ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

இந்த படத்தில் இருக்கும் பறவையை ஜீனியஸ் ஒருவரால் தான் கண்டுபிடிக்க முடியும்! உங்களால் முடியுமா?

இந்த படத்தில் இருக்கும் பறவையை ஜீனியஸ் ஒருவரால் தான் கண்டுபிடிக்க முடியும்! உங்களால் முடியுமா?

இந்த படத்தில் இருக்கும் பறவையை ஜீனியஸ் ஒருவரால் தான் கண்டுபிடிக்க முடியும்

இந்த படத்தில் இருக்கும் பறவையை ஜீனியஸ் ஒருவரால் தான் கண்டுபிடிக்க முடியும்

Optical Illusion | நீங்கள் எவ்வளவு நேரம் தேடினாலும் படத்தில் மறைத்திருக்கும் பறவையைக் கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால் அது மிகவும் தந்திரமாக காட்டின் சூழ்நிலையுடன் ஒத்துப்போயுள்ளது.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  “அடுத்தது என்ன நடக்கப்போகிறது?” என்பது தெரியாமல் இருப்பது தான் நமது வாழ்க்கையை சுவாரஸ்யமானதாக மாற்றுகிறது. அதேபோல் புகைப்படமானாலும் சரி, ஓவியமானாலும் சரி அதற்குள் மறைந்திருப்பது என்ன என்பதை கண்டுபிடிக்க தூண்டும் ஆர்வம் தான், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் ஆப்டிக்கல் இல்யூஷன்களின் அடிமையாக மாற்றியுள்ளது. அதனால் தான் தினந்தோறும் புதிது புதிதாக சவால்கள் விடுக்கப்பட்டாலும், அதனை சுவாரஸ்யம் குறையாமல் தீர்க்க நெட்டிசன்கள் காத்துக்கிடக்கின்றனர்.

  அதுமட்டுமின்றி ஒளியியல் மாயை எனப்படும் ஆப்டிக்கல் இல்யூஷன்களில் மறைந்திருக்கும் விஷயத்தை சரியாக கண்டுபிடிப்பது என்பது, நீங்கள் அந்த போட்டோவை எப்படி பார்க்கிறீர்கள், உணருகிறீர்கள், எவ்வாறு கணிக்கிறீர்கள் என்ற பல வகையான விஷயங்களை அடிப்படையாக கொண்டது. இது நபருக்கு நபர் மாறுபடும், இந்த அவதானிப்பு திறன்கள் நமக்கு சின்ன சின்ன வேலைகளில் கூட, சிறப்பான முடிவுகளை எடுக்க உதவுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

  இன்று நாங்கள் கொண்டு வந்துள்ள ஆப்டிக்கல் இல்யூஷனானது, உங்கள் கண்முன் காண்பிக்கப்படும் படத்தை நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள், உங்களுடைய கண்காணிப்புத் திறன் எந்த அளவிற்கு உள்ளது என்பதை சோதித்து பார்க்க உதவுகிறது. எனவே மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தை நன்றாக உற்றுப்பார்த்து விட்டு, சவாலை ஏற்க தயாராகுங்கள். நீங்கள் பார்க்கும் புகைப்படத்தில் பச்சைப்பசேல் என செழிப்பாக இருக்கும் காடு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் மறைந்துள்ள பறவையை கண்டுபிடிக்க வேண்டும் என்பது தான் இன்று உங்களுக்கான சவாலாகும்.

  இதற்கு முன்னதாக மறைந்திருக்கும் பாம்பு, நாய், கரடி போன்ற பல உருவங்களை கண்டுபிடித்ததை விட, இப்போது நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் ஆப்டிக்கல் இல்யூஷனுக்கான புதிரைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமானதாகும். ஏனெனில் உயரமான அடர்ந்த மரங்கள் நிறைந்த காட்டுக்கு நடுவே சிறிய பறவை ஒன்றினை கண்டுபிடிப்பது என்பது மிகவும் சவாலனது என்றும், அதனை மேலோட்டமாக பார்த்தால் அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது என்றும் இந்த மாயை உருவாக்கியவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இவ்வளவு விஷயங்களையும் அறிந்த பிறகும் நீங்கள் இந்த புதிரைக் கண்டுபிடிக்க ஆர்வமாக இருந்தால் அடுத்த சவாலையும் தெரிந்து கொண்டு களத்தில் குதியுங்கள். ஆம், மிகவும் தந்திரமான இந்த புதிரை நீங்கள் வெறும் 5 விநாடிகளுக்குள் கண்டறிய வேண்டும். இது உங்களுக்கு ஓ.கே. என்றால், மேலேயுள்ள ஆப்டிக்கல் இல்யூஷன் படத்தை நன்றாக உற்றுப்பாருங்கள். நீங்கள் எவ்வளவு நேரம் தேடினாலும் படத்தில் மறைத்திருக்கும் பறவையைக் கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால் அது மிகவும் தந்திரமாக காட்டின் சூழ்நிலையுடன் ஒத்துப்போயுள்ளது.

  Also Read : கால் வலிக்காக ஹாஸ்பிட்டல் போன பெண்ணுக்கு 48 மணி நேரத்தில் குழந்தை பிறந்த வினோதம்

  1...2...3....4...5... அவ்வளவு தான் உங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டது. விடையைக் கண்டுபிடித்தவர்கள் நீங்களே உங்கள் தோளைத் தட்டி ஒரு ‘சபாஷ்’ [போட்டுக்கொள்ளுங்கள். இது உங்கள் கண்ணின் கூர்மையும், மூளையின் கண்காணிப்பு திறனும் அவ்வளவு ஸ்ட்ராங்காக உள்ளதை காட்டுகிறது. இதுவரை விடையைக் கண்டுபிடிக்காதவர்களுக்கு நாங்களே விடையைக் கண்டறிய உதவுகிறோம். இப்போது நடுவில் உள்ள மரத்தின் உச்சியை உன்னிப்பாகப் பாருங்கள், மரத்தின் கிளைகளில் ஒன்றில் நீல நிறப் பறவை அமர்ந்திருப்பதை எளிதாகக் காணலாம்.

  இப்போது உங்களுக்கு தெரிந்து விட்டதா மரத்தில் அமர்ந்திருக்கும் பறவையின் உருவம். கண்பார்வை கூர்மையாக இருந்தால் போதும் இதுப்போன்ற புதிர்களை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Optical Illusion, Trends, Viral