Home /News /trend /

இந்த தக்காளி கூட்டத்திற்குள் மறைந்திருக்கும் 3 ஆப்பிள்களை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.!

இந்த தக்காளி கூட்டத்திற்குள் மறைந்திருக்கும் 3 ஆப்பிள்களை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.!

ஆப்டிகல் இல்யூஷன்

ஆப்டிகல் இல்யூஷன்

Optical illusion | அளவு, நிறம், தோற்றம் என அனைத்திலும் ஒரே மாதிரியாக இருக்கக்கூடிய தக்காளி கூட்டத்திற்குள் மறைந்திருக்கும் ஆப்பிளை கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆப்டிகல் இல்யூஷன் சோசியல் மீடியாவில் கடந்த ஒருவாரமாக வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
சோசியல் மீடியாவில் நாளுக்கு நாள் ஆப்டிகல் இல்யூஷன்களின் ஆதிக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கண்ணுக்கும் மூளைக்கும் சவால் விடக்கூடிய வகையில் ஆப்டிகல் இல்யூஷனில் மறைந்திருக்கும் புதிரைக் கண்டுபிடிப்பதால் கிடைக்கும் சந்தோஷம் மட்டுமின்றி, மன அழுத்தத்தைக் குறைக்கவும் இதுபோன்ற சவால்கள் உதவுகின்றன. அதனால் தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு தரப்பினரின் ஆர்வமும் தற்போது ஆப்டிகல் இல்யூஷன்கள் மீது குவிய ஆரம்பித்துள்ளது.

அதற்கு ஏற்றார் போல், ஓவியத்திற்குள் மறைந்திருக்கும் கண்ணுக்கே தெரியாத உருவத்தை கண்டுபிடிப்பது, நிறைய பொருட்கள் குவிந்து கிடக்கும் போட்டோவில் இருந்து குறிப்பிட்ட பொருள் அல்லது உருவத்தை கண்டறிவது, கூட்டல், கழித்தலைக் கொண்ட எண் கணித மூளை டீசர்கள் என நாளுக்கு நாள் வித்தியாசமான ஆப்டிக்கல் இல்யூஷன்கள் இணையத்தில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. மனிதனின் மூளையை உருவங்களை வெவ்வேறு கோணத்தில் பார்க்கக்கூடியது என்பதால், ஆப்டிகல் இல்யூஷனில் உள்ள உருவத்தை நாம் பார்க்கும் விதத்தை வைத்து நமது குணநலம், செயல்திறன், முடிவெடுக்கும் திறன் போன்ற பல்வேறு ஆளுமை பண்புகள் குறித்து அறிந்து கொள்ள முடியும் என மனோதத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.



இன்று கண்ணுக்கு வேலை கொடுக்ககூடிய ஆப்டிக்கல் இல்யூஷன் ஒன்றினை தான் பார்க்கப்போகிறோம். Gergely Dudás என்ற நெட்டிசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படத்தை பகிர்ந்து, அதில் மறைந்திருக்க கூடிய 3 ஆப்பிள்களை கண்டுபிடிக்கும் படி சவால் விட்டுள்ளார். அந்த புகைப்படம் முழுவதும் சிவப்பு நிறத்திலான தக்காளிகள் கண், வாய் மற்றும் பச்சை நிற கொம்புடன் குதூகலமாக இருக்கின்றன. அதில் 3 ஆப்பிள்கள் மறைந்திருப்பதாகவும், அதனை கண்டுபிடிக்க முடியுமா? என்றும் நெட்டிசன்களுக்கு சவால் விடுத்துள்ளார். தக்காளியும், ஆப்பிளும் நிறம், அளவு போன்ற விஷயங்களில் ஒரேமாதிரியாக இருக்கும் என்பதால் நிச்சயம் இந்த சவால் கடினமாக ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

Also Read : இந்த படத்திற்குள் மறைந்திருக்கும் நாயின் ஓனரை 15 விநாடிகளில் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.!

46,000-க்கும் அதிகமான பாலோயர்களைக் கொண்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த ஆப்டிகல் இல்யூஷனை இதுவரை 1,300க்கும் அதிகமான நெட்டிசன்கள் கமெண்ட் மற்றும் லைக் செய்துள்ளனர். கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. இதில் பெரும்பாலான நெட்டிசன்கள் விடையை கண்டுபிடித்துவிட்டதாக பதிவிட்டுள்ளனர். ஆப்பிளின் நடுவே உள்ள பள்ளத்தை வைத்து கண்டுபிடித்ததாகவும், ஸ்ட்ராபெர்ரி போன்ற தோன்றத்தை வைத்து ஆப்பிளைக் கண்டுபிடித்ததாகவும் கமெண்ட் செய்துள்ளனர்.



ஆப்பிள்களைக் கண்டுபிடிக்கத் தவறியவர்களுக்கான விடையை அவரே புகைப்படம் மூலமாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இடதுபுற மூலையில் இருந்து கீழே சில வரிசைகள் இறங்கி வந்தால் அங்கு ஒரு ஆப்பிள் இருப்பதை நீங்கள் காணலாம். கீழே இருந்து மூன்றாவது வரிசையை நன்றாக உற்றுப்பார்த்தால் வலது மூலையில் ஒன்றும், அங்கிருந்து 4 தக்காளிகளைக் கடந்து ஒன்றும் இருப்பது தெரியும்.
Published by:Selvi M
First published:

Tags: Optical Illusion, Trending

அடுத்த செய்தி