிக்கும் ஒளியியல் மாயை புகைப்படத்தை இணையத்தில் பார்த்த நெட்டிசன்கள் பலர், என்னால் உடனே கண்டுபிடிக்க முடிந்தது யானை தான் என்றும், கொடுத்த வினாடிகளுக்குள் கண்டுபிடிப்பது என்பது சவாலான விஷயம் என தெரிவித்தனர். இதோடு சில நேரங்களில் நம்முடைய புத்திசாலித்தனத்தை நாமே சோதிக்க முடிகிறது என்றும் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

Also Read : ஒரே நிமிடத்தில் 17 அதிக காரமிக்க மிளகாய்களை சாப்பிட்டு கின்னஸ் சாதனை படைத்த நபர்..!

இதுப்போன்று சோசியல் மீடியாவில் வைரலாகும் புகைப்படங்களை யாருடைய உதவி இல்லாமல் கண்டுபிடிக்க நீங்கள் முயற்சிக்கும் போது நீங்கள் அதிபுத்திசாலியாக தான் இருப்பீர்கள். எனவே நீங்களும் இனி உங்களுக்கு கிடைக்க கூடிய ஆப்டிக்ல் இல்யூசன் புகைப்படங்களைக் கண்டுபிடிப்பதோடு உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து மகிழுங்கள்..

இன்றைக்கு பல போட்டித்தேர்வுகளிலும் மூளை மற்றும் கண்களுக்கு சவால் விடும் வகையில் ஆப்டிகல் இல்யூசன் புகைப்படங்கள் ஒரு கேள்வியாக இடம் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
Published by:Selvi M
First published:

Tags: Optical Illusion, Trending

அடுத்த செய்தி