Home /News /trend /

9 வினாடிகளில் ஆந்தை கூட்டத்திற்கு மத்தியில் இருக்கும் பூனையை கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடி தான்!

9 வினாடிகளில் ஆந்தை கூட்டத்திற்கு மத்தியில் இருக்கும் பூனையை கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடி தான்!

ஆப்டிகல் இல்யூஷன்

ஆப்டிகல் இல்யூஷன்

Optical illusion | ஆப்டிகல் இல்யூஷன்கள் கண்டுபிடிக்க எளிதாக இருந்தாலும் பெரும்பாலானவை நம் பொறுமையை சோதித்து விடும். அப்படி ஒரு ஆப்டிகல் இல்யூஷன் இமேஜ் ஒன்றை தான் இங்கே பார்க்க போகிறோம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
ஆப்டிகல் இல்யூஷன்கள் என்பவை அறிவுத்திறனை அதிகரிக்கவும், கவனிக்கும் திறனை மேம்படுத்தவும், IQ லெவலை அதிகரிக்கவும் உதவுகின்றன. நாள்தோறும் சோஷியல் மீடியாக்களில் பல ஆப்டிகல் இல்யூஷன்கள் வைரலாகி நெட்டிசன்களில் அறிவுத்திறனை சோதித்து வருகின்றன.

ஒரு சில ஆப்டிகல் இல்யூஷன்கள் கண்டுபிடிக்க எளிதாக இருந்தாலும் பெரும்பாலானவை நம் பொறுமையை சோதித்து விடும். அதே போல ஒரு சில ஆப்டிகல் இல்யூஷன்களை பார்த்த உடனேயே அதில் மறிந்திருப்பவற்றை ஈஸியாக கண்டுபிடித்துவிடலாம் எண்று தோன்றும். ஆனால் அதற்கான விடையை கண்டறிவதற்குள் கண்கள் கட்டிவிடும். இது போன்ற ஒரு ஆப்டிகல் இல்யூஷன் இமேஜ் ஒன்றை தான் இங்கே பார்க்க போகிறோம்.

கீழே நீங்கள் பார்க்க போகும் ஆப்டிகல் இல்யூஷன் இமேஜில் பல ஆந்தைகள் உள்ளன. இந்த ஆந்தைகளுக்கு மத்தியில் ஒரு பூனை ஒளிந்து கொண்டிருக்கிறது. அந்த பூனை எங்கே இருக்கிறது என்பதை நீங்கள் கண்டறிய வேண்டும். ஆனால் ஒரு நிபந்தனை என்னவென்றால், மறைந்திருக்குக்கும் பூனையை நீங்கள் வெறும் 9 வினாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும். அட இமேஜை பார்த்தால் அவ்வளவு கடினமான ஒன்றல்ல, எளிதாக கண்டுபிடித்து விடலாம் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் எண்ணம் நிச்சயம் தவறாக இருக்கும். மேலும் பூனையை 9 வினாடிகளில் கண்டுபிடிக்க முயற்சித்த பலரும் தங்களால் பல நிமிடங்கள் உற்று பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சோஷியல் மீடியாக்களில் கமெண்ட்ஸ் செய்து உள்ளனர்.

இப்போது கீழே இருக்கும் படத்தை நீங்கள் உற்று பாருங்கள்...



மேலே நீங்கள் படத்தில் பார்க்கும் கூட்டத்தில் உள்ள ஆந்தைகளில் பல வாயை அகலமாக திறந்திருக்கின்றன, சில மூடி இருக்கின்றன. பல ஆந்தைகளின் கண்கள் மஞ்சள் நிறத்தில் பளபளப்பதையும் நீங்கள் பார்க்க முடியும். இவற்றுக்கிடையில் மறைந்திருக்கும் பூனையை நீங்கள் 9 வினாடிகளில் கண்டுபிடிப்பது சவாலானது தான். இன்னும் நீங்கள் பூனையை கண்டறியவில்லை என்றால் ஒரு க்ளூ கொடுக்கிறோம்.

Also Read : இந்த யானை கூட்டத்தில் மறைந்திருக்கும் ஒரே ஒரு காண்டாமிருகத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா.?

இந்த இமேஜ் முழுவதையும் அலசி ஆராயாமல் வலது பக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்துங்கள். இப்போது உங்களால் பூனையை கண்டுபிடிக்க முடிந்ததா.! இப்போதும் முடியவில்லை என்றால் ஆந்தைகளின் காது படத்தில் தெரியாது ஆனால் பூனையின் காது தெரியும், அதே போல ஆந்தையின் திறந்திருக்கும் வாய்க்கும் பூனையின் வாய்க்கும் உள்ள வித்தியாசத்தை மனதில் வைத்து கொண்டு தேடி பாருங்கள். ஏனென்றால் ஆந்தைகளை போல பூனைகளுக்கு காதுகள் மற்றும் கூர்மையான அலகுகள் இல்லை. ஒருவேளை இப்போதும் உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கீழே பதில் வட்டமிடப்பட்டிருக்கும் இமேஜை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.



இறுதியாக நீங்கள் விடையை கண்டு கொண்டாலும் நிச்சயம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் உங்கள் கண்கள் மற்றும் கவனிக்கும் திறனை மேம்படுத்த உதவுவதில் முக்கிய பங்கு வகித்திருக்கும் என்று நம்புகிறோம்.
Published by:Selvi M
First published:

Tags: Optical Illusion, Trending

அடுத்த செய்தி