ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

கடலில் மறைந்திருக்கும் புதையல் தெரிகிறதா? கண்டுபிடித்தால் நீங்கள் அதிர்ஷடசாலி தான்

கடலில் மறைந்திருக்கும் புதையல் தெரிகிறதா? கண்டுபிடித்தால் நீங்கள் அதிர்ஷடசாலி தான்

ஆப்டிகல் இல்யூஷன்

ஆப்டிகல் இல்யூஷன்

முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தை உன்னிப்பாகக் கவனியுங்கள்..

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஆப்டிகல் இல்யூசன் அதாவது ஒளியியல் மாயைப் புகைப்படங்கள் தற்போது காட்டுத்தீ போல நெட்டிசன்களில் வைரலாகிறது. இணையத்தில் வெளியாகும் படத்தில் எங்கே ஒரு மூளையில் ஒரு விலங்கு, பறவைகள் அல்லது புதையல்கள் என பல விஷயங்கள் ஒளிந்திருக்கும். நாம் பார்த்தவுடன் நிச்சயம் நமது கண்களுக்குத் தெரியாத வகையில் தான் இந்த ஒளியியல் மாயைப் புகைப்படங்கள் அமைந்திருக்கும். இதனை 30 வினாடிகள், 7 வினாடிகள் அல்லது 1 நிமிடத்திற்குள் கண்டுபிடித்துவிடுங்கள் என்று நமது கண்களுக்கும் மூளைக்கும் சவால்விடுவது வழக்கம். நாமும் என்ன தான் அதில் உள்ளது? சீக்கிரம் கண்டுபிடித்து விடலாம் என நினைத்து டிரை பண்ணும் போது தான் அய்யோ.. முடியலப்பா.. என்ற எண்ணம் தான் தோன்றும்.

  இப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகிறது. அது என்னவாக இருக்கும்? குறிப்பிட்ட நேரத்தில் நம்மால் கண்டுபிடித்து விட முடிகிறதா? என இணையவாசிகளாகிய நாமும் கண்டுபிடிக்க முயற்சி செய்துப் பார்ப்போம்..

  7 வினாடிகளில் புதையலைக் கண்டுபிடிக்க முடியுமா?..

  ஒளியியல் மாயையில் கடலுக்கு அடியில் நீருக்குள் ஜெல்லி மீன்கள், நட்சத்திர மீன்கள் மற்றும் ஒரு ஆக்டோபஸ் உள்பட பல ஏராளமான கடல் வாழ் உயிரினங்கள் நமது கண்களுக்குத் தெரிகிறது. அனைத்தும் நமது கண்களுக்குத் தெரிந்தாலும் கடலுக்கு அடியில் மறைற்திருக்கும் புதையலைக் கண்டுபிடிப்பது தான் இன்றைய டாஸ்க். இதற்குள் புதையல் ஒளிந்திருக்கிறதா? என்ன தான் உள்ளது? என கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆயிரக்கணக்கான நெட்டிசன்கள் ஈடுபட்டிருந்தால் சவால் விடும் நேரத்திற்குள் கண்டுபிடிக்க முடியாமல் திணறினர். குழப்பத்துடன் இதில் எங்கே இருக்கிறது? என தேடவும் ஆரம்பித்தனர்.

  Also Read : இந்த படத்தில் எவை உண்மையான கண்கள்?கண்டுபிடிங்க பார்க்கலாம்..

  நீங்கள் இந்த புகைப்படத்தில் உள்ள புதையலைக் கண்டுபிடித்து விட்டீர்களா? இல்லையென்றால் கொஞ்சம் முயற்சி செய்துப் பாருங்கள். இன்னும் கண்டுபிடிக்கவில்லையா? இதோ உங்களுக்கான டிப்ஸ்..

  வைரலாகும் புகைப்படத்தை நன்கு உற்றுப்பாருங்கள். எங்கே அதிகமாக கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் வாழ் தாவரங்கள் உள்ளது என கவனியுங்கள். இன்னும் தெரியவில்லையா?

  முதலில் உங்களிடம் உள்ள புகைப்படத்தை உன்னிப்பாகக் கவனியுங்கள். கடலின் படத்திற்குக் கீழே வலதுப் புற சிப்பியைப் பார்த்தால் மறைந்திருக்கும் புதையலை நீங்கள் கண்டுபிடிக்க முடியும். சிப்பிக்குள் முத்து இருப்பது தான் கடலுக்குள் உள்ள அற்புத புதையல். இதைத் தான் வெளிப்படையாகத் தெரிவிக்காமல் நமது மூளையின் திறனைச் சோதிக்கும் வகையில் இந்த கேள்விகளுடன் இந்த ஒளியியல் மாயைப் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

  உங்களில் யார் இதை 7 வினாடிக்குள் கண்டுபிடித்தீர்களோ? நிச்சயம் நீங்கள் அறிவுக்கூர்மை வாய்ந்தவர்கள் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

  இவ்வாறு இணையத்தைத் தேவையில்லாமல் ரீல்ஸ் வீடியோக்கள், மற்றும் யூடியூப்களில் பாடல்கள் பார்ப்பதற்கு மட்டும் பயன்படுத்தாமல் இனி இதுபோன்று மூளைக்கு சவால் விடும் ஆப்டிகல் இல்யூசன் புகைப்படங்களைப் பார்ப்பதற்கும் கற்றுக்கொடுக்க மறந்துவிடாதீர்கள்.

  Published by:Josephine Aarthy
  First published:

  Tags: Optical Illusion, Trending, Viral