’கேரளாவில் மட்டுமே சாத்தியம்’! இணையத்தைக் கலக்கும் புகைப்படம்

அந்த படத்துக்கு, ’தென் இந்தியாவின் குரல்’ என்று தலைப்பிட்டு, "இது கேரளாவில் மட்டுமே சாத்தியம். வெவ்வேறு அரசியல் கொள்கையின் காரணமாக நண்பர்களை இழந்துவிடாதீர்கள்’ என்று பதிவிட்டிருந்தனர்.

’கேரளாவில் மட்டுமே சாத்தியம்’! இணையத்தைக் கலக்கும் புகைப்படம்
வைரல் புகைப்படம்
  • News18
  • Last Updated: April 24, 2019, 9:37 PM IST
  • Share this:
காங்கிரஸ், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், பா.ஜ.க ஆகிய கட்சிகளின் கொடிகளை ஏந்திய படி காரில் செல்லும் இளைஞர்களின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் மாறி, மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி கடுமையாக விமர்சனம் செய்து தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்ற கட்சியினருடன் பெரும்பாலும் பகையுணர்வுடனே இருந்துவருகின்றனர். இந்த தேர்தல் காலத்தில் சமூக வலைதளத்தில் ஒரு புகைப்படம் வைரலாகிவருகிறது.


செவ்வாய்க் கிழமையன்று, பேஸ்புக்கில் ஒரு புகைப்படம் பதிவேற்றப்பட்டது. அந்த புகைப்படத்தில் "கதவுகளை திறந்துவிட்டப்படி காரில் செல்லும் இளைஞர்கள் கையில் காங்கிரஸ், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், பா.ஜ.க கட்சிகளின் கொடிகளை ஏந்திச் செல்கின்றனர். அந்த படத்துக்கு, ’தென் இந்தியாவின் குரல்’ என்று தலைப்பிட்டு, "இது கேரளாவில் மட்டுமே சாத்தியம். வெவ்வேறு அரசியல் கொள்கையின் காரணமாக நண்பர்களை இழந்துவிடாதீர்கள்’ என்று பதிவிட்டிருந்தனர்.

அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தை கலக்கிவருகிறது. பலரும் இந்தப் புகைப்படத்தை பகிர்ந்து சிலாகித்துவருகின்றனர். இருப்பினும், அந்தப் புகைப்படம் எங்கே எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. இருப்பினும், காரினுடைய பதிவு எண், கேரளாவைச் சேர்ந்ததாகும்.


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see:

First published: April 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading