இணையத்தில் பல விதமான செய்திகளும், தகவல்களும் உலா வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அவற்றில் சில மட்டுமே நமது ஆர்வத்தை தூண்டும் விதமாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அந்த தகவல்களில் உள்ள சுவாரஸ்யமான விஷயங்கள் தான். பொதுவாக இணையத்தில் உள்ள புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் பார்ப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக இருப்பதற்கு காரணம் அதில் இடம்பெற்றுள்ள தகவல் தான். சில படங்கள் எந்த வித எழுத்துக்களும் இல்லாமலும் வியப்பானதாக இருக்கும்.
குறிப்பாக ஆப்டிகல் இல்யூஷன் வகை படங்கள் நமக்கு ஆச்சரியத்தை தூண்ட கூடியதாக இருக்கும். அப்படிப்பட்ட படங்களில் ஒளிந்துள்ள உண்மையான தந்திரங்களை நம்மால் பல நேரங்களில் புரிந்து கொள்ள முடிவதில்லை. அந்த வகையில் நமது கண்களையும், மூளையையும் ஏமாற்ற கூடிய பல விஷயங்களை சாதாரண புகைப்படங்கள் மூலம் நம்மால் உணர முடிகிறது. இவற்றில் பல ஆப்டிகல் இல்யூஷன் என்கிற முறையை பயன்படுத்தி வரக்கூடிய புகைப்படங்கள் அல்லது வீடியோக்களாக உள்ளன.
மிகவும் புதுமையான வகையில் இருக்கும். ஒளியியல் மாயை என்று சொல்லப்படும் ஆப்டிகல் இலுஷனை உண்மையில் இல்லாத ஒன்றைக் காண நம் கண்களையும் மூளையையும் ஏமாற்றுவதற்கு வடிவமைக்கப்பட்ட முறையாகும். ஆனால், இன்று இணையத்தில் உலா வரும் பல படங்கள் நமக்கு ஆச்சரியத்தை தர கூடிய விதத்தில் அமைகின்றன. இந்த வகை படங்கள் பல காலமாக இருந்தாலும், தற்போது தான் நெட்டிசன்கள் மத்தியில் இவை மிகவும் பிரபலமடைந்து வருகிறது. அதன்படி, இந்த பதிவில் காட்டப்படும் ஸ்வெட்டர் படத்தில் ஒரு பக்கெட் ஒளிந்துள்ளது. அதை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் புதிரில் மறைந்திருக்கும் எளிய விஷயங்களைக் கண்டறிய உங்களுக்கு மிகுந்த கவனமும் திறமையும் மட்டுமே தேவை. HolidayGems.co.uk தளத்தால் உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில், ஸ்வெட்டர்கள், மப்ளர்கள், கம்பளி சாக்ஸ், தொப்பிகள், கையுறைகள் போன்ற குளிர்காலத்திற்கான அனைத்துப் பொருட்களையும் முக்கியமாக கொண்டுள்ளதாக இருக்கும். அதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் காலி வாளியைக் கண்டுபிடிப்பதே இன்று உங்களுக்கான சவால். அந்த ஒரு வாளியைக் கண்டுபிடித்து விட்டால் நீங்கள் பயங்கர புத்திசாலி என்று அர்த்தமாகும்.
Also Read : 40 விநாடிக்குள் இந்த படத்தில் மறைந்திருக்கும் எத்தனை புலிகளை உங்களால் கண்டுபிடிக்க முடியும்.?
நீங்கள் முதலில் வாளியைத் தேடத் தொடங்கும் போது, இதிலுள்ள புதிரை தீர்ப்பது மிகவும் எளிதானது என்று நீங்கள் உணரலாம். சிலர் இதை நொடிகளில் கண்டுபிடித்து விடுவீர்கள், ஆனால் சிலர் இதைக் கண்டுபிடிக்க நிறைய நேரம் எடுத்து கொள்ளலாம். நீங்கள் இதைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம், உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம்.
Also Read : வெளிநாட்டில் இருந்து வந்து இந்தியாவில் தற்கொலை செய்துகொள்ளும் பறவைகள்..
நீங்கள் படத்தைப் பார்க்கும்போது, மேல் வலது மூலையில் இருந்து தேடத் தொடங்குங்கள். வாளி இறுதியில் இரண்டாவது வரிசையில் உள்ளது. வாளி ஒரு டீல் பச்சை நிறத்தில் உள்ளது மற்றும் இளஞ்சிவப்பு கைப்பிடியைக் கொண்டுள்ளதாக இருக்கும். அவ்வளவு தான், உங்களுக்கான பக்கெட் புதிரை நீங்கள் எளிதில் கண்டுபிடித்து விடலாம்.
இதுபோன்ற ஆப்டிகல் மாயை படங்கள் இணையத்தில் வெளிவருவது இது முதல் முறையல்ல. இதற்கு முன், பல்வேறு படங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Optical Illusion, Trending