ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

பாவம் இந்த முதியவருக்கு அவரது மனைவியை கண்டுபிடிக்க உதவ முடியுமா.?

பாவம் இந்த முதியவருக்கு அவரது மனைவியை கண்டுபிடிக்க உதவ முடியுமா.?

ஆப்டிகல் இல்யூஷன்

ஆப்டிகல் இல்யூஷன்

Optical Illusion | படத்தில் மறைந்திருக்கும் முதியவர் மனைவியின் முகத்தை வெறும் 11 விநாடிகளில் அடையாளம் காண முடிந்தால், அது உங்களது அசாத்திய புத்திசாலித்தனத்தின் அடையாளமாக இருக்கலாம்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

“என்ன தான் இருக்கு இந்த ஆப்டிகல் இல்யூஷனில்” என சோசியல் மீடியாவில் வைரலாகும் விஷயத்தைப் பார்த்து அலுத்துக்கொள்பவர்களுக்கு, அதில் உள்ள சுவாரஸ்யம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் ஆப்டிகல் இல்யூஷன் என்பது பொருள் அல்லது ஓவியத்தை மூளை எவ்வாறு உணருகிறது, மனதை கவர்கிறது, மாறும் வடிவத்தை கண்டறிய எப்படியெல்லாம் சிந்திக்க வேண்டியுள்ளது ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது. நிபுணர்களின் கருத்துப்படி, மூளைக்கு அதிகமாக வேலை வைப்பது அதன் சிந்தனை மற்றும் அறிவாற்றலை மேம்படுத்த உதவும் எனக்கூறுகின்றனர்.

ஆப்டிகல் இல்யூஷன்கள் எப்பொழுதும் நமது மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றி அறிய உதவுகிறது. நிறம், ஒளி மற்றும் வடிவங்களின் குறிப்பிட்ட சேர்க்கைகள் நம் மூளையில் இல்லாத ஒன்றை பார்வைக்கு உணர வைக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.ஆப்டிகல் இல்யூஷன்களைப் பொறுத்தவரை உடல், உடலியல் மற்றும் அறிவாற்றல் என மூன்று வகைகளில் உள்ளன. இந்த ஆப்டிக்கல் இல்யூஷன்கள் மனோ பகுப்பாய்வுத் துறையில் ஒரு பகுதியாகும், ஏனெனில் அவை நீங்கள் விஷயங்களை எப்படி உணருகிறீர்கள் என்பதை வைத்து ஆளுமை தொடர்பான பல்வேறு விஷயங்களை அறிய முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு சாதாரண மனித மூளை ஒவ்வொரு கோணத்திலிருந்தும் வித்தியாசமான உணர்வை உருவாக்கும் விஷயங்களை அல்லது படங்களைப் பார்க்க முடியும். தற்போது அப்படிப்பட்ட ஒரு ஆப்டிகல் இல்யூஷனை தான் உங்களுக்காக கொண்டு வந்துள்ளோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் பங்கேற்கக்கூடிய புதிர் இடம் பெற்றுள்ளது. இந்த படத்தில் ஒரு முதியவர் பண்ணையில் தனது மனைவியை தேடும் காட்சி இடம் பெற்றுள்ளது. ஆனால் இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் அவரது மனைவி அருகிலேயே மறைந்து கொண்டு முதியவரை தேட வைத்துள்ளார். ஆனால் இந்த ஆப்டிக்கல் இல்யூஷனுக்குள் கச்சிதமாக மறைந்துள்ள மூதாட்டியைக் கண்டுபிடிப்பது என்பது சுலபமான காரியம் அல்ல.

முதியவரின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா?

மேலே உள்ள ஓவியத்தில் தொப்பி அணிந்த முதியவர் ஒருவர், கையில் சிறிய தடியுடன் தனது பண்ணையைச் சுற்றி எதையோ தேடுவது போல் உள்ளது. ஆம், அந்த முதியவர் தனது மனைவியை தேடிக்கொண்டிருக்கிறார். இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் படத்தை உன்னிப்பாகப் பார்த்து, அதில் மறைந்திருக்கும் பெண்ணின் முகத்தைக் கண்டறிய வேண்டும், இதனை 11 விநாடிகளுக்குள் செய்து முடிக்க வேண்டும் என சவால் விடுக்கப்பட்டுள்ளது. மேலோட்டமாக பார்த்தால் முதியவரின் மனைவியை கண்டுபிடிப்பது கடினமான காரியமாக தோன்றலாம், ஆனால் படத்தை தலைகீழாக திருப்பி பிடித்து தேடினால் மூதாட்டியின் முகத்தை பார்க்க வாய்ப்புள்ளது.

Also Read : இந்த படத்தில் மறைந்திருக்கும் பல்லியை 9 வினாடிகளில் கண்டுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ்

படத்தில் மறைந்திருக்கும் முதியவர் மனைவியின் முகத்தை வெறும் 11 விநாடிகளில் அடையாளம் காண முடிந்தால், அது உங்களது அசாத்திய புத்திசாலித்தனத்தின் அடையாளமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆயிரக்கணக்கானோர் முயன்று தோற்ற இந்த புதிர் விளையாட்டில் விடையை அறிந்து கொள்ள படத்தை தலைகீழாக பாருங்கள். இப்போது முதியவருக்குப் பின்னால் உள்ள புதரில் மறைந்திருக்கும் பெண்ணின் முகத்தைக் காண முடியும்.

இறுதி வரை கண்டறிய முடியாதவர்கள் விடையை காண மேலே படத்தில் வட்டமிட்டுள்ள இடத்தை பாருங்கள்.

Published by:Selvi M
First published:

Tags: Optical Illusion, Trending