Home /News /trend /

இந்த படத்தில் எவை உண்மையான கண்கள்?கண்டுபிடிங்க பார்க்கலாம்..

இந்த படத்தில் எவை உண்மையான கண்கள்?கண்டுபிடிங்க பார்க்கலாம்..

ஆப்டிக்கல் இல்யூஷன்

ஆப்டிக்கல் இல்யூஷன்

Optical Illusion : பல கண்கள் உள்ள இந்த படத்தில் நீங்கள் உண்மையான கண்கள் எங்கே உள்ளது என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

இந்த படத்தில் ஒரு பெண்ணின் முகத்தில் பல கண்கள், உதடுகள், காதுகள் மற்றும் மூக்கு வரையப்பட்டுள்ளது. அதில் சரியான ஜோடி கண்கள், மூக்கு மற்றும் உதடுகளை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? என்பதை பரிசோதித்து பார்க்கலாம்..

சரியான எண்ணிக்கை அல்லது முதன் முதலில் பார்வைக்கு தெரியும் உருவங்களை வைத்து நமது மூளையின் செயல்பாடு, அறிவுத்திறன், குணநலன்கள் போன்ற பலவகையான விஷயங்களை கண்டறிய முடியும் என நிபுணர்கள் நம்புகின்றனர். எனவே தான் சோசியல் மீடியாக்களிலும் ஆப்டிக்கல் இல்யூஷன் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிக அளவில் பகிரப்பட்டு, வைரலாகிறது. கீழே உள்ள வீடியோவில் ஒரு பெண்ணின் முகத்தில் பல கண்கள், உதடுகள், மூக்குகள் வரையப்பட்டுள்ளன. அதில் இருந்து சரியான ஜோடி கண்கள், உதடுகள், மூக்கை கண்டுபிடிக்க வேண்டும் என்ற சவால் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

வான்கூவரை சேர்ந்த மேக்கப் கலைஞரான மிமி சோய் தனது முகத்தில் ஒரு வினோதமான ஆப்டிக்கல் இல்யூஷனை உருவாக்கி நெட்டிசன்களை திகைக்க வைத்துள்ளார். அவர் தனது முகத்தையே ஒரு கேன்வாஸாகக் பயன்படுத்தி, மேக்கப் திறமை மூலமாக காண்போர் ஆச்சர்யத்தில் வாய்பிளக்கும் படி நிறைய காதுகள், கண்கள், மூக்கு, உதடுகள் ஆகியவற்றை வரைத்து புதுமையான ஆப்டிக்கல் இல்யூஷனை உருவாக்கியுள்ளார்.



இந்த வீடியோ சோசியல் மீடியாவில் அதிக அளவில் பகிரப்பட்டு, பல கண்கள், உதடுகள், காதுகள் மற்றும் மூக்குகளில் இருந்து சரியான ஜோடி கண்கள், மூக்கு மற்றும் உதடுகளை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? என சவால் விடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு சரியான விடையை நீங்களே கண்டுபிடிக்க முயற்சியுங்கள். வீடியோவை நன்றாக உற்றுநோக்கினால் உங்களால் சுலபமாக கண்டறிய முடியும்.

also read : உங்கள் கண் பார்வை நல்லா இருக்கா? டெஸ்ட் பண்ணலாம் வாங்க..



அதை கண்டறிய முடியவில்லை என்றால், அடுத்த வீடியோவை பாருங்கள். அதில் மிமி சோய் லிப்ஸ்டிக் பூசும் வீடியோ காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதனை நன்றாக உற்றுப்பார்த்தால் அவர் லிப்ஸ்டிக் பூசுவது உதட்டுக்கு அல்லது அவருடைய மூடிய கண் இமைகளுக்கு என்பது நன்றாக தெரியும். இப்போது நீங்கள் எளிமையாக உண்மையான ஜோடி உறுப்புகளை கண்டறியலாம்.



 




View this post on Instagram





 

A post shared by MIMI CHOI (@mimles)




 

இதுகுறித்து மிமி சோய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: "இது ஒப்பனை. உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள். நீங்கள் பைத்தியம் கிடையாது. நான் 3 முறை இந்த மாய தோற்றத்திற்கான மேக்கப் உடன் படுத்து உறங்கினேன். ஏனென்றால் என் தலையின் ஓரத்தில் வண்ணம் தீட்டுவதால் எனக்கு மயக்கம் மற்றும் குமட்டல் ஏற்பட்டது. இதற்கு சுமார் 8 மணி நேரம் ஆனது. மேக்கப் கலையில் எனது வளர்ச்சியை பார்க்க 2015 மற்றும் 2016ம் ஆண்டுக்கான எனது பழைய விஷயங்களை எல்லாம் மீண்டும் உருவாக்க விரும்பினேன்” என குறிப்பிட்டுள்ளார்.

also read : இந்த படத்தில் மறைந்துள்ள விலங்கு எதுவென்று கண்டுபிடியுங்க பார்க்கலாம்..



 
 

 

 


View this post on Instagram


 

 

 

 

A post shared by MIMI CHOI (@mimles)





சோயின் பல வித்தியாசமான மேக்கப் படைப்புகள் அவர் தூக்க முடக்கம் என்ற ஸ்லீப் பாராலிஸிஸின் போது கனவில் தோன்றிய காட்சிகளை கொண்டு உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Optical Illusion, Trending

அடுத்த செய்தி