ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

யாரை நம்புவது என்றே தெரியலையா?குழப்பத்திற்கு விடை தரும் சின்ன டெஸ்ட்! படிங்க.. பதில் சொல்லுங்க!

யாரை நம்புவது என்றே தெரியலையா?குழப்பத்திற்கு விடை தரும் சின்ன டெஸ்ட்! படிங்க.. பதில் சொல்லுங்க!

ஆப்டிக்கல் இல்யூஷன்

ஆப்டிக்கல் இல்யூஷன்

Optical Illusion | ஆளுமை அடிப்படையிலான ஆப்டிகல் இல்யூஷன்கள், நீங்கள் எப்படிப்பட்ட நபர், குணநலன்கள் மற்றும் பழக்க வழக்கங்கள் என்ன என்பதை அறிய உதவுகின்றன.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சோசியல் மீடியாக்களில் நாளுக்கு நாள் வைரலாகும் ஆப்டிக்கல் இல்யூஷன்கள் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, அறிவியல் மற்றும் மனோதத்துவம் சார்ந்தது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தர்க்க ரீதியிலான ஆப்டிகல் இல்யூஷன்கள் சிக்கலான வடிவங்களை நமது மூளை எவ்வாறு உணர்ந்து கொள்கிறது என்பதை வைத்து அறிவாற்றலை கணிக்க உதவுகிறது. அதேபோல் ஆளுமை அடிப்படையிலான ஆப்டிகல் இல்யூஷன்கள், நீங்கள் எப்படிப்பட்ட நபர், குணநலன்கள் மற்றும் பழக்க வழக்கங்கள் என்ன என்பதை அறிய உதவுகின்றன.

  நம்பிக்கை சிக்கல்:

  இப்போது கொடுக்கப்பட்டுள்ள படத்தை நன்றாக உற்றுப்பாருங்கள்... நீங்கள் படத்தில் முதலில் என்ன கவனித்தீர்கள்? என்பதை வைத்து... நீங்கள் மற்றவரை எப்படி நம்புகிறீர்கள் என்பதை விளக்க முடியுமாம்.

  ஆப்டிகல் இல்யூஷன்கள் மூலமாக உங்கள் ஆழ்மனதில் மறைந்திருக்கக்கூடிய பயங்கள் மற்றும் சந்தேகங்களுக்கும் கூட விடை கண்டுபிடிக்க முடியும். அப்படிப்பட்ட ஆப்டிகல் இல்யூஷன் சோதனையை தான் தாற்போது நாம் பார்க்கப்போகிறோம்.

  வனத்திற்குள் மறைந்திருக்கும் கொரில்லா எங்கே.? 12 வினாடிகளுக்குள் கண்டுபிடித்தால் நீங்கள் தான் மேதாவி.!

  கீழே உள்ள படத்தை நன்றாக உற்றுப்பாருங்கள். இந்த ஓவியமானது 1915ம் ஆண்டு எட்கர் ரூபின் எனற டேனிஷ் உளவியலாளரால் உருவாக்கப்பட்டது. “ரூபின் குவளை” என்று அழைக்கப்படும் இந்த ஆப்டிகல் இல்யூஷனானது உறவில் நம்பிக்கை சிக்கலுடன் இருக்கும் நபர்களை ஆராய பயன்படுகிறது.

  தூண்களை முதலில் பார்த்திருந்தால்:

  மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் முதலில் நீங்கள் ஒரு தூணை பார்த்திருக்கிறீர்கள் என்றால், நீங்கள் எந்தவித தடையும் இல்லாமல் பிறரை முழு மனதாக நம்பக்கூடியவர் என்பது தெளிவாகிறது. நீங்கள் சொற்ப காலம் மட்டுமே ஒரு நபருடன் பழகி இருந்தாலும் அவர்கள் சொல்லும் சொல்லை முழுமையாக நம்புவீர்கள். அவர் எந்த நோக்கத்திற்காக உங்களிடம் பழகினாலும் அவருடைய நல்ல விஷயங்களை மட்டுமே கருத்தில் கொள்வீர்கள். இதற்கு காரணம் உங்களுடைய நேர்மையான குணத்தின் வெளிப்பாடு என மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது நம்மைப் போலவே நம்மைச் சார்ந்தவர்களும் நல்லவர்களாக இருப்பார்கள் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாகும்.

  முதலில் பெண்களைப் பார்த்திருந்தால்:

  உங்கள் கண்கள் தூண்களுக்கு பதிலாக பெண்களை கவனித்திருந்தால், நீங்கள் குருட்டுதனமாக யார் மீதும் நம்பிக்கை வைக்க மாட்டீர்கள் என்பது உறுதியாகிறது. ஒருவர் தகுந்த ஆதாரம் இல்லாமல் வாய்மொழியாக சொல்லும் வார்த்தைகளை எக்காரணம் கொண்டு நம்பக்கூடிய ஆள் நீங்கள் கிடையாது. சொல்லை விட செயலை நம்பக்கூடியவர்.

  எனவே யாரும் உங்களிடம் இன்று செய்துவிடுவேன், இந்த நாள் தந்துவிடுகிறேன் எனச்சொல்லி எந்த காரியத்தையும் சாதிக்க முடியாது. அதேபோல் ஒருவரை நம்பும் முன்பு அவர்களைப் பற்றிய அத்தனை விஷயங்களையும் அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். இப்படி ஒருவரைப் பற்றி ஆழமாக அறிந்து கொண்ட பிறகே, அவரை நம்ப வேண்டும் என நினைக்கும் உங்களுடைய குணம், பொய் மற்றும் வஞ்சகத்தின் பிரதிபலிப்பாக கருதப்படுகிறது.

  இப்போது நீங்கள் முதலில் பார்த்தது எது என்பதை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதையும், மற்றவர்களை நீங்கள் எளிதில் நம்பக்கூடியவரா? என்பதையும் ஒரே முயற்சியில் சோதித்து பார்த்துவிடலாம்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Optical Illusion, Trending, Viral