சோசியல் மீடியாவில் சமீபகாலமாக ஆப்டிகல் இல்யூஷன் அல்லது ஒளியியல் மாயை தொடர்பானப் புதிர்கள் வைராகி வருகிறது. வெறும் பொழுது போக்கு விஷயமாக மட்டுமில்லாமல், உங்களது ஆளுமை மற்றும் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் இது விளங்குகிறது. நமக்கு வரக்கூடிய புகைப்படங்களை நாம் கண்டுபிடிப்பதோடு மட்டுமின்றி, நண்பர்களுக்கும் அனுப்பி வைத்து புதிர் போடும் பழக்கமும் அதிகரித்துள்ளது. இதுப்போன்ற புத்திசாலித்தனமான ஆப்டிக்கல் இல்யூசன் புகைப்படங்களுக்கு இணையத்தில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது.
இது போன்று பல ஒளியியல் மாயை மக்களிடையே வலம் வரும் நிலையில், தற்போது இல்யூசன் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிறது. அந்த ஆப்டிகல் இல்யூசன்,மரக்குவியல்களுக்குள் உள்ள ஒரு பூனையைக் கண்டுபிடிக்க நமக்கு சவால் விடுகிறது. அதுவும் பார்வையாளர்கள் பூனையை 20 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க வேண்டுமாம்.. நீங்களும் பார்த்துடீங்களா? கண்டுபிடிச்சாச்சா? இல்லையா?
நிச்சயம் இதனை பார்க்கும் சிலர் உடனடியாக பூனை எங்கிருக்கிறது என்று கண்டுபிடித்துவிடலாம்? இல்லை சிலருக்கு சிறிதுநேரம் தேவைப்படலாம்.. எங்கு உள்ளது? அதுவும் மரக்குவியல்களுக்குள் பூனையின் நிறம் நிச்சயம் தெரியாது. கண்டுபிடிக்க சிறிது மூளையை செலவிட்டுத் தான் ஆக வேண்டும்.
ஆனால் இந்த படத்தை நீங்கள் பார்க்கும் போது வெறும் மரக்குவியல்கள் மட்டும் தான் தெரியும். அதற்கிடையில் பூனையை கண்டுபிடிப்பது என்பது அனைவருக்கும் மிகவும் சவாலான ஒன்று. இதனைப்பார்த்த பெரும்பாலான யூசர்கள், இந்த ஒளியியல் மாயைப்புகைப்படத்தில் ஒரு பெரிய டிரக், காலி இடங்கள் மற்றும் மரக்குவியல்களை தவிர வேறு எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவிக்கின்றனர்.
Also Read : 99 சதவீதம் பேர் தோல்வி... ஒரே ஒரு தீக்குச்சியை நகர்த்தி இந்த கணக்கை சமன் செய்ய முடியுமா.?
இது போன்று உங்களாலும் கண்டுபிடிக்க மிகவும் சிரமமாக உள்ளதா? கவலை வேண்டாம். நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம். இணையத்தில் வைரலாகும் ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படத்தை உன்னிப்பாக கவனியுங்கள். மரக்குவியல்களுக்கு நடுவில் பெரிய டிரக் காலி, காலி இடம், ஒரு டென்ட் போன்றவை முதலில் நம் கண்களுக்குத் தெரியும். இதன் பின்னர் இப்படத்தின் வலது மூளையில் ஒரு பெரிய தடினமான மரத்தைச்சுற்றி பூனைக்குட்டிகள் பதுங்கிருப்பதை காணலாம். இப்படத்தில் நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக பூனைக்குட்டிகளை சுற்றி சிவப்பு நிறத்தில் வட்டம் போட்டு மார்க் செய்யப்பட்டிருக்கும். இப்ப நீங்கள் நிச்சயம் கண்டுபிடிச்சிருப்பீர்கள்.
முன்னதாக இந்த ஒளியியல் மாயைப்புகைப்படத்தை பார்த்த பெரும்பாலானர்கள் எங்களால் உடனடியாக பூனைகளை கண்டுபிடிக்க முயவில்லை என்றும், ஒரு சிலர் கண்டுபிடிப்பதற்கு நீண்ட நேரம் தேவைப்படுகிறது என இணையத்தில் கருத்துக்களைப் பகிர்ந்திருந்தனர். ஆர்வத்துடன் எங்கு இருக்கிறது என தேடவும்? இது போன்ற ஆப்டிகல் இல்யூசன்களைக் கண்டுபிடிக்க முயலும் போது எங்களுடைய திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பாக அமைவதாகவும், ஆனால் சில நேரங்களில் ஆப்டிகல் மாயைகள் வேண்டுமென்றே கடினமாக இருக்கும் கண்டுபிடிக்கவே முடியாது எனவும் தெரிவித்தனர்.
Also Read : பாகுபலி ராஜமாதா போல் தனது குழந்தையை மக்களுக்கு காட்டிய கொரில்லா - வைரல் வீடியோ
இதுப்போன்ற ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படங்களை நீங்களே யாருடைய முயற்சியும் இல்லாமல் கண்டுபிடித்துவிட்டால் உண்மையில் நீங்கள் புத்திசாலி தான். ஆப்டிக்கல் இல்யூஷனில் புலி என்றே கூறலாம். இனி நீங்களும் இணையத்தில் வைரலாகும் ஒளியியல் மாயையை கண்டுபிடிப்பதற்கு முயலுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.