ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

பாறைகளுக்கு இடையில் மறைந்திருக்கும் சிறுமி.! 13 வினாடிகளில் உங்களால் கண்டுபிடிக்க முடியுமா.?

பாறைகளுக்கு இடையில் மறைந்திருக்கும் சிறுமி.! 13 வினாடிகளில் உங்களால் கண்டுபிடிக்க முடியுமா.?

ஆப்டிகல் இல்யூஷன்

ஆப்டிகல் இல்யூஷன்

Optical illusion | இந்த ஆப்டிகல் இல்யூஷனில் மறைந்திருக்கும் சிறுமியை கண்டறிய வெறும் 13 வினாடிகள் மட்டுமே நேரம் உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆன்லைன் மற்றும் சோஷியல் மீடியாக்களில் தங்கள் நேரத்தை செலவிடும் மக்களுக்கு வேடிக்கை மற்றும் பொழுதுபோக்கிற்கான முக்கிய ஆதாரமாக ஆப்டிகல் இல்யூஷன்கள் இருந்து வருகின்றன.

எனவே சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன்கள் நெட்டிசன்கள் மத்தியில் வெகுவாக வைரலாகி வருகின்றன. நமது கண்கள் மற்றும் மூளைக்கு சவால் விடும் வகையில் இருப்பதால் ஆப்டிகல் இல்யூஷன்கள் நம் நேரத்தை சுவாரசியமாக செலவிட உதவுகின்றன. ஆப்டிகல் இல்யூஷன்கள் மூளையின் செயல்திறன் மற்றும் கண் பார்வை திறனை பரிசோதிக்க மற்றும் மேம்படுத்தி கொள்ள உதவுபவையாக இருக்கின்றன.

எனவே இந்த புதிர் விளையாட்டு நெட்டிசன்களை கவர்ந்திழுப்பதில் ஆச்சரியம் இல்லை. சில சமயங்களில் ஆப்டிக்கல் இல்யூஷனில்  மறைந்திருக்கும் புதிரை கண்டுபிடிக்க முடியாமல் குழம்பினாலும், மனதை ஒரு நிலைப்படுத்தி மூளையை ஆழமாக சிந்திக்க வைக்கின்றன என்பதால் இது ஒரு வகை மனபயிற்சியாக இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். ஆப்டிகல் இல்யூஷன்களில் மறைந்திருக்கும் புதிர்களுக்கான பதில் கண்டறிவது பெரும்பாலான நேரங்களில் அவ்வளவு எளிதானது அல்ல.

இதே போன்றதொரு ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒன்று சோஷியல் மீடியாவில் தற்போது வைரலாகி உள்ளது. இந்த இமேஜில் கண்னுக்கு அவ்வளவு எளிதில் புலப்படாத வகையில் இருக்கும் ஒரு பெண்ணை நீங்கள் கண்டுபிடித்து சொல்ல வேண்டும்.

Also Read : இந்த மரத்தில் எத்தனை முயல்கள் மறைந்திருக்கிறது என்பதை 5 நிமிடத்திற்குள் கண்டுபிடிக்க முடியுமா.?

பாறைகளுக்கு இடையில் ஒளிந்து கொண்டிருக்கும் சிறுமி...

கீழே நீங்கள் பார்க்க போகும் ஆப்டிகல் இல்யூஷன் இமேஜில் பாறைகள் நிறைந்த மலை உள்ளது. இந்த பாறைகளுக்கு மத்தியில் ஒரு பெண் குழந்தை மறைந்துள்ளது. உங்களது பார்வை கூர்மை திறனை டெஸ்ட் செய்யும் வகையில் உள்ள இந்த ஆப்டிகல் இல்யூஷனில் மறைந்திருக்கும் சிறுமியை கண்டறிய வெறும் 13 வினாடிகள் மட்டுமே நேரம் உள்ளது.

மேலே உள்ள இமேஜை உற்று உற்று பார்த்தும் அந்த சிறுமியை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லையா.! கவலை வேண்டாம். உங்களை போல பலரால் பாறைகளுக்கு இடையில் இருக்கும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை, பலரும் தங்கள் முயற்சியில் தோற்று டயர்ட்டாகி விட்டதாக சோஷியல் மீடியாவில் கமெண்ட் செய்து உள்ளனர். ஆனால் அந்த சிறுமி பாறைகளுக்கு மத்தியில் தான் இருக்கிறாள். சிறுமியை கண்டுபிடிக்க கொஞ்சம் பொறுமை தேவை. குறிப்பிட்ட ஆப்டிகல் இல்யூஷன் இமேஜை அப்படியே பார்த்தால் உங்களால் புதிரை கண்டுபிடிக்க முடியாது. அதற்கு இந்த இல்யூஷன் இமேஜை எவ்வளவு ஜும் செய்கிறீர்களோ அவ்வளவு சீக்கிரம் புதிரை கண்டுபிடிக்கலாம். Zoom செய்து பார்த்தால் இரு கைகளையும் காற்றில் அசைத்து, பாறைகளுக்கு இடையே நிற்கும் அழகிய சிறுமியை பார்க்க முடியும்.

Also Read : உடலை வில்லாய் வளைத்து உலக சாதனை படைத்த சிறுமி.. வைரல் வீடியோ

இன்னமும் உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கீழே படத்தில் வட்டமிட்டுள்ள இமேஜை பார்க்கவும்.

மேற்காணும் இந்த இமேஜை Zoom செய்து பார்த்தும் உங்களால் அந்த சிறுமியை சரியாக அடையாளம் காண முடியவில்லை என்று ஃபீல் செய்தால் கீழே உள்ள மற்றொரு இமேஜை பாருங்கள்.

என்ன, நீங்கள் மண்டையை போட்டு குழப்பி கொண்டிருந்த புதிருக்கான விடையை பார்த்து விட்டீர்களா...

Published by:Selvi M
First published:

Tags: Optical Illusion, Trending