Home /News /trend /

கொலை செய்தது யாரென்று கண்டுபிடியுங்கள் - நீங்கள் எவ்வளவு புத்திசாலி என்று பார்க்கலாம்.!

கொலை செய்தது யாரென்று கண்டுபிடியுங்கள் - நீங்கள் எவ்வளவு புத்திசாலி என்று பார்க்கலாம்.!

ஆப்டிகல் இல்யூஷன்

ஆப்டிகல் இல்யூஷன்

Optical Illusion | கீழே உள்ள புகைப்படம் ஒரு கிரைம் சீனைக் குறிக்கிறது இதில் கொலையாளி யார் என்று கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள்!

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
இணையத்தில் எவ்வளவு செய்திகள் வைரலாக பகிரப்பட்டாலும், சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் சார்ந்த செய்திகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. பலரும் ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படங்களில் வெவ்வேறு கண்ணோட்டத்தில் தெரியும் விஷயங்களை கண்டுபிடிக்க மிகவும் மெனக்கெடுகிறார்கள். அந்த வகையில், ஆப்டிகல் இல்யூஷன் புதிர் ஒன்று வெளியாகி பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது. 

புதிர்களை கண்டுபிடியுங்கள் என்று பல வகையான புதிர்கள் உள்ளன. இதில் ஸ்மார்ட்டாக, வித்தியாசமான கோணத்தில் சிந்திக்க வைக்கும் புதிர்கள் பல உள்ளன. கண் முன்னே தெரியும் ஒரு மிகச்சிறிய விஷயம் அல்லது லாஜிக்கலான ஒரு விஷயம் புதிரின் விடையாக இருக்கலாம். ‘ச்சே, இது தெரியாம போச்சே’ என்று நினைக்க வைக்கும் அளவுக்கு விடை எளிமையாக ஆனால் புதிர்கள் சுற்றிவளைந்து காணப்படும். கீழு உள்ள ஆப்டிக்கல் இல்யூஷன் புதிரும் அந்த வகையைச் சேர்ந்தது தான்.

கொலை செய்யப்பட்ட இடம் என்று ‘கிரைம் சீன்’ புகைப்படம் ஒன்று உள்ளது. அதற்கான பல க்ளூக்களும் அதிலேயே இருக்கும். கீழே உள்ள புகைப்படத்தில், கொலையாளி யார் என்று கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள்!



இந்த புகைப்படத்தில் உள்ள காட்சிகள், நபர்கள், பொருட்கள் என்று எல்லாவற்றையும் மிகவும் கவனமாகப் பாருங்கள்.

இந்த புகைப்படம் ஒரு கிரைம் சீனைக் குறிக்கிறது. ஒரு உணவகத்தில் உள்ள நபர்களும், கொலை செய்யப்பட்டு இறந்த பெண்ணும் இருக்கிறார்கள்.

உணவகத்தில் ஓய்வறையில் ஒரு பெண்ணின் நெஞ்சில் கத்தியால் குத்தப்பட்டிருக்கிறது. அவர் ரத்த வெள்ளத்தில் இறந்து போயிருக்கிறார். இறந்த பெண்மணியைத் தவிர்த்து, அங்கே 5 நபர்கள் மீதம் உள்ளனர். அவர்களில் நால்வர் வாடிக்கையாளர், ஒருவர் உணவாக சப்ளையர். இவர்களில் ஒருவர் தான் கொலை செய்துள்ளனர். அது யாரென்று கண்டுபிடிக்க முடிந்ததா?

Also Read : 9 வினாடிகளில் ஆந்தை கூட்டத்திற்கு மத்தியில் இருக்கும் பூனையை கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடி தான்!

நான்கு நபர்களும் நான்கு வெவ்வேறு டேபிளில் அமர்ந்துள்ளனர். சப்ளையர் ஒரு பாட்டிலோடு சர்வ் செய்ய வருகிறார். வாடிக்கையாளர்கள் டேபிளில் உள்ள பொருட்களை நன்றாக கவனித்துப் பாருங்கள். அதில் கொலை செய்ததற்கான க்ளூ ஏதாவது கிடைக்கிறதா என்று தெரிந்து கொள்ளலாம்.

1, 2, 3, 4, 5 என்று ஒவ்வொரு நபராக ஆய்வு செய்து பார்த்தீர்களா? யாரென்று தெரிந்ததா?

5 ஆம் நம்பர் குறிப்பிடப்பட்டிருக்கும் நபர் சர்வர், நேர்த்தியாக உடையணிந்து உணவு சப்ளை செய்ய வருகிறார்.

நம்பர் 1, எதையோ சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். வேறு எந்த விவரமும் அதில் இருந்து தெரியவில்லை.

Also Read : இந்த படத்தில் ஒரு 5 மட்டும் தலைகீழாக உள்ளது; 10 வினாடிகளில் கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடி

நம்பர் 2, டேபிளில் உணவு இருக்கிறது. அதை சாப்பிட தயாராக இருக்கிறார்.

நம்பர் 3, டேபிளில் உணவு இன்னும் சர்வ் செய்யப்படவில்லை. உணவுக்காக காத்திருக்கிறார்.

நம்பர் 4 என்று குறிப்பிடப்பட்டிருக்கும் நபர் தான் கொலையாளி. சட்டை கிழிந்து இருக்கிறது, நெற்றியில் காயம் மற்றும் கழுத்துப் பகுதியில் ரத்தம் இருக்கிறது. எனவே, இவையெல்லாம் கொலை செய்யும் போது ஏற்பட்ட எதிர் தாக்குதலால் என்று தெரிய வருகிறது. இவர் தான் கொலையாளி.

இந்த புதிரை கண்டுபிடிக்க முடிந்ததா?
Published by:Selvi M
First published:

Tags: Optical Illusion, Trending

அடுத்த செய்தி