Home /News /trend /

13 வினாடிகள் டைம்.. இந்த படத்தில் மறைந்திருக்கும் முதலையை கண்டுபிடிக்க முடியுமா?

13 வினாடிகள் டைம்.. இந்த படத்தில் மறைந்திருக்கும் முதலையை கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion

Optical illusion

Optical illusion | ஆப்டிகல் இல்யூஷன்களாக இருந்தாலும் சரி, மனதைக் கவரும் புதிர்களாக இருந்தாலும் சரி அவற்றைத் தீர்க்க அமர்ந்தால் விடையை கண்டறியும் வரை சிலருக்கு எழுந்திருக்க மனமிருக்காது.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது பரபரப்பான அன்றாட வாழ்க்கையிலிருந்து சற்று இளைப்பாற உதவும் ஒன்றாகும். மேலும் இது கண்கள் மற்றும் மூளைக்கு நல்ல பயிற்சியாகும். மேலும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சுவாரஸ்யமான மற்றும் பொழுதுபோக்கு புதிர்கள் மட்டுமல்ல, இறுதியில் ஒரு பெரிய குழப்பம் மற்றும் ஆச்சரியத்தையும் அளிக்கின்றன. ஏனெனில் ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விடையை கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல. நமது கண்களையும், மூளையையும் ஏமாற்ற கூடிய பல விஷயங்கள் ஆப்டிகல் இல்யூஷன்களில் ஒளிந்திருக்கும்.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷனில் மறைந்திருக்குக்கும் முதலையை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் இது அவ்வளவு எளிதல்ல. ஏனென்றால் இந்த முதலை ஒரு நீர்நிலையில் நீர்வாழ் தாவரங்களுக்கு மத்தியில் மறைந்து இருக்கிறது. அந்த முதலையை வெறும் 13 வினாடிகளில் கண்டுபிடித்துவிட்டால், நீங்கள் உண்மையிலேயே ஒரு திறமையானவர் தான். ஏனென்றால், மிக குறுகிய வினாடிகளில் அதை கண்டுபிடிப்பது எளிதல்ல. நீங்களே முயற்சி செய்து பாருங்கள்.

கீழே உள்ள ஆப்டிகல் இல்யூஷன் இமேஜை சியாட்டிலைச் சேர்ந்த வனவிலங்கு புகைப்படக் கலைஞர் ஆர்ட் வுல்ஃப் எடுத்துள்ளார். இந்த இமேஜில் நீர் நிலையில் வளர்ந்துள்ள நீர்வாழ் தாவரங்கள் சூழ்ந்திருப்பதை காணலாம். சூழ்ந்துள்ள நீர்வாழ் தாவரங்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் முதலையை நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்களா? இல்லை என்றால் நீங்கள் இன்னும் கவனமாக இமேஜை உற்று பாருங்கள்.



தாவரங்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் முதலை உங்களை நேரடியாக பார்த்து கொண்டிருக்கிறது. மேலும் சவால் என்னவெனத்தை உங்களுக்கு நினைவூட்டுகிறோம். 13 வினாடிகளில் நீங்கள் முதலையை கண்டுபிடித்தாக வேண்டும். 13 வினாடிகள் கடந்தும் கண்டுபிடிக்க முடியவில்லையா.! இங்கே சில ஹின்ட்ஸ்களை வழங்குகிறோம்.

Also Read : ஐஸ்கிரீம்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் லாலிபாப்... 1 நிமிடத்தில் கண்டுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ்

- முதலை நீருக்கடியில் மறைந்துள்ளது

- முதலை அதன் இலக்கை நோக்கி பாய்கிறது

- மறைந்திருக்கும் முதலையை கண்டறிய படத்தை மேலிருந்து கீழாக பார்க்கவும்

Also Read : துல்லியமான கண்பார்வை கொண்டவரா? இந்த படத்தில் மறைத்திருக்கும் 25 விலங்குகளை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்

ஹின்ட்ஸ் கொடுத்ததும் முதலையை இன்னும் நீங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் நீர்வாழ் தாவரங்களுக்கு இடையில் சுற்றுபுறத்துடன் கலந்துள்ளது. இப்போது படத்தைப் பாருங்கள். பெரும்பாலானோர் முதலையை இந்நேரம் கண்டுபிடித்திருப்பீர்கள். இறுதி வரை கண்டறிய முடியாதவர்கள் விடையை காண கீழே படத்தில் வட்டமிட்டுள்ள இடத்தை பாருங்கள்.



இந்த ஆப்டிகல் இல்யூஷன் உங்கள் கண்களுக்கும், மூளைக்கும் நல்ல வேலை கொடுத்திருக்கும் என நம்புகிறோம். உங்களின் கண் திறனை மேம்படுத்த இதுபோன்ற ஆப்டிகல் இல்யூஷன்கள் உதவலாம்.
Published by:Selvi M
First published:

Tags: Optical Illusion, Trending

அடுத்த செய்தி