Home /News /trend /

இந்த ஓவியத்தில் ஒளிந்திருக்கும் 13 முகங்களை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்..

இந்த ஓவியத்தில் ஒளிந்திருக்கும் 13 முகங்களை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்..

ஆப்டிக்கல் இல்யூஷன்

ஆப்டிக்கல் இல்யூஷன்

Optical Illusion : இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படத்தில் மறைந்திருக்கும் 13 முகங்களை உங்களால் கண்டறிய முடிகிறதா? 

சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் ஆப்டிக்கல் இல்யூஷன் இமேஜ்கள்  வைரலாகி வருகிறது. புதிர்கள், மைண்ட் கேம்கள் மற்றும் சுடோகு போன்றவற்றைத் தீர்ப்பதில் உள்ள சுவாரஸ்யங்களை விட ஆப்டிக்கல் இல்யூஷன்கள் மூளைக்கு சிறந்த சவாலாக உள்ளன. இது சில திறமையாளர்களால் வடிவமைக்கப்பட்ட படங்கள் மற்றும் ஓவியங்கள் ஆகும். கண்ணுக்கும், மூளைக்கும் சவாலான ஆப்டிக்கல் இல்யூஷன் புதிர்களை கண்டறிவதற்குள் மக்களுக்கு தலைசுற்ற வைத்துவிடுகிறது.

ஒரு புகைப்படத்தில் நம் கண்களுக்குத் தெரியும் காட்சி, சிலருக்கு வேறு மாதிரியாகவும், கூர்ந்து கவனித்தால் முற்றிலும் வேறாகவும் தோன்றும்.சில வகை ஆப்டிக்கல் இல்யூஷன் ஓவியங்கள் அதனுள் மறைந்திருக்கும் ரகசியத்தை தேடி கண்டுபிடிக்க உங்களை தூண்டும் புதிர் விளையாட்டு போல் இருக்கும். அப்படிப்பட்ட ஓவியம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பெவ் டூலிட்டில் உருவாக்கிய ‘The Forest Has Eyes’ என அழைக்கப்படும் ஓவியத்தில் பல முகங்கள் மறைந்துள்ளது. அதில் சிலவற்றை நீங்கள் பார்த்ததுமே கண்டுபிடித்து விடலாம். ஆனால் பெரும்பாலான முகங்களை நீங்கள் கண்டறிய வேண்டும் என்றால் கண்களால் நன்றாக உற்றுப்பார்த்து, மூளையை கசக்கி பிழிந்து கண்டுபிடிக்க வேண்டியிருக்கலாம்.

ஓவியத்தை முதலில் பார்க்கும் போது, மலைப்பாங்கான நிலப்பரப்பில் பாறைகள், மரங்கள் மற்றும் இரண்டு குதிரை சவாரி செய்யும் வீரர்கள் ஆகியவற்றை காண முடியும். அதனைத் தொடர்ந்து கீழே வந்தால் பாறைகளில் மேலும் சில முகங்களை காண முடியும். ஆக மொத்தம் இப்போது 4 முகங்களை நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள். ஆனால் உண்மையில் அந்த ஓவியத்தில் 13 முகங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. என்ன 13 முகங்களையும் கண்டுபிடித்துவிட்டீர்களா? இல்லையா? கவலையை விடுங்கள். நாங்கள் அதற்கான விடைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.

also read : முதலில் என்ன உருவம் தெரிந்தது ? உங்கள் குணாதிசயத்தை கண்டுபிடிக்கும் புகைப்படம்..



மரங்கள், பாறைகள், காட்டுப்பாதைக்குள் மறைந்திருக்கும் சில முகங்களை பார்க்கலாம். வலதுபுறத்தில் உள்ள பாறைகள் இரண்டு முகங்களைக் கொண்டுள்ளன, ஒன்று குறிப்பிடத்தக்க அளவில் பெரியது, மற்றொன்று சற்றே சிறியதாக மையத்திற்கு நெருக்கமாக உள்ளது.

குதிரை வீரர்களின் பின்புறம் உள்ள பசுமையான மரங்களை பார்த்தால், அதில் 4 முகங்கள் மறைந்திருப்பதை நீங்கள் பார்க்கலாம். இடதுபுறம் உள்ள மரத்திலிருந்து வலபுறம் நோக்கி பார்வையை செலுத்தினால் 4 முகங்களும் நெருக்கமாக இருப்பதை காண முடிகிறதா?.

இப்போது, ​​​​மீதமுள்ள மூன்று முகங்களை கண்டறிவதற்கான நேரம் இது, அது கொஞ்சம் கஷ்டம் என்றாலும், சற்றே முயன்றால் கண்டுபிடித்துவிடலாம். நீங்கள் இன்னும் அவற்றைக் கண்டுபிடிக்கவில்லையா?. ஒன்று வெள்ளை மரத்தின் பின்னால் மறைத்திருக்கிறது, ​​மற்ற இரண்டு இடது பக்கத்தில் கீழே உள்ளது. அவ்வளவு தான் 13 முகங்களையும் கண்டுபிடித்துவிட்டோம், இது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது இல்லையா?. உடனே இந்த ஓவியத்தை உங்கள் நண்பர்களுடன் ஷேர் செய்து அவர்களையும் 13 முகங்களை கண்டறிய சொல்லுங்கள்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Optical Illusion, Trending

அடுத்த செய்தி