Home /News /trend /

இந்த படத்தில் உள்ள காலி குவளையை 9 விநாடிக்குள் கண்டுபிடித்தால் நீங்கள் அதிபுத்திசாலிதான்.!

இந்த படத்தில் உள்ள காலி குவளையை 9 விநாடிக்குள் கண்டுபிடித்தால் நீங்கள் அதிபுத்திசாலிதான்.!

ஆப்டிகல் இல்யூஷன்

ஆப்டிகல் இல்யூஷன்

Optical illusion | மூளையின் செயல்பாடுகளைப் பற்றி கண்டறியவும் ஆப்டிகல் இல்யூஷன்கள் உதவுவதாக கூறப்படுகிறது. எனவே இன்று நாம் கண்ணுக்கும், மூளைக்கும் வேலை கொடுக்கக்கூடிய ஆப்டிகல் இல்யூஷனைப் பற்றித் தான் பார்க்கப்போகிறோம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
கடந்த சில மாதங்களாகவே சோசியல் மீடியாவை ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் புதிர் விளையாட்டு ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளது. தினந்தோறும் புதிது புதிதாக சவால்கள் விடுக்கப்பட்டாலும், அதனை சுவாரஸ்யம் குறையாமல் தீர்க்க நெட்டிசன்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். அந்த காலத்தில் எல்லாம் வாயில் புதிரைச் சொல்லி அதை கண்டுபிடிக்க சவால் விடுவார்கள், இப்போது இருக்கும் ஆன்லைன் தலைமுறையோ விதவிதமான ஆப்டிக்கல் இல்யூஷன் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வாட்ஸ்அப் மற்றும் சோசியல் மீடியாவில் ஷேர் செய்து புதிருக்கான சரியான விடையைக் கண்டுபிடிக்கும் படி சவால் விடுத்து வருகின்றனர். இதனால் ஆப்டிகல் இல்யூஷனுக்கான மவுசு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

அதுமட்டுமின்றி ஆப்டிகல் இல்யூஷன்களில் மறைந்திருக்கும் விஷயத்தை சரியாக கண்டுபிடிப்பது என்பது, நீங்கள் அந்த போட்டோவை எப்படி பார்க்கிறீர்கள், உணர்கிறீர்கள், எவ்வாறு கணிக்கிறீர்கள் என்ற பல வகையான விஷயங்களை அடிப்படையாக கொண்டது. இது நபருக்கு நபர் மாறுபடும், இந்த அவதானிப்பு திறன்கள் நமக்கு சின்ன சின்ன வேலைகளில் கூட, சிறப்பான முடிவுகளை எடுக்க உதவுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் மூளையின் செயல்பாடுகளைப் பற்றி கண்டறியவும் ஆப்டிகல் இல்யூஷன்கள் உதவுவதாக கூறப்படுகிறது. எனவே இன்று நாம் கண்ணுக்கும், மூளைக்கும் வேலை கொடுக்கக்கூடிய ஆப்டிகல் இல்யூஷனைப் பற்றித் தான் பார்க்கப்போகிறோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் காலி காபி கோப்பை ஒன்று மறைந்துள்ளது அதனை கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்பது தான் சவால்.



இந்த படத்தில் பல வகையான விலங்குகள் இருப்பதையும், ஒரு பறவை இருப்பதையும் காணலாம். உங்களால் முயல், நரி மற்றும் கரடியையும், அவற்றிற்கு அருகே ஒரு அழகான சிறிய பறவையையும் பார்க்க முடிகிறதா?. அத்துடன் பல குவளைகளில் ஐஸ்கிரீம், காபி, சாக்லெட் போன்ற பலவகையான பானங்கள் நிரப்பட்டுள்ளதையும் காணலாம். அதில் யாருமே எதிர்பாராத வகையில் ஒரே ஒரு கோப்பை மட்டும் காலியாக உள்ளது. அதனை 9 விநாடிகளுக்குள் கண்டுபிடிக்க வேண்டும்.

Also Read : வீட்டுக்குள் புகுந்த கரடி - கேக் சாப்பிட்டு, நீச்சல் குளத்தில் குளித்து குதூகலம்.! வைரல் வீடியோ

படத்தை மீண்டும் ஒருமுறை கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள் உங்களுக்கான நேரம் ஆரம்பமாக உள்ளது.

1...

2...
.
.
.
.

9...

நேரம் முடிந்துவிட்டது, இந்த புதிருக்கான விடையை கண்டுபிடித்திருப்பீர்கள் என நினைக்கிறோம். அப்படி நீங்கள் கண்டுபிடித்திருந்தால் உங்களுக்கு கூர்மையான கவனிப்புத் திறன் உள்ளது என்று அர்த்தம்.

Also Read : 9 வினாடிகளில் ஆந்தை கூட்டத்திற்கு மத்தியில் இருக்கும் பூனையை கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடி தான்!

விடையை கண்டுபிடிக்க முடியாதவர்கள் கவலைப்பட வேண்டாம், இறுதியாக ஒரு வாய்ப்பு கொடுக்கிறோம். காலியான குவளையைக் கண்டுபிடிக்க படத்தின் இடது பக்கத்தை நன்றாக கவனித்து பார்க்கவும்.



சாக்லேட், கிரீம் மற்றும் கிரீன் டீக்கு அருகேயுள்ள சிவப்பு நிற குவளை காலியாக இருப்பதைக் காணலாம். மனதைக் கவரக்கூடிய இந்த ஆப்டிகல் இல்யூஷனை ஹங்கேரிய கலைஞரான கெர்கெலி டுடாஸ் என்பவர் உருவாக்கியுள்ளார். சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் ஓவியத்தின் பெயர் டுடால்ஃப் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Selvi M
First published:

Tags: Optical Illusion, Trending

அடுத்த செய்தி