Home /News /trend /

கிளிக்குள் மறைந்திருக்கும் பெண்ணை 5 வினாடிக்குள் கண்டுபிடித்தால் நீங்கள் தான் அதிபுத்திசாலி.!

கிளிக்குள் மறைந்திருக்கும் பெண்ணை 5 வினாடிக்குள் கண்டுபிடித்தால் நீங்கள் தான் அதிபுத்திசாலி.!

ட்ரெண்டிங்

ட்ரெண்டிங்

Optical illusion | அழகான கிளிக்குள் மறைந்திருக்கும் பெண்ணை நீங்கள் 5 வினாடிகளில் கண்டுபிடித்துவிடுகிறீர்கள் என்றால் உங்களை விட அதிபுத்திசாலி யாரும் இல்லை என்ற ஆப்டிகல் இல்யூசன் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
நமது கண்கள் மற்றும் மூளைக்கு சவால் விடும் ஒளியியல் மாயை என்ற ஆப்டிகல் இல்யூசன் புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது. ஒரு ஆப்ஜைட்டுக்குள் மறைந்திருக்கும் புகைப்படங்களை நீங்கள் எத்தனை வினாடிகளுக்குள் கண்டுபிடிக்கிறோர்களோ? அதைப் பொறுத்து உங்களின் புத்திசாலித்தனம் இருக்கும். மேலும் பல ஆப்டிகல் இல்யூசன் புகைப்படங்கள் நமக்கு புதிர் போடும் வகையிலும் அமைந்திருக்கும். தற்போது பல அரசுத் தேர்வுகளிலும் ஒளியில் மாயைத் தொடர்பான கேள்விகள் இடம் பெறுவது வழக்கமாகிவிட்டது.

இதுபோன்று தன்னுடைய திறமையை சோதிக்கும் ஆப்டிகல் இல்யூசன் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிறது. ஆனால் இந்த ஒளியியல் மாயை புகைப்படம் வழக்கமானவற்றிலிருந்து வேறுபட்டதோடு நீங்கள் நினைப்பதை விட தந்திரமானது. அப்படி என்ன என்று கேட்கிறீர்களா? வாங்க நாமும் தெரிஞ்சுக்கலாம்…

அழகான வண்ணங்களுடன் உள்ள கிளி ஒன்றில் பெண் ஒருவர் மறைந்திருப்பதாகவும், இவரை நீங்கள் 5 வினாடிகளுக்குள் கண்டுபிடித்துவிட்டால் நீங்கள் தான் அதிபுத்திசாலி என்று கூறுகிறார்கள். வாங்க நாம் அதிபுத்திசாலியா? இல்லை திறமை இல்லாதவர்களா? என சோதிப்போம்.. இதோ உங்களுக்கான டைம் தொடங்கியாச்சு.. கண்டுபிடிச்சாச்சா.. இல்லையென்றால் உங்களுக்கு சில டிப்ஸ்களை இங்கே கொடுத்துள்ளோம்… இதோ…



டிப்ஸ் 1 : கிளியை நன்றாக உற்றுப்பாருங்கள்.. மறைந்திருக்கும் பெண் உங்களுக்குத் தெரிவார்கள்.. கண்டுபிடிச்சாச்சா? இல்லையா.. இதோ உங்களுக்கான இரண்டாவது டிப்ஸ்..

டிப்ஸ் 2 : கிளியின் கண்ணை நன்றாக உற்றுப்பாருங்கள்…. சில நேரங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்..

Also Read : படத்தில் மறைந்திருப்பது என்ன பறவை என கண்டுபிடியுங்கள்.? மூளைக்கு சவால் விடும் புகைப்படம் இணையத்தில் வைரல்.!

இப்பொழுதாவது கண்டுபிடிச்சிடீங்களா? நிச்சயம் குழப்பமான மனநிலையில் தான் நீங்கள் இருப்பீர்கள் என்று நினைக்கிறோம்.. முன்பே கூறியது போன்று இந்த புகைப்படம் வழக்கமான ஒளியில் மாயைப்போன்றது அல்ல.. முற்றிலும் வித்தியாசமானதோடு மிகவும் தந்திரமாக அமைந்துள்ளதை நம்மால் பார்க்க முடிகிறது அல்லவா? 5 வினாடிகளுக்கு மேல் ஆனாலும் நிச்சயம் உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது. வாங்க. நாங்களே பதிலைச் சொல்லி விடுகிறோம்.. கீழே படத்தில் வட்டமிட்டுள்ள இடத்தை பாருங்கள்.



இப்படி இணையத்தில் வைரலாகும் ஆப்டிகல் இல்யூசன் புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள்.. நிச்சயம் இது மாறுபட்ட ஒளியியல் மாயைப் புகைப்படம் தான் என தெரிவித்துள்ளனர். மேலும் “கிளியைப் போல் பெண் வேண்டும் என்றும் கிளியைப் போல பெண் இருந்தாலும் இருக்க குரங்குப்போல பெண்ணைத் தேடுவார்கள் என்ற பழமொழி தான் நியாபகத்திற்கு வருகிறது எனவும் சோசியல் மீடியாவில் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
Published by:Selvi M
First published:

Tags: Optical Illusion, Trending

அடுத்த செய்தி