ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

இந்த படத்தில் மறைந்திருக்கும் பூனையை 13 வினாடிகளில் உங்களால் கண்டுபிடிக்க முடியுமா.?

இந்த படத்தில் மறைந்திருக்கும் பூனையை 13 வினாடிகளில் உங்களால் கண்டுபிடிக்க முடியுமா.?

ஆப்டிகல் இல்யூஷன்

ஆப்டிகல் இல்யூஷன்

Optical illusion | கீழ் நீங்கள் பார்க்க போகும் ஆப்டிகல் இல்யூஷனில் மறைந்திருக்கும் பூனையை வெறும் 13 வினாடிகளில் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒவ்வொரு நாளும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வரும் ஆப்டிகல் இல்யூஷன்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் ஈர்க்கின்றன. சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் கவர்ந்துள்ள ஆப்டிகல் இல்யூஷன்கள் மூளையின் செயல்திறன் மற்றும் கண் பார்வை திறனை பரிசோதிக்க மற்றும் மேம்படுத்தி கொள்ள உதவுபவையாக இருக்கின்றன.

கண்கள் மற்றும் மூளையை ஏமாற்றும் ஆப்டிகல் இல்யூஷன்கள் பல நெட்டிசன்களை குழப்பத்தில் ஆழ்த்தினாலும் அவை பெரும் வரவேற்பை பெறுவதற்கு காரணம் புதிர் அல்லது சவாலை தீர்க்கும் முயற்சியில் கிடைக்கும் சுவாரஸ்யம் தான். பூனைகள் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் ஒரு உயிரினம். மேலும் சிறிய பிளவுகள் மற்றும் இடைவெளிகளுக்குள் சென்று மறைந்து கொள்வதில் இவை பிரபலமானவை.

பூனையை மையமாக வைத்து தான் இப்போது நாம் பார்க்க போகும் ஆப்டிகல் இல்யூஷன் இருக்கிறது. கீழ் நீங்கள் பார்க்க போகும் ஆப்டிகல் இல்யூஷனில் பூனை ஒன்று மறைந்துள்ளது. மறைந்திருக்கும் பூனையை வெறும் 13 வினாடிகளில் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

சோஷியல் மீடியாவில் வைரலாகி வரும் இந்த சுவாரசிய ஆப்டிகல் இல்யூஷன் இமேஜில் மறைந்திருக்கும் பூனையை நிர்ணயிக்கப்பட்ட 13 வினாடிகளில் 1% பேர் மட்டுமே கண்டுபிடித்து உள்ளனர். நீங்கள் அந்த 1 சதவீதத்தில் ஒருவரா என்பதை பார்க்கலாம். கீழே நீங்கள் பார்க்க போகும் ஆப்டிகல் இல்யூஷனில் பூனை எங்கு மறைந்துள்ளது என்பதை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா.?

மரம், சிவப்பு வேலி, வெயில் இவற்றுக்கு மத்தியில் சிறிய உயிரினமான பூனை எங்கு மறைந்துள்ளது என்று 13 வினாடிகளில் கண்டறிவது என்பது நிச்சயமாக கொஞ்சம் கடினமான வேலை தான். ஆனால் திரும்ப திரும்ப இந்த இமேஜை உற்று பார்த்தீர்கள் என்றால் உங்களால் பதிலை கண்டறிந்து விட முடியும். உங்கள் கண்களின் பார்வை திறன் 100 சதவீதம் ஷார்ப்பாக இருந்தால் 13 வினாடிகளில் பூனையை கண்டறிந்து இருப்பீர்கள். ஆனால் நாம் ஏற்கனவே குறிப்பிடப்படி சுமார் 1% மக்கள் மட்டுமே இந்த 13 வினாடி சவாலில் ஜெயித்துள்ளதை கருத்தில் கொண்டு நேரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பூனையை கண்டுபிடிக்க நீங்கள் முயற்சிக்கலாம்.

Also Read : ரயில் பாதையில் எந்த மஞ்சள் கோடு நீளமானது.? 10 வினாடிக்குள் கண்டுபிடித்தால் நீங்கள் தான் அதிபுத்திசாலி.!

இன்னும் உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் உங்களுக்கு ஒரு க்ளூ தருகிறோம். இமேஜில் காணப்படும் சிவப்பு வேலிக்கு அருகில் தான் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய பூனை இருக்கிறது. சிவப்பு கூரான வேலிக்கு மத்தியில் பாருங்கள் பூனை தெரியும். எனவே சிவப்பு வேலியை உன்னிப்பாக கவனியுங்கள். இப்போதும் உங்களால் அந்த பூனையை கண்டுபிடிக்க முடியவில்லையா..! பூனை எங்கிருக்கிறது என்பதை நீங்கள் அறிய கீழே விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள இமேஜை பாருங்கள்.

பலர் இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏற்றுக்கொண்டு மறைந்திருக்கும் பூனையை கண்டுபிடிக்க ஆர்வம் காட்டுவதால் சோஷியல் மீடியாக்களில் இது வைரலாகி வருகிறது.

Published by:Selvi M
First published:

Tags: Optical Illusion, Tamil News, Trending