முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / ஐஸ்கிரீம்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் லாலிபாப்... 1 நிமிடத்தில் கண்டுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ்

ஐஸ்கிரீம்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் லாலிபாப்... 1 நிமிடத்தில் கண்டுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ்

Trending

Trending

Optical illusion | இன்று நாம் பார்க்க போகும் ஆப்டிக்கல் இல்யூஷன் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் ஐஸ்கிரீமை அடிப்படையாக கொண்டது.

  • 1-MIN READ
  • Last Updated :

கண்களுக்கும், மூளைக்கும் சவால் விட கூடிய வகையிலான ஆப்டிகல் இல்யூஷன்கள் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றன. ஆப்டிகல் இல்யூஷன்கள் என்பவை சில நேரங்களில் சுவாரஸ்யமாகவும், சில நேரங்களில் புதிராகவும் அமையும்.

ஐஸ்கிரீம் பிடிக்காது என்று சொல்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். புவி வெப்பமயமாதல் காரணமாக ஆண்டுதோறும் ஐஸ்கிரீம் விற்பனை அமோகமாக அதிகரித்து கொண்டே வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் பற்றி பேச துவங்கி விட்டு தற்போது ஏன் ஐஸ்கிரீமிற்கு செல்கிறீர்கள் என நீங்கள் யோசிப்பது புரிகிறது. ஆனால் அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. பொதுவாக ஆப்டிக்கல் இல்யூஷன்கள் சில நேரங்களில் நம் மனதை குழப்பி தடுமாற செய்கின்றன. அவற்றில் மறைந்திருக்கும் விலங்குகள் முதல் மனிதர்கள் வரை, நாம் பல ஆப்டிக்கல் இல்யூஷன்களை கண்டிருக்கிறோம்.

இன்று நாம் பார்க்க போகும் ஆப்டிக்கல் இல்யூஷன் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் ஐஸ்கிரீமை அடிப்படையாக கொண்டது. அதே சமயம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான லாலிபாப்பும் இதில் சம்பந்தப்பட்டு இருக்கிறது. ஆம், இன்று நீங்கள் பார்க்க போகும் ஆப்டிகல் இல்யூஷனில் ஐஸ்கிரீம்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் ஒரு லாலிபாப்-ஐ கண்டறிய வேண்டும்.

உலகளாவிய சவால்:

இந்த ஆப்டிகல் இல்யூஷனில் மறைந்திருக்கும் ஒரு லாலிபாப்-ஐ கண்டுபிடிப்பதே ஒரு பெரிய சவால் என்னும் போது 60 வினாடிகளில் அதாவது 1 நிமிடத்திற்குள் அதை கண்டுபிடிக்க வேண்டும் என்பது தற்போது உலகளாவிய சவாலாக மாறி சோஷியல் மீடியாக்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. கீழே உள்ள இந்த ஆப்டிகல் இல்யூஷனை ஹங்கேரிய கலைஞரான Gergely Dudas சமீபத்தில் முதலில் ஷேர் செய்து உலகளாவிய சவாலுக்கு வித்திட்டார். படத்தை உற்று பாருங்கள்.. 60 வினாடிகளுக்குள் லாலிபாப்பைக் கண்டுபிடிப்பதே சவால். நீங்கள் அதற்கு தயாராக இருக்கிறீர்களா?

இது உப்பில் சர்க்கரையின் படிகத்தைக் கண்டறிவது போன்ற சவால் என்றாலும், மறைந்திருக்கும் லாலிபாப்பை கண்டுபிடிக்க உங்களுக்கு சிறந்த காட்சி திறன்கள் தேவை. ஏனெனில் இந்த படத்தை பார்க்கும் போது ஐஸ்கிரீமை தவிர்ப்பது யாருக்கும் அவ்வளவு எளிதானது அல்ல. மேலே உள்ள ஐஸ்கிரீம்கள் நிறைந்த படத்தை பார்த்து விட்டீர்களா.! அதில் ஐஸ்கிரீமில் மகிழ்ச்சி முகங்களையும், சிலவற்றின் மேல் தொப்பி இருப்பதையும் கூட நீங்கள் காணலாம்.

Also Read : உங்களுக்கு பிடித்த நிறத்தை வைத்து ஆளுமை பண்பை அறிந்துகொள்ளுங்கள்.!

ஐஸ்கிரீமின் சில கூம்புகள் உயரமாக நிற்கின்றன, சில ஐஸ்கிரீம்கள் உயரமான கூம்புகளுக்குப் பின்னால் பதுங்கியிருக்கின்றன. இல்யூஷன் என்றால் இதுதான். தொடக்கத்தில் ஈசியாக கண்டுபிடித்து விடலாம் என்று உங்களுக்கு தோன்றி இருக்கலாம். ஆனால் உண்மை என்னவென்றால் நீங்கள் எவ்வளவு அதிகமாக உற்று பார்க்கிறீர்களோ அவ்வளவு தெளிவு குறையும்.

ஆனால் ஒருவர் தனது கவனத்தை ஆழமாக செலுத்தினால் லாலிபாப்பை எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். 60 வினாடிகளில் ஐஸ்கிரீம்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் லாலிபாப்பைக் கண்டறிவதற்கான தீர்வு கீழே...

Also Read : இந்த படத்தில் மறைந்திருக்கும் விலங்கை கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடி தான்!

லாலிபாப்பை எளிதாக கண்டுபிடிக்க வேண்டும் என்றால் நீங்கள் இந்த ஆப்டிகல் இல்யூஷனின் வலது மூலையில் அதிக கவனம் செலுத்தவும். அதிக IQ உள்ளவர்களில் 1% பேர் மட்டுமே இதை கண்டுபிடிக்க முடிந்துள்ளது என்பதால் இன்னும் உற்று பாருங்கள். 1 நிமிடமாகியும் உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லையா?

ஹின்ட்:

லாலிபாப் ஐஸ்கிரீம்களை போலவே பொருந்தி போனாலும் ஒரு கோனில் இல்லை, ஒரு ஸ்டிக்கில் உள்ளது. இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லையா.! சரி கீழே பாருங்கள்..

வலது மூலையில் உள்ள லாலிபாப்பை இப்போது பார்த்து விட்டீர்களா.. பலர் இந்த ஆப்டிகல் இல்யூஷனை பார்த்த 30 வினாடிகளில் லாலிபாப்பை கண்டுபிடித்ததாக சோஷியல் மீடியாக்களில் கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

First published:

Tags: Optical Illusion, Trending