Home /News /trend /

லட்சத்தில் ஒருவரால் மட்டுமே முடியும்.. இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடிக்க முடியுமா.? 

லட்சத்தில் ஒருவரால் மட்டுமே முடியும்.. இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடிக்க முடியுமா.? 

ஆப்டிகல் இல்யூஷன்

ஆப்டிகல் இல்யூஷன்

Optical Illusion | இந்த ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படத்தில் மறைந்திருக்கும் பாம்பைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே இன்று நாங்கள் உங்களுக்கு விடுக்கும் சவாலாகும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
தினந்தோறும் புதிது புதிதாக ஆப்டிக்கல் இல்யூஷன்கள் வெளியானாலும், இணையதளவாசிகளுக்கு அதன் மீதான ஆர்வம் குறைவதாக தெரியவில்லை. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆப்டிகல் இல்யூஷன், பிரெயின் டீஸர் போன்ற புதிர் விளையாட்டுக்களுக்கு அடிமையாகி வருகின்றனர். ஆப்டிக்கல் இல்யூஷனில் மறைந்திருக்கும் தந்திரமான புதிரை கண்டுபிடிக்கும் போது கிடைக்கும் சுவாரஸ்யமும் மற்றும் அதன் மூலம் பெரும் மூளையின் அறிவாற்றலும் தான் இதற்கு காரணமாகும்.

ஆப்டிகல் இல்யூஷன்களில் பலவகைகள் இருந்தாலும், ‘கண்டுபிடி, கண்டுபிடி’ வகையில் போட்டோ அல்லது ஓவியத்தின் நிறத்துடன் முழுவதுமாக ஒத்துப்போய், கண்ணுக்கே புலப்படாமல் மறைந்திருக்கும் உயிரினம் அல்லது உருவத்தை கண்டுபிடிப்பது நெட்டிசன்களுக்கு மிகவும் பிடித்தமான ஆப்டிகல் இல்யூஷனாக உள்ளது. தற்போது அப்படிப்பட்ட புதிருடன், சோசியல் மீடியாவில் புயலைக் கிளப்பி வரும் ஆப்டிகல் இல்யூஷனைப் பற்றித் தான் பார்க்கப்போகிறோம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தை நன்றாக உற்றுப்பாருங்கள், அதனுள் மறைந்திருக்கக்கூடிய பாம்பை கண்டுபிடிப்பது தான் இன்றைக்கான சவால். புகைப்படத்தை பார்த்தால் மரங்களால் சூழப்பட்ட, போர்வீரர்களின் கல்லறை போல் காட்சியளிக்கிறது. ஏனெனில் கல்லறைகள் மீது ராணுவ வீரர்கள் போர்க்களத்தில் பயன்படுத்தக்கூடிய ஹெல்மேட்கள் வைக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட கல்லறைக்குள் பாம்பு எங்கு வேண்டுமானாலும் மறைந்து கொண்டிருக்கலாம், எனவே அதனை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிப்பது நல்லது.



ஊர்வன இனத்தைச் சேர்ந்த பாம்புகள் பொதுவாக சூழ்நிலைக்கு ஏற்றார் போல் தங்களை மறைத்துக்கொள்வதில் கில்லாடிகள், ஊர்ந்து செல்லும் சமயத்தை தவிர பிற நேரங்களில் பாம்பு பதுங்கி இருப்பதை யாராலும் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. நிஜ பாம்பிற்கே அப்படி என்றால், ஆப்டிக்கல் இல்யூஷன் சவாலில் சொல்லத் தான் வேண்டுமா?, கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கும். எனவே கண்களை கூர்மையாக்கி கல்லறையில் மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்.

Also Read : 9 வினாடிகளில் ஆந்தை கூட்டத்திற்கு மத்தியில் இருக்கும் பூனையை கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடி தான்!

 

இதில் சிலர் முதல் பார்வையிலேயே பாம்பு எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடித்திருப்பீர்கள். ஆனால் விடையைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறுபவர்களுக்காக ஒரே ஒரு குறிப்பு தருகிறோம். அதாவது பாம்பு அதன் நிறத்திற்கு ஏற்றார் போன்ற இடத்தில் கச்சிதமாக தன்னை மறைத்துக்கொண்டுள்ளது. அதை கண்டுபிடிப்பதில் உங்களுக்கு இன்னும் சிக்கல் இருந்தால், புகைப்படத்தில் கல்லறைக்கு அருகேயுள்ள அடிப்பகுதியை கூர்ந்து கவனியுங்கள்.



ஆம், நீங்கள் பார்ப்பது சரியானதைத் தான். கல்லறைக்கு அருகே சுருண்டது போல் இருப்பது கல்லறையின் அடிப்பகுதி அல்ல, அது ஒரு பாம்பு. இந்த சவால் மிகவும் சுவாரஸ்யமாக இருந்ததால் உங்கள் கருத்துக்களை கமெண்டில் பதிவிடுங்கள். புதிர் விளையாட்டை இன்னும் சுவாரஸ்யமாக்க வேண்டும் என நினைப்பவர்கள், இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படத்தை நண்பர்களுக்கு பகிர்ந்து, அதனை குறிப்பிட்ட நேரத்திற்குள் கண்டுபிடிக்கும் படி சவால் விடுங்கள்.
Published by:Selvi M
First published:

Tags: Optical Illusion, Trending

அடுத்த செய்தி