முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / வனத்திற்குள் மறைந்திருக்கும் கொரில்லா எங்கே.? 12 வினாடிகளுக்குள் கண்டுபிடித்தால் நீங்கள் தான் மேதாவி.!

வனத்திற்குள் மறைந்திருக்கும் கொரில்லா எங்கே.? 12 வினாடிகளுக்குள் கண்டுபிடித்தால் நீங்கள் தான் மேதாவி.!

ஆப்டிகல் இல்யூஷன்

ஆப்டிகல் இல்யூஷன்

Optical Illusion | சிலரால் விரைவில் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு கேள்விகள் அமைந்திருக்கும் ஒளியியல் மாயை புகைப்படம் ஒன்று தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகிறது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்றைக்கு இளைஞர்களைத் தன் வசம் கட்டிப்போட்டுள்ளது சோசியல் மீடியாக்கள். இணையத்தை பொழுதுபோக்கு அம்சத்திற்காக ஒருபுறம் பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் நிலையில், இந்த வார்த்தைகளைப் பொய்யாக்கி வருகிறது ஒளியியல் மாயை என்கின்ற ஆப்டிகல் இல்யூசன் புகைப்படங்கள். ஆம் ஒரு படத்தில் மறைந்திருக்கும் விலங்குகள் அல்லது இடத்தை எத்தனை வினாடிகளுக்குள் நீங்கள் கண்டுபிடிக்கிறீர்கள்? ஒளிந்திருக்கும் புது விஷயங்கள் என்னென்ன? என்பது போன்ற விபரங்களை 5, 10 வினாடிகள் அல்லது 1 நிமிடத்திற்குள் கண்பிடிக்க வேண்டும் என்பது போன்று நமது மூளைக்கும் கண்களுக்கும் சவால் விடும் ஒளியியல் மாயைப் புகைப்படங்கள் சமீப காலங்களாக வைரலாகி வருவதை நாம் பார்த்திருப்போம்.

இதுப்போன்ற புகைப்படங்களை சிலர் எளிதில் கண்டுபிடித்துவிடுவார்கள்.. ஆனால் சிலரால் விரைவில் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு கேள்விகள் அமைந்திருக்கும். அப்படியொரு ஒளியியல் மாயை புகைப்படம் ஒன்று தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகிறது.

கொரில்லா எங்கே உள்ளது?

தற்போது இணையத்தில் நீண்ட அழகான மரங்களுடன் வனப்பகுதி ஒன்று இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று நமக்கு காட்சியளிக்கிறது. இதில் மரங்களுக்குள் கொரில்லா ஒன்று மறைந்திருக்கிறது என்றும், இதை நீங்கள் 12 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா? என்று நெட்டிசன்களுக்குக் கேள்வி எழுப்பியுள்ளது.  குறிப்பிட்ட வினாடிகளுக்குள் கண்டுபிடித்தால் நீங்கள் தான் ஜீனியஸ் என்றும் உங்களது அறிவு மற்றும் செயல்திறன் கூர்மையாக உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. இதோ நீங்கள் கண்டுபிடித்து புத்திசாலிகளின் பட்டியலில் இடம் பெறுங்கள்.. ஒரு வேளை கண்டுபிடிக்கவில்லை என்றால், இதோ உங்களுக்கான டிப்ஸ்..

டிப்ஸ் 1:

இணையத்தில் வைரலாகும் இந்த புகைப்படத்தை நன்றாக உற்றுப்பாருங்கள். முதலில் நீங்கள் பார்த்தவுடன் வனத்திற்குள் நீண்ட மரங்களும், பச்சைப் புல்களுக்கு இடையே ஒரு வெள்ளை நிற கல் போன்று தெரியவரும். அதற்குள் கொரில்லா எதுவும் அமர்ந்திருக்கிறதா? என்று தான் முதலில் நாம் பார்ப்போம். ஆனால் அதில் இல்லை.

Also Read : இந்த படத்தில் மறைந்திருக்கும் யானையை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா.?

டிப்ஸ் 2:

அடுத்தப்படியாக வேறு எங்கே உள்ளது? என தேட ஆரம்பியுங்கள். நீங்கள் பார்த்த பெரிய கல் உள்ள இடத்தில் உள்ள மரத்திலிருந்து சற்று அதே நேர்க்கோட்டில் வலது கை பக்கம் பார்க்கவும். கண்டுபிடித்துவிட்டீர்களா? இல்லை என்றால் இதோ உங்களுக்கான 3வது டிப்ஸ்..

Also Read : கேன்சரால் பாதிக்கப்பட்ட தங்கையை நெகிழ வைத்த அண்ணன்! கலங்க வைக்கும் வீடியோ!

டிப்ஸ் 3 :

நீங்கள் புகைப்படத்தைப் பார்த்தவுடன் உங்களது வலது கை பகுதியில் இருந்து 2 வது மரத்தை நன்றாக உற்று நோக்குங்கள். இதோ ஒரு கொரில்லா குரங்கு ஒன்று மரத்திற்கு பின்புறம் இருந்து நம்மை எட்டிப்பார்ப்பது போன்று நமக்குக் காட்சியளிக்கும்.

நீங்கள் புகைப்படத்தை எந்தவொரு டிப்ஸ் இல்லாமல் கண்டுபிடித்துவிட்டீர்கள்? என்றால் நீங்கள் தான் புத்திசாலி. இல்லையென்றாலும் கவலை வேண்டாம் நமது மூளைக்கும், கண்களுக்கும் சவால் விடும் இல்யூசன் புகைப்படங்கள் இணையத்தில் அடிக்கடி வைரலாகும். எனவே இனி நீங்களும், உங்களது குழந்தைகளோடு இதுபோன்று ஒளியியல் மாயை புகைப்படங்களோடு விளையாட மறந்துவிடாதீர்கள்.

First published:

Tags: Optical Illusion, Trending