Home /News /trend /

இந்த யானை கூட்டத்தில் மறைந்திருக்கும் ஒரே ஒரு காண்டாமிருகத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா.?

இந்த யானை கூட்டத்தில் மறைந்திருக்கும் ஒரே ஒரு காண்டாமிருகத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா.?

ஆப்டிகல் இல்யூஷன்

ஆப்டிகல் இல்யூஷன்

Optical Illusion | ஆப்டிகல் இல்யூஷன்கள் எப்பொழுதும் அப்படியே தோன்றுவதை காட்டாது. ஏனென்றால் ஆப்டிகல் இல்யூஷன் இமேஜ்களில் பல ரகசியங்கள் மற்றும் புதிர்கள் மறைந்திருக்கும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
ஆப்டிகல் இல்யூஷன் என்பவை நம் மூளையின் செயல்திறன் மற்றும் கண் பார்வை திறனை பரிசோதிக்க மற்றும் மேம்படுத்தி கொள்ள உதவுபவையாக இருக்கின்றன. தற்போது பல வகையான ஆப்டிகல் இல்யூஷன் இமேஜ்கள் சோஷியல் மீடியாக்களில் பிரபலமாக உள்ளன. இவை ஒரு தரப்பு நெட்டிசன்களுக்கு வேடிக்கையான விஷயமாக இருந்தாலும், பலருக்கும் இது ஒரு புதிராக அமைகிறது.

பொதுவாக ஆப்டிகல் இல்யூஷன்கள் எப்பொழுதும் அப்படியே தோன்றுவதை காட்டாது. ஏனென்றால் ஆப்டிகல் இல்யூஷன் இமேஜ்களில் பல ரகசியங்கள் மற்றும் புதிர்கள் மறைந்திருக்கும். கண்ணை மற்றும் மூளையை ஏமாற்றும் ஆப்டிகல் இல்யூஷன்கள் நெட்டிசன்களை குழப்பத்தில் ஆழ்த்தினாலும் அவை பெரும் வரவேற்பை பெறுகின்றன. இதற்கு புதிரை கண்டறியும் முயற்சியில் கிடைக்கும் சுவாரஸ்யமே காரணமாக இருக்கிறது. தற்போது இதே போன்ற ஒரு ஆப்டிகல் இல்யூஷனை தான் இங்கே பார்க்க போகிறோம்.

யானை கூட்டத்தில் மறைந்திருக்கும் காண்டாமிருகம்:

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் இமேஜில் யானை கூட்டம் ஒன்றில் இருக்கும் சில குட்டி யானைகள் ஒரு சிவப்பு நிற பந்தை வைத்து விளையாடுவதை நம்மால் பார்க்க முடியும். இந்த யானை கூட்டத்தின் நடுவே தான் ஒரு காண்டாமிருகம் ஒன்றும் உள்ளது. இதை சில வினாடிகளில் நீங்கள் கண்டுபிடித்து விட்டால் கெட்டிக்காரர் தான். கீழே இருக்கும் படத்தை பாருங்கள்.



மேலே உள்ள படத்தை பார்த்து விட்டீர்களா.! யானைகளுக்கு மத்தியில் மறைந்திருக்கும் காண்டாமிருகத்தை பலரால் எளிதில் கண்டுபிடிக்க முடியவில்லை. உங்களால் முடிகிறதா.? இல்லை என்றால் மீண்டும் மீண்டும் முயற்சிக்கவும். உங்களால் கடைசி வரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் இங்கே க்ளூ கொடுக்கிறோம். மேலே உள்ள படத்தை கவனமாக பாருங்கள். அனைத்து யானைகளின் நிறமும் ஒரே மாதிரியாக இருக்கும் மற்றும் இவற்றோடு காண்டாமிருகத்தின் நிறமும் ஒன்றாக இருக்கிறது என்பதால் கண்டுபிடிக்க மிகவும் சிரமப்பட்டிருப்பீர்கள். இப்போது இந்த இமேஜின் மேல் வலது பக்கம் நன்றாக உற்று பாருங்கள். ஒரு கல் இருப்பதை காணலாம். இந்த கல்லின் மேல் தும்பிக்கையை வைத்தபடி யானை நிற்கிறது என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.

Also Read : இந்த படத்தில் மறைந்திருக்கும் 6 ஆங்கில வார்த்தைகளை கண்டுபிடித்தால் நீங்கள் தான் ரியல் ஜீனியஸ்!

ஏனென்றால் அது தான் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய காண்டாமிருகம். கீழே உள்ள இமேஜில் விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.



யானையின் தும்பிக்கை மற்றும் தந்தங்கள் என்று நீங்கள் பார்த்த அந்த உருவம் தான் காண்டாமிருகம் மற்றும் அதன் கொம்பு என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். இந்த ஆப்டிகல் இல்யூஷனுக்கான விடையை கண்டுபிடிக்க கொடுக்கப்பட்ட டைம் வெறும் 10 வினாடிகள் தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
Published by:Selvi M
First published:

Tags: Optical Illusion, Trending

அடுத்த செய்தி