இந்த ஆப்டிகல் இல்யூஷன் படமானது அழகான பழுப்பு நிறப் பறவைகளின் மத்தியில் மறைந்திருக்கும் 4 கிவிகளைக் கண்டறியும் வகையில் அமைந்துள்ளது. இதை 22 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க வேண்டும். ஆப்டிகல் இல்யூஷன் என்பது மிகவும் பிரபலமான மற்றும் மக்களின் ஆர்வத்தை தூண்டக்கூடிய ஒன்றாக உள்ளது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஒரு வகையான மூளை விளையாட்டு (brain game) என்றே சொல்லலாம், இந்த விளையாட்டுகளில் ஆர்வமுள்ளவர்களாலும், இதை பற்றிய நுணுக்கங்களை அறிந்தவர்களாலும் மட்டுமே 22 வினாடிகளுக்குள் தீர்க்க முடியும். எனவே இது எளிதான சவால் அல்ல, கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள், ஆனால் பறவைகளின் அழகில் மயங்கி விடாதீர்கள்.
ஹங்கேரிய கலைஞரான Gregerly Dukas, aka Dudolf என்பவரால் இந்த படம் வரையப்பட்டது. அவரது பலவகையான புதிர் ஓவியங்களையும் நாம் பார்த்தும், அதற்கு தீர்வும் கண்டுள்ளோம். இந்த ஓவியம் குறிப்பாக மக்களை காட்டுமிராண்டித்தனமாக மாற்றக்கூடியது.
படத்தில் பல கிவி பறவைகள் உள்ளன, இதற்குள்ளே கிவி பழம் எங்கே மறைந்துள்ளது. அந்த பழங்களை கண்டுபிடிக்க உங்களுக்கு 22 வினாடிகள் உள்ளன. இணையத்தில் ஒருவர் இந்த விளையாட்டில் அனைத்து (4) கிவி பழங்களையும் 25 வினாடிகளுக்குள் கண்டுபிடித்து சாதித்துள்ளார். உங்களாலும் முடியும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
Also Read : இந்த படத்தில் மறைந்திருக்கும் விலங்கை கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடி தான்!
Dudolf இந்த படத்தை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆயிரக்கணக்கான மூளை விளையாட்டுகளை அவர் வெளியிட்டதோடு அதை எத்தனை நபர்கள் குறித்த வினாடியில் கண்டுபிடிக்கிறார்கள் எனவும் ஆராய்ச்சி செய்தார். ஆனால் சிலர் மட்டுமே இதில் வெற்றி பெற்றனர். பருந்து போன்ற கண்கள் கொண்டவர்களால் மட்டுமே பறவைகளுக்கு இடையிலுள்ள பழங்களைக் கண்டுபிடிக்க முடியும் என்பதையே இந்த முயற்சி விளக்குகிறது. இதை கேலி செய்து ஒருவர்,நான் நான்கு உருளைக்கிழங்குகளையும், நிறைய கிவி பழங்களையும் பார்த்தேன் என்று கூறியுள்ளார்.
Also Read : ஓனரை கட்டிப்பிடித்து கதறி கதறி அழுத ஆடு... கல்லான மனதையும் கலங்க வைக்கும் வீடியோ
மற்றொருவர் நான் மூன்றை மட்டுமே கண்டுபிடித்தேன், இன்னும் ஒன்று எங்கு உள்ளது எனத் தேடுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒருவர், நான்காவதாக உள்ள பழத்தை கண்டுபிடிக்க நீண்ட நேரம் எடுத்ததாகவும். அந்த கிவிகள் கூச்ச சுபாவமுள்ள குட்டி ராஸ்கல்கள் என்றும் கூறியுள்ளார்.
குறிப்புகள்
உங்களில் பலர் இன்னும் இந்த கிவிகளைக் கண்டுபிடிக்காமல் இருப்பதால், நாங்கள் சில குறிப்புகளை வழங்க இருக்கிறோம். மேலே வலது மூலையிலிருந்து, கீழ் நோக்கி செல்ல வேண்டும். மேலும், கிவி பழங்கள் பறவைகளிலிருந்து வேறுபடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
Also Read : முதலை வயிற்றில் சிறுவன் உயிருடன் இருக்கிறான் என கிராம மக்கள் எடுத்த முடிவு... அடுத்து நடந்தது?
4 கிவி பறவைகளைக் கண்டுபிடிக்க கீழே உள்ள படத்தைப் பாருங்கள்
இந்த சோதனை அனைவருக்கும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.இதுபோன்ற பல மூளை டீசர்கள் தொடர்ந்து வந்துகொண்டே தான் இருக்கிறது. இது சுவாரஸ்யத்தையும், அடுத்தடுத்த டீசர்களை கண்டுபிடிக்கும் ஆர்வத்தையும் தூண்டுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.