Home /News /trend /

இந்தப் படத்தில் மறைந்திருக்கும் 7 விஷயங்களை 15 நொடிகளில் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.!

இந்தப் படத்தில் மறைந்திருக்கும் 7 விஷயங்களை 15 நொடிகளில் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.!

ஆப்டிக்கல் இல்யூஷன்

ஆப்டிக்கல் இல்யூஷன்

Optical illusion | இந்தப் படத்தில் 7 விதமான மறை பொருள்கள் இருக்கின்றன. இதற்கு பொறுமையாய் தேடி கண்டறிந்து விடையை காணலாம் என்றாலும், 15 நொடிகளில் இதற்கு விடை காணும் திறமை உடையவர்கள் உண்மையிலேயே புத்திசாலிகள் தான் என்று ஒப்புக் கொள்ளலாம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
பல வகையான புதிர் விளையாட்டுக்களை நீங்கள் பார்த்திருக்க கூடும். அவை சித்திரமாக இருக்கலாம் அல்லது வீடியோவாக இருக்கலாம் அல்லது நேரில் விடை காண கூடியதாகக் கூட இருக்கலாம். எப்படி இருந்தாலும் நம் மூளைக்கு வேலைக் கொடுக்கக் கூடியதாக, ஆழ்ந்த சிந்தனையை தூண்டக் கூடியதாக, நமது மூளையின் செயல்திறனை பரிசோதனை செய்யும் வகையில் அவை அமைகின்றன.

ஒரே விஷயத்தை எத்தனை கோணத்தில் ஆழ்ந்து நோக்கி, எத்தனை விதமான பதில்களை நம் மூளை கண்டறிகிறது என்பதையும், அதில் சரியான விடையை நாம் கண்டுபிடிப்பதில் உள்ள நுணுக்கமும் அலாதியானவை. துரிதமாக ஓடிக் கொண்டிருக்கக் கூடிய வாழ்க்கையில் மனதுக்கு சற்று புத்துணர்ச்சி அளிப்பதாக ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் அமைகின்றன.

ஆப்டிக்கல் இல்யூஷன் படத்தை நம் கண் முன்னே வைத்த உடன், நமது எண்ணம் அதை பல வித கோணங்களில் அணுக தொடங்குகிறது. அந்த வகையில் இந்தப் படத்தில் 7 விதமான மறை பொருள்கள் இருக்கின்றன. இதற்கு பொறுமையாய் தேடி கண்டறிந்து விடையை காணலாம் என்றாலும், 15 நொடிகளில் இதற்கு விடை காணும் திறமை உடையவர்கள் உண்மையிலேயே புத்திசாலிகள் தான் என்று ஒப்புக் கொள்ளலாம்.



கருப்பு - வெள்ளை சித்திரம்

இந்தச் செய்தியில் கருப்பு வெள்ளை சித்திரப் படம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தோட்டம் ஒன்றில் மரத்தின் மீது அணில்கள் விளையாடிக் கொண்டிருக்கின்றன. பறவைகள் அமர்ந்திருக்கின்றன. இதில், ஏராளமான இலைகள், புல் தரைகள் ஆகியனவும் தென்படுகின்றன. புல்வெளியில் சில விலங்குகளும் உள்ளன. இதில் தான் 7 விதமான மறை பொருள்கள் அடங்கியுள்ளன.

Also Read : இந்த படத்தில் மறைந்திருக்கும் 6 ஆங்கில வார்த்தைகளை கண்டுபிடித்தால் நீங்கள் தான் ரியல் ஜீனியஸ்!

மீனை கண்டுபிடிக்க சவால்

இருக்கின்ற 7 விதமான பொருள்களில் மீன் எங்கு இருக்கிறது என்பதை கண்டறிவதுதான் மிகவும் சவால் கொண்ட விஷயமாகும். மிகுந்த புத்திகூர்மை உடைய சுமார் 2 சதவீதம் மக்கள் மட்டுமே இந்த மீனை கண்டுபிடிக்கின்றனர் என்று கூறப்படும் நிலையில், அதை நீங்கள் கண்டுபிடித்தால் உண்மையிலேயே உங்கள் ஐக்யூ லெவல் பெரியதுதான்.

Also Read : இந்த படத்தில் நீங்கள் முதலில் பார்ப்பது பெண்ணா, ஆணா அல்லது பறவையா.?

விடைகள் கண்டுபிடித்துவிட்டீர்களா

எடுத்துக் கொண்ட நேரத்தில் உங்களால் விடையை கண்டுபிடிக்க முடிந்ததா? இல்லை என்றால் கீழ்காணும் விடைகளை படித்து, பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.



மீன் - இலைகளுக்கு நடுவே மறைந்து இருக்கிறது.
டூலிப் - மரத்திற்கு கீழே வளர்கிறது.
ஐஸ்க்ரீம் - மேலே இலைகளுக்கு நடுவே உள்ளது.
பந்து - இலைகளுக்கு வலது புறமாக கிடக்கிறது.
கலர் பென்சில் - மரக் கிளையின் வலது கார்னரில் உள்ளது.
ஸ்பூன் - மரத்தின் வேருக்கு அருகில் உள்ளது.
நிலா - அரைவடிவ நிலவு காளான்களுக்கு மத்தியில் தெரிகிறது.
Published by:Selvi M
First published:

Tags: Optical Illusion, Trending

அடுத்த செய்தி