ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

இந்த மரத்தில் எத்தனை முயல்கள் மறைந்திருக்கிறது என்பதை 5 நிமிடத்திற்குள் கண்டுபிடிக்க முடியுமா.?

இந்த மரத்தில் எத்தனை முயல்கள் மறைந்திருக்கிறது என்பதை 5 நிமிடத்திற்குள் கண்டுபிடிக்க முடியுமா.?

ஆப்டிகல் இல்யூஷன்

ஆப்டிகல் இல்யூஷன்

Optical illusion | மூளையை கசிக்கிப் பிழிந்து, கண்களை நன்றாக உற்றுநோக்கி கண்டுபிடிக்க வேண்டிய புதிர்களைக் கொண்ட ஆப்டிக்கல் இல்யூஷன்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் கவர்ந்திழுந்து வருகின்றன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மனதை கவர்ந்திழுக்க கூடிய, மூளைக்கு தீவிரமாக வேலை கொடுக்ககூடிய ஆப்டிகல் இல்யூஷன்கள் எப்போதுமே சோசியல் மீடியாவில் அதிக கவனம் பெறுகின்றன. உடல், உடலியல் மற்றும் அறிவாற்றல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட பல வகையான ஆப்டிக்கல் இல்யூஷன்கள் உள்ளன. இவை மனிதர்களின் குண நலன்கள், பண்புகள் ஆகியவற்றைக் கண்டறிய மனோ பகுப்பாய்வுத் துறையிலும் பயன்படுத்தப்படுகின்றன.

மூளையை கசிக்கிப் பிழிந்து, கண்களை நன்றாக உற்றுநோக்கி கண்டுபிடிக்க வேண்டிய புதிர்களைக் கொண்ட ஆப்டிக்கல் இல்யூஷன்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் கவர்ந்திழுந்து வருகின்றன. என்னால் தான் முடியவில்லை... மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என பார்க்கலாம் என... அதனை ஃபேமிலி வாட்ஸ்அப் குரூப், ப்ரெண்ட்ஸ் ஆகியோருக்கு பகிர்ந்து விடையை கண்டுபிடிக்கும் படி சவால் விடும் குறும்புத்தனம் காரணமாகவும், ஆப்டிக்கல் இல்யூஷன்கள் அதிகம் விரும்பப்படுகிறது.

குறிப்பாக மனிதனின் மூளை திறனைக் கண்டறியவும், அதன் செயல்பாட்டு வேகத்தை கணிக்கவும் ஆப்டிக்கல் இல்யூஷன்கள் பயன்படுகின்றன. தற்போது அப்படிப்பட்ட ஒரு புத்திசாலித்தனமான ஆப்டிக்கல் இல்யூஷன் இங்கே.

மரத்திற்குள் மறைந்திருக்கும் முயல்:

கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தை நன்றாக உற்றுப்பாருங்கள். பார்க்க ஏதோ இலையுதிர் காலத்தில் பெரும்பாலான இலைகள் அனைத்தும் உதிர்த்து, ஏதோ ஒன்றிரண்டு இலைகள் ஒட்டிக்கொண்டிருக்கும் மரம் உள்ளது. ஆனால் ஆப்டிக்கல் இல்யூஷனைப் பொறுத்தவரை இந்த மரத்தில் மொத்தம் 3 முயல்கள் மறைந்துள்ளன. மிகவும் தந்திரமான இந்த புதிரைக் கண்டுபிடிக்க இதுவரை ஆயிரக்கணக்கான நபர்கள் முயன்று தோல்வி அடைந்துள்ளனர்.போதாக்குறைக்கு பார்த்தாலே தலைசுற்ற வைக்கும் இந்த ஆப்டிக்கல் இல்யூஷனை 5 நிமிடத்திற்குள் கண்டுபிடிக்க வேண்டும் என சவால் விடுக்கப்பட்டுள்ளது.

அறிவுத்திறன் சோதனை:

ஆப்டிக்கல் இல்யூஷன்கள் எப்பொழுதும் நமது மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றிய வியத்தகு உணர்வை அளிக்கிறது. நிறம், ஒளி மற்றும் வடிவங்களின் குறிப்பிட்ட சேர்க்கைகள் நம் மூளையில் இல்லாத ஒன்றை பார்வைக்கு உணர வைக்கும். எனவே தான் வெறும் 5 நிமிடத்திற்குள் மரத்தின் உள்ளே மறைந்திருக்கும் முயல்களை அடையாளம் காண முடிந்தால், அது உங்களது அசாத்திய புத்திசாலித்தனத்தின் அடையாளமாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. கடினமான புதிர்களை கண்டுபிடிக்க எவ்வளவு முயற்சி செய்கிறீர்களோ, அது அந்த அளவுக்கு மூளையை கூர்மையாக்கி புத்திசாலியாக மாற்ற உதவும் என பல ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

Also Read : கண்களை ஏமாற்றும் வீடியோ - இரண்டில் எந்த ரிங் ஸ்பீடாக சுற்றுகிறது.!

  முயல்கள் எங்கு உள்ளன?

இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் படத்தை உன்னிப்பாகப் கவனியுங்கள். மரத்தின் உள்ளே மறைந்திருக்கும் முயல்களின் முகங்களைக் கண்டறிய முயற்சி செய்ய உதவும். முயலின் முகங்களைக் கண்டுபிடிப்பது மிகவும் தந்திரமானது என தோன்றலாம், ஏனெனில் அவை மிகவும் புத்திசாலித்தனமாக மரத்தின் சாய்ந்த கிளைகளுக்கு இடையில் மறைந்திருப்பதால் அவற்றைக் கண்டறிவது கிட்டத்தட்ட கடினம். எனவே மரக்கிளையை நன்றாக உற்றுப்பாருங்கள். குறிப்பாக இலைகளை கண்களாக கற்பனை செய்து கொண்டு அதனை வைத்து முழு உருவத்தையும் கண்டறிய முயற்சி செய்யுங்கள்.

Also Read : எனக்கு 60 அவருக்கு 30.. பழங்குடியின இளைஞருடன் அமெரிக்க பெண்ணுக்கு மலர்ந்த காதல்..!

ஒருவேளை படத்தில் மறைத்திருக்கும் 3 முயல்களையும் கண்டறியாமல் திண்டாடுபவர்களுக்காக கீழே நாங்கள் முயல்கள் மீது வண்ணம் திட்டப்பட்ட படத்தை இணைத்துள்ளோம். அதனைப் பார்த்து முயல்கள் எங்குள்ளன என அறிந்து கொள்ளுங்கள்...

சொந்த முயற்சியால் முயல்களை கண்டறிந்த நபர்கள் கமெண்ட்டில் தெரிவியுங்கள்...

Published by:Selvi M
First published:

Tags: Optical Illusion, Trending