Home /News /trend /

40 விநாடிக்குள் இந்த படத்தில் மறைந்திருக்கும் எத்தனை புலிகளை உங்களால் கண்டுபிடிக்க முடியும்.?

40 விநாடிக்குள் இந்த படத்தில் மறைந்திருக்கும் எத்தனை புலிகளை உங்களால் கண்டுபிடிக்க முடியும்.?

Trending

Trending

Optical Illusion | நன்றாக உற்றுப்பாருங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் மறைந்திருக்கும் 16 புலிகளையும் 40 விநாடிக்குள் கண்டுபிடிக்க முடிகிறதா? என பாருங்கள். ஏனென்றால் இதற்கான விடையை வெறும் ஒரு சதவீதம் பேர் மட்டுமே கண்டுபிடித்துள்ளார்களாம்.

மேலும் படிக்கவும் ...
    கடந்த சில மாதங்களாக ஆப்டிக்கல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயைகள் சோசியல் மீடியாவை ஆட்டிப்படைக்கும் விஷயமாக இருந்து வருகின்றன. மறைந்திருக்கும் உருவங்களை கண்டுபிடிப்பது, கண்ணுக்கு தெரியாத விஷயத்தை அடையாளப்படுத்துவது, ஒரு ஓவியத்திற்குள் ஒளித்திருக்கும் பல உருவங்களை வெளிச்சம் போட்டு காட்டுவது என நமது அறிவாற்றல் திறனுக்கு செமையாக வேலை வைக்க கூடிய ஆப்டிக்கல் இல்யூஷன்கள் இணையத்தில் ஏராளமாக கொட்டிக்கிடக்கின்றன. ஆப்டிக்கல் இல்யூஷன்கள் மீண்டும், மீண்டும் இணையவாசிகளால் அதிகம் விருப்பப்பட காரணம், அவை உங்கள் கண்கள் மற்றும் மூளையுடன் விளையாடும் கண்ணாமூச்சி விளையாட்டு தான்.

    தற்போது அப்படி கண்ணுக்கும், மூளைக்கும் ஒரே நேரத்தில் வேலை வைக்க கூடிய சுவாரஸ்யமான ஒரு ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படத்தை தான் நாங்கள் உங்களுக்காக கொண்டு வந்திருக்கிறோம். இது நீங்கள் இதுவரை பார்த்த பல ஆப்டிக்கல் இல்யூஷன் போட்டோக்களிலேயே கொஞ்சம் கடினமானதை இந்த முறை கொண்டுவந்துள்ளோம். ஏனெனில் இந்த ஆப்டிக்கல் இல்யூஷனுக்குள் மறைந்திருக்கும் 16 புலிகளின் உருவத்தையும் வெறும் 40 விநாடிக்குள் ஒரு சதவீதம் பேர் மட்டுமே கண்டுபிடித்துள்ளார்களாம்.

    டிக் டாக் யூஸர் ஹெக்டிக் நிக் இந்த சவாலை வெளியிட்டதில் இருந்தே இணையத்தில் இந்த புகைப்படம் தீயாய் பரவி வருகிறது. இந்த சவாலை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? அப்படியானால் உங்கள் கடிகாரத்தில் சரியாக 40 விநாடிகளை செட் செய்து கொண்டு, 16 புலிகளும் எங்கே மறைந்திருக்கின்றன என்பதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
    ரெடி.. ஸ்டார்ட்.. 1...40...



    நேரம் முடிந்து விட்டது! நீங்கள் எத்தனை புலிகளை கண்டுபிடித்தீர்கள்? என்பதை கமெண்ட்டில் சொல்லுங்கள்.

    Also Read : 30 நொடிக்குள் இந்த மரத்தில் எத்தனை ஆந்தைகள் அமர்ந்திருக்கு என கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.?

    16 புலிகளை கண்டுபிடிக்கலாம் வாங்க:

    மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் முதல் இரண்டு பெரிய புலிகளை கண்டுபிடிப்பது சுலபம். ஏனென்றால் அவை உங்கள் கண்களுக்கு முன்பே இருக்கின்றன. அதனை அடுத்து அவற்றின் குட்டி புலிகள் இரண்டு உள்ளன.

    Also Read : வெள்ளையாக பிறக்கும் குழந்தைக்கு மரண தண்டனை.. ஜாரவா பழங்குடியினரின் விசித்திர பழக்கவழக்கங்கள்

    இப்போது உங்கள் கண்களை அப்படியே வலதுபுறத்தில் உள்ள புதரை நோக்கி திருப்புங்கள். பச்சை இலைகளின் மறைவில் பாயக்காத்திருக்கும் அடுத்த புலி தெரிகிறதா?. பின்னால் உள்ள மரங்களைப் பார்த்தால், கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் 7 புலிகளைக் கண்டுபிடிக்க முடியும். உங்கள் கண்களை இடமிருந்து வலதுபுறமாக நகர்த்துங்கள்.



    இடது மரத்தின் தண்டில் ஒரு புலியின் முகமும், மரத்தின் அடியில் மற்றொரு புலியின் முகமும் தெரியும்.

    எனவே, ஒரே நேரத்தில் 16 புலிகள் இருப்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?. மேலே பகிரப்பட்டுள்ள படம் 16 புலிகளையும் கண்டறிய உதவும். நீங்கள் எத்தனை தவறவிட்டீர்கள் என்பதை மேலே பார்த்து சரி செய்து கொள்ளுங்கள்.
    Published by:Selvi M
    First published:

    Tags: Optical Illusion, Trending

    அடுத்த செய்தி