ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

படத்துல இருக்குற தவளையை கண்டுப்பிடித்தால் உங்க கண்ணு ஷார்ப் தான்...! வைரல் கேம்..!

படத்துல இருக்குற தவளையை கண்டுப்பிடித்தால் உங்க கண்ணு ஷார்ப் தான்...! வைரல் கேம்..!

முடிந்தால் கண்டுப்பிடிங்க..!

முடிந்தால் கண்டுப்பிடிங்க..!

இந்த தவளையை அனைவராலும் எளிதில் கண்டுபிடித்துவிட முடியாது. கூர்மையானக் கண்கள் மற்றும் நல்ல மூளை செயல்திறன் உள்ளவர்களால் மட்டும் கண்டுபிடிக்க முடியும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்றைக்கு இணையப் பயன்பாடு என்பது மக்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரீல்ஸ் வீடியோக்கள், வாட்ஸ்அப் ஸ்டேடடஸ் என பொழுதுப்போக்கு அம்சங்களுக்காக ஒருபுறம் இணையத்தைப் பயன்படுத்தி வந்தாலும் சில நேரங்களில் செய்திகள் பார்ப்பது, போட்டித்தேர்வுகளுக்கான வினாக்களைத் தேடுவது என சில ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கும் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர் நெட்டிசன்கள். இந்நிலையில் தான் கண்களைக் குழப்பி மூளைக்கு வேலை கொடுக்கும் ஆப்டிகல் இல்யூசன் எனப்படும் ஒளியியல் மாயைப் புகைப்படங்கள் இணையத்தில் தனி வரவேற்பைப் பெற்றுள்ளது.

புதிர்போடும் இந்த புகைப்படங்கள் நமது அறிவைச் சோதிக்கும் வகையில் அமைகிறது. 10 வினாடிகள், 1 நிமிடம் என அவர்கள் கொடுக்கும் காலக்கெடுவிற்குள் கண்டுபிடித்துவிட்டால் உங்களின் செயல்திறன் சிறப்பாக உள்ளது என அர்த்தம். இதுப்போன்ற சுவாரஸ்சியமானப் புகைப்படங்களை தமது நண்பர்களுக்கு அனுப்பியும் நெட்டிசன்கள் விளையாடுகின்றனர். இதுப்போன்ற ஒரு புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி நமது சவால் விடும் வகையில் அமைகிறது. அப்படி என்ன? என நாமும் தெரிந்துக்கொள்வோம்.

நீர்நிலைகளுக்குள் ஒளிந்திருக்கும் தவளை..

நீர்நிலைகளைக் கொண்ட பசுமையானக் காட்டில், நீங்கள் ஒரு தவளையைக் கண்டுபிடிக்க வேண்டும் எனவும் அதுவும் 20 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்று சவால் விடுத்துள்ளது. இந்த சவாலுக்கு நீங்கள் ரெடியாகிவிட்டீர்களா? முதலில் உங்களது மொபைல் ஃபோனில் டைமரை செட் செய்து வைத்துக்கொள்ளவும். இப்ப ஸ்டார்ட் பண்ணுங்க இந்த புதிருக்கானப் பதிலைக் கண்டுபிடிக்க முயலுங்கள்.

முதிலில் கொடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களை உற்றுப்பாருங்கள். தவளை பெரும்பாலும் நீர் நிலைக்கு அருகில் தானே இருக்கும். எனவே அந்த கோணத்தில் உங்களின் தேடல்களைத் தொடங்குங்கள். இப்ப கண்டுபிடித்துவிட்டீர்களா? இல்லையென்றால் இனி சிறிது நேரம் எடுத்துக் கொள்ளவும்.

நிச்சயம் கொடுக்கப்பட்டுள்ள 20 வினாடிகளில் உங்களால் தவளையைக் கண்டுபிடிக்க முடியாது. முதல் முயற்சி தோல்வியில் இருந்தாலும், அடுத்த முயற்சியை நீங்கள் மேற்கொள்ளத் தொடங்குங்கள். உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் இதோ உங்களுக்கான டிப்ஸ்கள் இங்கே..

டிப்ஸ்1 : உங்களுக்கு முன்னால் இருக்கும் ஆப்டிகல் இல்யூசன் புகைப்படத்தின் இடது பக்கத்தைப் பார்க்கவும்.

குளத்திற்கு அருகில் உள்ள மரங்களுக்கு அடியில் தேடவும். இப்போதும் கண்டுபிடிக்க முடியவில்லையா? இதோ 2 வது டிப்ஸ்..

டிப்ஸ் 2: நீர் நிலைகள் நிறைந்த காட்டிற்குள் சூரியனின் ஒளி பிரதிபலிக்கும். அந்த மரங்களுக்கு சற்றுக் கீழே, புதர்களுக்கு மத்தியில் தான் தவளை மறைந்திருக்கிறது. இப்ப நிச்சயம் கண்டுபிடித்திருப்பீர்கள்.

இந்த புகைப்படங்களை அனைவராலும் எளிதில் கண்டுபிடித்துவிட முடியாது. கூர்மையானக் கண்கள் மற்றும் நல்ல மூளை செயல்திறன் உள்ளவர்களால் மட்டும் கண்டுபிடிக்க முடியும். நீங்கள் ஒளியியல் மாயைப் புகைப்படத்தில் உள்ள தவளையை 20 வினாடிகளுக்குள் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் நிச்சயம் நீங்களும் அதிபுத்திசாலிகளின் லிஸ்டில் இடம் பெற்றிருப்பீர்கள் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

First published:

Tags: Optical Illusion, Trending, Viral