Home /News /trend /

மாயமில்லை மந்திரமில்லை...உங்க கண்ணுக்கும் 3டி கியூப் தெரிகிறதா?

மாயமில்லை மந்திரமில்லை...உங்க கண்ணுக்கும் 3டி கியூப் தெரிகிறதா?

Optical Illusion | சாதாரணமாக பார்க்கும்போது ஒரே தட்டையாக தென்படும் இந்த மரச் சிற்பமானது, சற்று வேறு கோணத்தில் பார்க்கும்போது, பல கியூப்களை உள்ளடக்கிய வடிவமைப்பு போல காட்சியளிக்கிறது.

Optical Illusion | சாதாரணமாக பார்க்கும்போது ஒரே தட்டையாக தென்படும் இந்த மரச் சிற்பமானது, சற்று வேறு கோணத்தில் பார்க்கும்போது, பல கியூப்களை உள்ளடக்கிய வடிவமைப்பு போல காட்சியளிக்கிறது.

Optical Illusion | சாதாரணமாக பார்க்கும்போது ஒரே தட்டையாக தென்படும் இந்த மரச் சிற்பமானது, சற்று வேறு கோணத்தில் பார்க்கும்போது, பல கியூப்களை உள்ளடக்கிய வடிவமைப்பு போல காட்சியளிக்கிறது.

    அண்மைக்காலங்களில் ஆப்டிக்கல் இல்யூஷன் என்னும் தொழில்நுட்பத்தில் அமையும் வரைபடங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. அதாவது, நம் கண்களால் பார்த்து நாம் புரிந்து கொண்ட ஒரு விஷயம் வெறும் மாயை என்ற தோற்றத்தை இது தருகிறது அல்லது மேலோட்டமாக பார்க்கும்போது ஒருசில வடிவங்களும், அதையே உன்னிப்பாக கவனித்து பார்க்கும்போது வேறுசில வடிவங்களும் கண்களுக்கு தென்படுகின்றன.



    இப்படி நாளுக்கு, நாள் டிரெண்ட் ஆகி வரும் ஆப்டிக்கல் இல்யூஷன் உத்தியைப் பயன்படுத்தி யூ - டியூப் தளத்தில் ‘Sonhos com Dimensao’ என்ற சானலில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் சாதாரண வெள்ளைத் தாளில், நபர் ஒருவர் இங்கும், அங்குமாக கோடுகளை வரைகிறார். அதைப் பார்ப்பதற்கு வெறும் கிறுக்கல் போலவே தோன்றுகிறது. சற்று நேரத்தில் அதே பேப்பரை அவர் சற்று மடித்து எல் வடிவத்தில் காண்பிக்கும்போது, அது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.

    நம் கண்களையே நாம் நம்ப முடியாத அளவுக்கு, அதே பேப்பரில் தத்ரூபமான 3டி கியூப் ஒன்று நம் கண்களுக்கு தெரிகிறது. யூ டியூப் தளத்தில் உள்ள இந்த வீடியோவை Science girl என்னும் டிவிட்டர் பதிவாளர் தனது டிவிட்டர் பேஜில் பகிர்ந்து கொண்ட நிலையில், அது வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது.

    முன்னதாக, சயின்ஸ் கேர்ள் டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், “கண்ணை மூடிக் கொண்டு மேஜிக்கை பாருங்கள்’’ என்று தலைப்பிடப்பட்டிருந்தது. ஒரு வடிவம் உருவாக்கப்பட்ட பின்னர், உங்கள் பார்வையின் கோணத்திற்கு தகுந்தாற்போல அது மற்றொரு உருவமாக மாறுகிறது என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    சாதாரணமாக பார்க்கும்போது எதையோ கிறுக்கியதைப் போல தென்படும் இந்த வரைபடத்தை, சரியாக குறிப்பிட்ட புள்ளியில் இருந்து நாம் பார்க்கும்போது அது சிறந்த வடிவமாக தென்படுகிறது. இந்த வகை உத்தியை அனாமார்போசிஸ் என்று கூறுகின்றனர். இந்த வரைபடம் பார்ப்பதற்கு எளிமையாகத் தோன்றிலும், தன்னுள் பல நேர்த்தியான மாயங்களை அது உள்ளடக்கியுள்ளது.

    மற்றொரு கியூப் மாயை

    யூ டியூப் தளத்தில் அண்மையில் இதேபோன்ற கியூப் மாயையை அடிப்படையாகக் கொண்டு ஆப்டிக்கல் இல்யூஷன் வீடியோ ஒன்றும் அண்மையில் வெளியாக டிரெண்ட் ஆனது. மரத்திலான படைப்பை மைக்கேல் செஷயர் என்பவர் செய்திருந்தார்.

    Read More : இந்த ஓவியத்தில் மறைந்திருக்கும் கரடியை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?


    சாதாரணமாக பார்க்கும்போது ஒரே தட்டையாக தென்படும் இந்த மரச் சிற்பமானது, சற்று வேறு கோணத்தில் பார்க்கும்போது, பல கியூப்களை உள்ளடக்கிய வடிவமைப்பு போல காட்சியளிக்கிறது. இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

    ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் என்பது தற்போது பொழுதுபோக்க உதவிகரமாக இருப்பதுடன், நமது சிந்தனை திறனை மேம்படுத்தவும் உதவிகரமாக இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

     
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Optical Illusion, Trending, Viral

    அடுத்த செய்தி