Home /News /trend /

இந்தப் படத்தில் ஒரே நேரத்தில் 12 கருப்புப் புள்ளிகளை உங்களால் கண்டறிய முடியுமா.?

இந்தப் படத்தில் ஒரே நேரத்தில் 12 கருப்புப் புள்ளிகளை உங்களால் கண்டறிய முடியுமா.?

Trending

Trending

Optical illusion | இது உங்கள் ஆளுமையைப் பற்றி எதுவும் கூறாது, ஆனால் உங்கள் மூளையின் திறனை பற்றி வெளிப்படுத்தும். இதுவரை ஒருவர் கூட ஒரே இந்த படத்தில் உள்ள 12 கருப்பு புள்ளிகளையும் கண்டுபிடிக்கவில்லை என்பது தான் நிதர்சனம்.

    இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் புதிரில் உங்களுக்கு கொடுக்கப்பட்ட படம் மிகவும் சிக்கலான ஒன்றாகும். இதில் யாராக இருந்தாலும் பெரிய குழப்பத்தை சந்திக்க கூடும். இன்று கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ள கருப்பு புள்ளிகளை உங்களால் ஒரே நேரத்தில் கண்டுபிடிக்க முடியுமா என்று பாருங்கள். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் மிகச் சிறந்த ஒரு புதிராக கருதப்படுகிறது. இது உங்கள் ஆளுமையைப் பற்றி எதுவும் கூறாது, ஆனால் உங்கள் மூளையின் திறனை பற்றி வெளிப்படுத்தும். இதுவரை ஒருவர் கூட ஒரே இந்த படத்தில் உள்ள 12 கருப்பு புள்ளிகளையும் கண்டுபிடிக்கவில்லை என்பது தான் நிதர்சனம். இருப்பினும் நீங்கள் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாம்.

    இது முதலில் ஜாக் நினியோ மற்றும் கென்ட் ஏ.ஸ்டீவன்ஸ் ஆகியோரால் பெர்செப்சன் என்ற கல்வி இதழில் வெளியிடப்பட்டது. பிறகு இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பேராசிரியர் கிட்டாவோகா தனது பேஸ்புக் பக்கத்கில் பகிர்ந்துள்ளார். ஆனால், இது நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு வைரலாகி விட்டது. மேலும் இந்த படத்தை கேம் டிசைனர் வில் கெர்ஸ்லேக் மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

    எத்தனை கருப்பு புள்ளிகளை உங்களால் பார்க்க முடியும்?
    இந்த படத்தில் ஒரே நேரத்தில் உங்களால் 12 கருப்பு புள்ளிகளையும் பார்க்க முடிகிறதா என்று முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் உங்களால் 1 புள்ளியை மட்டுமே பார்க்க முடியும். இதை பார்த்ததும் பலருக்கும் சந்தேகம் வரலாம், பிறகு எப்படி இதில் 12 புள்ளிகள் இருக்க முடியும் என்று யோசிக்கலாம். இதில் தான் டிவிஸ்ட் உள்ளது. இந்த படத்தை பார்த்த பலரும், தங்களது கருத்துகளை கமெண்ட்ஸ் மூலம் தெரிவித்தனர்.



    அதில் ஒருவர், "இதில் என்னால் 4 புள்ளிகளை மட்டுமே ஒரே நேரத்தில் பார்க்க முடிந்தது, ஆனால் 12 புள்ளிகளையும் பார்ப்பது சாத்தியமற்றது." என்று கூறியுள்ளார். மேலும் ஒருவர், 'அதிரடி திறன்களைக் கொண்ட நபரால் மட்டுமே 12 புள்ளிகளையும் ஒரே நேரத்தில் பார்க்க முடியும்" என்றுவேடிக்கையாக கூறியுள்ளார். இன்றுவரை அதிகபட்ச எண்ணிக்கையாக 5 புள்ளிகளை மட்டுமே பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Also Read : இந்த படத்தை 50 நொடிகள் பார்த்தால் இதிலுள்ள நிறங்கள் எல்லாம் வித்தியாசமாக தெரியும்!

    இந்த ஒளியியல் மாயை ஏன் ஏற்படுகிறது?

    இந்த ஒளியியல் மாயையின் விளைவு எனபது மனித புற பார்வை (human peripheral vision) என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் நேரடியாகப் பார்க்கும் புள்ளிகள் உங்களுக்கு எளிதாகத் தெரியும் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும், ஆனால் நீங்கள் கீழே பார்த்து மற்றொன்றில் கவனம் செலுத்தும்போது, ​​​​நீங்கள் தேடும் ஒன்று மறைந்துவிடும்.

    Also Read : உங்கள் மூளைக்கும் கண்ணுக்கும் சவால்... இந்த போட்டோவில் 4-வது கைக்கு உரிய நபரை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?

    பொதுவாக மனிதர்களுக்கு நல்ல புறப் பார்வை இல்லை. இதனால் தான் இந்த படத்தில் உள்ள 12 புள்ளிகளையும் ஒரே நேரத்தில் பார்க்க இயலாமல் உள்ளது. இந்த ஒளியியல் மாயைக்கு இதுவே காரணம் என்று கூறுகின்றனர். மேலும், உங்களுக்கு முன்னால் இருப்பதை மட்டுமே உங்களால் பார்க்க முடியும். உங்கள் கழுத்தை அந்த பக்கம் மாற்றும் வரை உங்கள் பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதை உங்களால் பார்க்க முடியாது. இதை தான் இந்த படத்திலும் நாம் உணர்கிறோம்.
    Published by:Selvi M
    First published:

    Tags: Optical Illusion, Trending

    அடுத்த செய்தி