Home /News /trend /

99 சதவீதம் பேர் தோல்வி... நீங்களாவது இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.!

99 சதவீதம் பேர் தோல்வி... நீங்களாவது இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.!

Trending

Trending

Optical illusion | ஆப்டிகல் இல்யூஷனில் மறைத்திருக்கும் வடிவங்கள், பார்வையாளர்களின் மனதில் குழப்பத்தை உருவாக்கும் வகையில் கொண்டு இருக்கும்.

  சோசியல் மீடியாவை அவ்வப்போது சில விஷயங்கள் ஆட்டிப்படைப்பது உண்டு. குறிப்பாக கடந்த சில மாதங்களாகவே இணையத்தில் ஆப்டிகல் இல்யூஷன் பற்றிய படங்கள் தாறுமாறு வைரலாகி வருகின்றன. மூளையை கசிக்கிப் பிழிந்து, கண்களை நன்றாக உற்றுநோக்கி கண்டுபிடிக்க வேண்டிய புதிர்களைக் கொண்ட ஆப்டிகல் இல்யூஷன்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் கவர்ந்திழுந்து வருகின்றன.

  பொதுவாக சொல்ல வேண்டும் என்றால் ஆப்டிகல் இல்யூஷனில் மறைந்திருக்கும் விஷயத்தை கண்டுபிடிப்பது என்பது வெளியே இருந்து பார்க்க மிகவும் ஜாலியான விஷயம் போல் தெரிந்தாலும், அதற்காக மெனக்கெட்டு நேரத்தையும், மூளையையும் செலவழிக்க வேண்டி வரும். அப்படி உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி மறைக்கப்பட்டுள்ள வடிவம் அல்லது புகைப்படத்தை கண்டுபிடித்துவிட்டால், அதன் மூலம் கிடைக்கும் உற்சாகமும், புத்துணர்ச்சியும் அளவிட முடியதாது. அதனால் தான் இந்த புதிர் விளையாட்டு பலரையும் தன்வசப்படுத்தி வருகிறது.

  ஆப்டிகல் இல்யூஷனில் மறைத்திருக்கும் வடிவங்கள், பார்வையாளர்களின் மனதில் குழப்பத்தை உருவாக்கும் வகையில் பொதுவான வண்ணம் மற்றும் வடிவமைப்பு கொண்டு இருக்கும். இதனால் தான் இந்த புதிர் விளையாட்டு மூளைக்கும், கண்ணுக்குமான உடற்பயிற்சியாக பார்க்கப்படுகிறது.

  குறிப்பாக ஆப்டிகல் இல்யூஷன் இமேஜ் உடன் ஒன்றாக கலந்து வெற்று பார்வைக்கு தெரியாத அளவிற்கு மறைந்திருக்கும் புதிர் உருவத்தை கண்டுபிடிப்பது என்பது மிகவும் சுவாரஸ்யமானது. இன்று அப்படி ஒரு சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷனைத் தான் நாங்கள் உங்களுக்காக கொண்டு வந்திருக்கிறோம். இது நீங்கள் நினைப்பது போல் சாதாரணமானது கிடையாது, இதுவரை இந்த ஆப்டிக்கல் இல்யூஷனை முயற்சித்த 99 சதவீதம் பேர் தோல்வியை மட்டுமே தழுவியுள்ளார்களாம்.

  Also Read : இந்த படத்தில் உள்ள வைர மோதிரத்தை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.!

  பிரைட் சைட் என்ற யூ-டியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த ஆப்டிகல் இல்யூஷனில் காட்டுக்குள் மறைந்திருக்கும் பாம்பை 9 விநாடிகளுக்குகள் கண்டுபிடிக்க வேண்டும் என்பது தான் சவால். இதென்ன பிரமாதம் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் பாம்பு மறைந்திருப்பதோ படத்தில் உள்ள மரத்தின் பரந்து விரிந்து கிடக்கும் வேர்களுக்கு இடையில். என்ன இப்போது ஆட்டம் கொஞ்சம் சூடுபிடிக்கிறதா.?  மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடிக்க வெறும் கண்கள் போதாது, கழுகு கண்களால் உற்றுநோக்க வேண்டும். ஏனெனில் இந்த புதிரில் உள்ள பாம்பை இதுவரை வெறும் ஒரு சதவீதத்தினர் மட்டுமே கண்டறிந்துள்ளனர். எனவே மரத்தின் வேர்களில் ஏதாவது அசைவு தெரிகிறதா? என உற்றுநோக்குங்கள்.

  Also Read : விஷ தோட்டம்.. இந்த கார்டனில் உள்ள எந்த தாவரத்தையும் தொடவோ, நுகரவோ அனுமதியில்லை - ஏன் தெரியுமா.?

  சரி கண்டுபிடிக்க முடியவில்லை எனில் கவலை வேண்டாம், படத்தின் கீழ் வலது பகுதியில் மீண்டும் கவனம் செலுத்துங்கள். ஒரு வேரைச் சுற்றி ஒப்பீட்டளவில் மென்மையான உடலை பார்க்க முடிகிறதா?, படத்தின் மற்ற பகுதிகளிலிருந்து பார்க்கும் போது அது மட்டும் வித்தியாசமாக தெரிகிறதா?. சந்தேகமே வேண்டாம் நீங்கள் பாம்பு உருவத்தை கண்டுபிடித்துவிட்டீர்கள்.  ஆனால் இதுவரை அதனை கண்டுபிடிக்காதவர்களுக்காக நாங்கள் இதோ அது மறைந்திருக்கும் இடத்தை மார்க் செய்த புகைப்படத்தையும் பகிர்கிறோம்.  ஆப்டிக்கல் இல்யூஷன்கள் பொதுவாக, நமது உணர்வில் உள்ள பிழைகளை முன்னிலைப்படுத்துகின்றன. மேலும் அவை நம்மை சுற்றியுள்ள உலகத்தைப் பார்க்க அனுமதிக்கும் மறைக்கப்பட்ட நரம்பியல் செயல்முறைகளில் முக்கியமான பார்வைகளை வழங்குவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
  Published by:Selvi M
  First published:

  Tags: Optical Illusion, Trending

  அடுத்த செய்தி