Home /News /trend /

ஆயிரத்தில் ஒருவரால் மட்டுமே இந்த படத்தில் மறைந்திருக்கும் பூவை கண்டுபிடிக்க முடியும்... நீங்கள்?

ஆயிரத்தில் ஒருவரால் மட்டுமே இந்த படத்தில் மறைந்திருக்கும் பூவை கண்டுபிடிக்க முடியும்... நீங்கள்?

Trending

Trending

Optical illusion | ஆப்டிக்கல் இல்யூஷன்கள் நம் கண்களை ஏமாற்றும் ஒன்றாக இருக்கிறது.

புதிர் மற்றும் சவால் அடங்கிய ஆப்டிகல் இல்யூஷன்கள் சில நாட்களாக சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. ஒரு புதிரை தீர்க்கும் விதமும், அதைப் புரிந்து கொள்ளும் கலையும் ஒருவருக்கு மிகவும் புத்திசாலித்தனமான மற்றும் புரிந்து கொள்ளும் ஆளுமை இருப்பதை வெளி காட்டுகிறது.

ஆப்டிக்கல் இல்யூஷன்கள் நம் கண்களை ஏமாற்றும் ஒன்றாக இருக்கிறது. நாம் அதை பார்க்கும் முதல் பார்வையில் சட்டென்று ஒரு தோற்றமும், தொடர்ந்து அதையே கூர்ந்து பார்க்கும் போது வேறு தோற்றமும் புலப்படும். சில நேரங்களில் மறைந்திருக்கும் உருவங்களை கண்டுபிடிக்கும் சவால்களுடன் வரும். சவால்களுடன் வரும் ஆப்டிகல் இல்யூஷன்களை சமீப நாட்களாக பார்த்து வருகிறோம்.

இப்போது இங்கே நீங்கள் மற்றொரு ஆப்டிகல் இல்யூஷன் சவாலை பார்க்க போகிறீர்கள். கொடுக்கப்பட்டிருக்கும் படத்தில், நீங்கள் ஒரு அழகான சிறிய பூவை கண்டுபிடிக்க வேண்டும். பல பொருட்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் ஒரு பூவை எளிதாக கண்டுபிடிக்க முடியும் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் அது கொஞ்சம் கடினமே. ஏனென்றால் மறைந்திருக்கும் சிறிய பூவை கண்டுபிடிப்பது ஒரு சவால் என்றால் அதை வெறும் 25 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்பது மற்றொரு சவாலான பணியாகும்.

பிரிட்டிஷ் மட்பாண்ட நிறுவனமான 'Portmeirion' உங்களின் மூளைத் திறன் மற்றும் பொருட்களை கண்டுபிடிக்கும் உங்கள் திறனைச் சோதிக்க இந்த ஆப்டிகல் இல்யூஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு picnic puzzle என்று பெயர் குறிப்பிட்டுள்ளது நிறுவனம். கீழே உள்ள ஆப்டிகல் இல்யூஷன் இமேஜை பாருங்கள்...



வைரலான இந்த இமேஜ் நெட்டிசன்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு யூஸர் 3 நிமிடங்களுக்கு மேல் தேடியும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிறர். மற்றொரு யூஸர் கருத்து தெரிவிக்கையில், “இது உண்மையில் என் மனதை குழப்பிவிட்டது" என்று புலம்பி உள்ளார். அது சரி ஹாம்பர்கர்ஸ், பிரெட், பழங்கள் மற்றும் சீஸ், கூடைகள், தட்டுப் பாத்திரங்கள் மற்றும் கோப்பைகள் உள்ளிட்ட பலவற்றுக்கு மத்தியில் பூ எங்கே இருக்கிறது என்பதை நீங்கள் 25 வினாடிகளுக்குள் கண்டுபிடித்தீர்களா.? கண்டுபிடிக்க முடியாவிட்டால் இங்கே ஒரு ஹின்ட் தருகிறோம். பூவை நீனால் இமேஜின் எல்லா பக்கத்திலும் தேடாமல் வலது பக்கத்தில் மட்டும் தேடி பாருங்கள்..

Also Read : ஐஸ்கிரீம்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் லாலிபாப்... 1 நிமிடத்தில் கண்டுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ்

இப்போதும் உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லையா.? சரி கீழ் வலது மூலையில் உற்று பாருங்கள். ஏனென்றால் மறைந்திருப்பது சிறிய வெள்ளை நிற பூ. கடைசி வரை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை எனில் கீழே விடை அடங்கிய இமேஜ் கொடுத்திருக்கிறோம், பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்...



ஆம், வலது மூலையில் கூடையைச் சுற்றி இரண்டு ஹாம்பர்கர்ஸ் இருக்கிறதல்லவா. இந்த இரண்டுக்கும் பின்னால் பதுங்கியிருக்கிறது அந்த பூ..
Published by:Selvi M
First published:

Tags: Optical Illusion, Trending

அடுத்த செய்தி