முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / இந்த படத்தில் எத்தனை விலங்குகள் இருக்கின்றன என்பதை யூகித்து சொல்லுங்கள் - சரியான பதில் கிடைப்பது சிரமம்!

இந்த படத்தில் எத்தனை விலங்குகள் இருக்கின்றன என்பதை யூகித்து சொல்லுங்கள் - சரியான பதில் கிடைப்பது சிரமம்!

ஆப்டிகல் புகைப்டம்

ஆப்டிகல் புகைப்டம்

Optical Illusion | கறுப்பு, வெள்ளை நிறங்களில் பல மாயைகளை உள்ளடக்கியிருக்கும் இந்தப் படத்தை நாம் பார்த்த உடனேயே ஒரு யானையின் உருவத்தை கணித்துவிட முடிகிறது.

  • Last Updated :

மனதிற்கு ரிலாக்ஸ் அளிக்கவும், நம் புத்திக்கூர்மையை பரிசோதிக்கவும் சுடோகு விளையாட்டு மற்றும் ஆப்டிக்கல் இல்யூஷன் இமேஜில் உள்ள பொருட்களை கண்டறிவது போன்ற விஷயங்கள் உதவிகரமாக இருக்கின்றன. குறிப்பாக, இன்றைய சூழலில் ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் ஏராளமாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

பொழுது போக்கிற்காக சமூக வலைதளங்களுக்கு வரக் கூடிய நபர்களின் சிந்தனைத் திறனுக்கு சவால் அளிக்கும் வகையில் இந்த படங்கள் அமைகின்றன. வெகுசிலர் மட்டுமே சரியான விடையை கண்டுபிடிக்கின்றனர். பெரும்பாலானோரின் பதில் தவறாகவே இருக்கிறது. விடை எப்படி இருந்தாலும், நம் சிந்தனை திறனுக்கு வேலை கொடுப்பதாக இல்யூஷன் படங்கள் இருக்கின்றன.

தற்போது ஃபேஸ்புக்கில் அத்தகைய படம் ஒன்று வெளியாகியிருக்கிறது. கறுப்பு, வெள்ளை நிறங்களில் பல மாயைகளை உள்ளடக்கியிருக்கும் இந்தப் படத்தை நாம் பார்த்த உடனேயே ஒரு யானையின் உருவத்தை கணித்துவிட முடிகிறது. ஆனால், அதன் உடல் அமைப்பில் ஒளிந்துள்ள வேறுபல விலங்குகளை கண்டறிவது சவால் மிகுந்த காரியமாக உள்ளது. ஒரு சில பெரிய விலங்குகளின் உருவத்தை எளிதாக கண்டறிந்து விட முடியும் என்றாலும், அளவில் சிறிய விலங்குகளின் உருவங்களை அடையாளம் காண முடியாதபடிக்கு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

6 விலங்குகள் உள்ளதா? : இந்த இல்யூஷன் இமேஜ் குறித்து தங்கள் சிந்தனைத் திறனை தட்டி விடும் பலரும் அதில் 6 விலங்குகள் இருப்பதாக குறிப்பிட்டனர். இன்னும் சிலர், இதை விடக் கூடுதலான எண்ணிக்கையை குறிப்பிட்டனர் என்றாலும் அனைத்து பதில்களுமே ஏறக்குறைய தவறாகவே இருந்தன. பலர் யானையின் தந்தம் போன்ற அமைப்பில் இருப்பது மீன் என்றும், பாம்பு என்றும் பதில் அளித்தனர்.

Also Read : இந்த கிளியின் கண்ணை 15 வினாடிகள் பாருங்கள், அற்புதமான மாற்றம் தெரியும்

மொத்தம் 16 விலங்குகள் : பல விதமான யூகங்களுக்குப் பிறகும் சரியான பதிலை கண்டுபிடிக்க இயலாத உங்களுக்கு, அதில் 16 படைப்புகளின் படம் இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? இந்த விடை ஆச்சரியம் அளிப்பதாக இருப்பினும், இதுவே சரியான விடை ஆகும்.

இந்த படத்தில் இருக்கும் படைப்புகள் இவைதான். ஒரு மீன், கொசு, கழுதை, நீர்நாய், நாய், முதலை, வாள் மீன், இறால், கோழி, ஆமை, யானை, ஸ்ரிம்ப், எலி, பாம்பு, டால்ஃபின் மற்றும் பூனை ஆகியவை இந்த படத்தில் உள்ளன.

ஒவ்வொரு படைப்பையும் உற்று நோக்குவதன் மூலமாக, அதன் பின்னணியில் ஒளிந்திருக்கும் மற்றொரு படைப்பு குறித்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம். எந்தெந்த விலங்கு எங்கெங்கு இருக்கிறது என்பதை நீங்கள் சரியாக கணித்து விட்டீர்கள் என்றால், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக இந்தப் படத்தை உங்கள் குடும்ப உறவுகள் அல்லது நண்பர்களுக்கு அனுப்பி வைத்து, சரியான விடையை கண்டுபிடிக்குமாறு சவால் விடுக்கலாம்.

First published:

Tags: Trends, Viral