Home /News /trend /

மறைந்திருக்கும் பறவையை 7 வினாடிகளுக்குள் கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடிதான்! -

மறைந்திருக்கும் பறவையை 7 வினாடிகளுக்குள் கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடிதான்! -

Trending

Trending

Optical illusion | மேப்பிள் மர இலைகளுக்குள் நடுவில் மறைந்திருக்கும் பறவையை 7 வினாடிகளுக்குள் நீங்கள் கண்டுபிடித்துவிடுங்கள் என்று மூளைக்கு சவால்விடும் ஆப்டிகல் இல்யூசன் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
இன்றைக்கு சோசியல் மீடியாக்களில் டிரெண்டிங்காக இருக்கும் சில விஷயங்களில் ஆப்டிக்கல் இல்யூசன் புகைப்படங்களுக்குத் தனி மவுசு உள்ளது. இந்த ஒளியியல் மாயை புகைப்படங்கள் உங்களது அறிவாற்றல் திறன் வளர்ச்சி, நமது கண்கள் மற்றும் மூளைக்கு சவால் விடும் வகையில் அமைந்திருக்கும். இதோடு உங்கள் கவனத்தை மேம்படுத்த உதவும் ஆப்டிகல் இல்யூசன் எனப்படும் ஒளியியல் மாயை புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகிறது.

மேப்பிள் மர இலைகளுக்குள் அதே கலரில் மறைந்திருக்கும் பறவையை நீங்கள் 7 வினாடிகளுக்குள் கண்டுபிடித்துவிட்டால் நீங்கள் தான் உலக மக்கள் தொகையில் 1 சதவீத அதீத திறன் கொண்டவர்களாக இருப்பீர்கள் என்றும் உங்களுக்கு சவால் விடுத்துள்ளது.

உங்களுக்கு நேரம் கிடைத்தால் நிச்சயம் இந்த ஒளியியல் மாயை புகைப்படத்தில் ஒளிந்திருக்கும் பறவையை கண்டுபிடியுங்கள் என்று புகைப்படம் வைரலாகிறது. இந்த புகைப்படத்தை ஒரு சிலர் பார்த்தவுடன் கண்டுபிடிக்கலாம். ஆனால் ஒரு சிலரோ அதிக நேரம் எடுத்துக்கொள்ளலாம். இப்ப நீங்கள் 7 வினாடிகளுக்குள் இலைகளுக்குள் மறைந்திருக்கும் பறவையை கண்டுபிடித்துவிட்டீர்களா?



இல்லையென்றால் உங்களது பணியை எளிமையாக்கவும், விரைவாகவும் கண்டுபிடிக்க உங்களுக்கு சில க்ளூ தேவை என்று நினைக்கிறீர்களா? அப்படியென்றால் நீங்கள் கொஞ்சம் தந்திரமாக கண்டுபிடிக்க உங்களுக்கு உதவுகிறோம். இதோ உங்களுக்கான எளிய டிப்ஸ்கள்..

Also Read : இந்த பாண்டா கரடிகளுக்கு நடுவே மறைந்திருக்கும் நாய்க்குட்டியை 25 விநாடிகளுக்குள் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.! 

மேப்பிள் மர இலைகளுக்குள் மறைந்திருக்கும் பறவையை நீங்கள் கண்டுபிடிப்பதற்கு முதலில் உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள். பின்னர் உங்களது மொபைலில் டைமைரை செட் செய்து கண்டுபிடிக்க ஆரம்பியுங்கள். இதோ உங்களுக்கான க்ளு…

டிப்ஸ்  : முதல் க்ளு பறவை மேலே இல்லை..கண்டுபிடிக்க முடிந்ததா? இரண்டாவது க்ளு உங்களுக்காக பறவை இலைகளின் நிறத்தில் இருக்கும். நிச்சயம் நீங்கள் உங்களுக்கான பதிலை இப்போது பெற்றிருப்பீர்கள் என்று நினைக்கிறோம். கண்டுபிடித்தவர்களுக்கு எங்களது வாழ்த்துக்கள் மற்றும் அதிபுத்திசாலியான மற்றும் கூர்மையான அறிவுத்திறன் பெற்ற 1 சதவீத மக்களுள் நீங்களும் ஒருவராக இணைந்துவிட்டீர்கள்.

Also Read : பாம்பை நடக்க வைத்த இளைஞனின் கண்டுபிடிப்பு....இணையத்தில் வைரல்

ஒருவேளை உங்களால் இந்த ஆப்டிகல் இல்யூசன் புகைப்படங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் தொடரந்து முயற்சித்து நீங்கள் ஜீனியஸ் ஆக மாறுங்கள். அதுவும் 7 வினாடிகளுக்குள் கண்டுபிடித்தால் உங்களுக்கு அதீத திறன் உள்ளது என்று அர்த்தம். இறுதி வரை கண்டறிய முடியாதவர்கள் விடையை காண கீழே படத்தில் வட்டமிட்டுள்ள இடத்தை பாருங்கள்.



இந்த ஒளியியல் மாயை புகைப்படத்தை இணையத்தில் பார்த்த நெட்டிசன்கள் பலர்,  உடனே பறவையை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், கொடுத்த வினாடிகளுக்குள் கண்டுபிடிப்பது என்பது சவாலான விஷயம் என தெரிவித்தனர். இதோடு சில நேரங்களில் நம்முடைய புத்திசாலித்தனத்தை நாமே சோதிக்க முடிகிறது என்றும் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். இது போன்று சோசியல் மீடியாவில் வைரலாகும் புகைப்படங்களை யாருடைய உதவி இல்லாமல் கண்டுபிடிக்க நீங்கள் முயற்சிக்கும் போது நீங்கள் அதிபுத்திசாலியாக தான் இருப்பீர்கள்.
Published by:Selvi M
First published:

Tags: Optical Illusion, Trending

அடுத்த செய்தி